Thursday , November 21 2024
Home / குமார் (page 14)

குமார்

நியூசிலாந்து பாராளுமன்றத்துக்கு 2 பெண்கள் உள்பட 3 இந்தியர்கள் தேர்வு

119 இடங்களை கொண்டுள்ள நியூசிலாந்து நாட்டின் பாராளுமன்றத்துக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. உடனடியாக ஓட்டு எண்ணிக்கையும் முடிந்து விட்டது. இந்த தேர்தலில் எந்தக்கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆட்சி அமைப்பதற்கு 61 இடங்கள் தேவை என்ற நிலையில், 3 முறை அரசு அமைத்த தேசியக்கட்சி 58 இடங்களை பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவாகி உள்ளது. இந்த தேர்தலில், டாக்டர் பரம்ஜீத் பார்மர், பிரியங்கா ராதாகிருஷ்ணன் ஆகிய 2 பெண்கள் உள்பட …

Read More »

உலகின் மிக அதிகமான எடை கொண்ட எகிப்து பெண் எமான் அகமது அபுதாபியில் மரணம்

அபுதாபி மருத்துவமனையில் தன்னுடைய 37-வது பிறந்த நாளை கொண்டாடி ஒருவாரங்களுக்கு பின்னர் எமான் அகமது உயிரிழந்தார். எகிப்து நாட்டில் உள்ள கெய்ரோ பகுதியை சேர்ந்த பெண் எமான் அகமது (வயது36). இவர் தனது 11 வயதில் பக்கவாத நோயாலும், உடல் பருமனாலும் படுத்த படுக்கையானார். மேலும் யானைக்கால் நோய் மற்றும் உடலில் சுரப்பிகள் சுரக்காததால் மிகவும் குண்டானார். சுமார் 25 ஆண்டுகள் கழிந்த நிலையில் எமான் அகமதுவின் எடை 504 …

Read More »

ஜெயலலிதா சிகிச்சையின் போது மருத்துவமனையில் நடந்தது என்ன? – அண்ணன் மகன் தீபக் பரபரப்பு பேட்டி

முதல் – அமைச்சராக இருந்த ஜெயலலிதாவுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ந்தேதி திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை ஆயிரம்விளக்கில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் டிசம்பர் மாதம் 5-ந்தேதி உயிரிழந்தார். அப்பல்லோ ஆஸ்பத்திரியில் 72 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா எப்படியும் உயிர் பிழைத்து திரும்பி விடுவார் என்றே அ.தி.மு.க.வினரும் தமிழக மக்களும் எதிர்பார்த்து காத்திருந்தனர். அதற்கு ஏற்ற …

Read More »

ஜெயலலிதா மரணத்தில் சசிகலா மீது சந்தேகம் என்பது ஒரு அணு அளவு கூட இல்லை – அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேட்டி

அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஒரு தனியார் டி.வி.க்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மேலூர் கூட்டத்தில் தினகரன் பேசும் போது ஜெயலலிதா மரணத்தில் விசாரணை கமி‌ஷன் அமைக்க வேண்டும் என்றார். அதன்பிறகு தான் விசாரணை கமி‌ஷன் அமைக்கப்பட்டது. ஜெயலலிதாவின் ஜீவனுக்கு என்ன நடந்தது என்பது எங்களுக்கு தெரியும். ஜெயலலிதா மரணத்தில் சர்ச்சைகள்தான் இருக்கிறதே தவிர அது உண்மை கிடையாது. புரட்சித் தலைவி ஜெயலலிதா ஒரு முதல்-அமைச்சர். சிகிச்சை பெற்ற இடம் …

Read More »

சிகிச்சை பெற்ற போது ஜெயலலிதா நைட்டி உடையில் இருந்ததால் வீடியோவை வெளியிடவில்லை – டிடிவி தினகரன்

தமிழக முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ந் தேதி உடல்நல குறைவால் சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி டிசம்பர் மாதம் 5-ந் தேதி மரணம் அடைந்தார்.அவர் மரணம் அடைந்து 10 மாதங்கள் ஆகியும், இன்னும் அவரது மரணத்திற்கான காரணம் குறித்த மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்படாமலேயே இருக்கின்றன. அவரது மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். …

Read More »

அடிப்படை உறுப்பினராகவே இல்லாத ஒருவர் பொதுக்குழுவைக் கூட்ட முடியாது – அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை பட்டினப்பாக்கத்தில் அமைச்சர் ஜெயக்குமார் இன்று நிருபர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பொதுக்குழுவை கூட்டுவேன் என தினகரன் கூறுவது வேடிக்கையாக உள்ளது. அடிப்படை உறுப்பினராகவே இல்லாத ஒருவர் பொதுக்குழுவைக் கூட்ட முடியாது அரசியலை, சினிமா போல நினைக்கிறார் கமல்ஹாசன். டிவிட்டரில் மட்டும் இருந்தால் முதலமைச்சராக முடியாது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை ஆணைய தலைவர் விரைவில் நியமிக்கப்படுவார். ஜெயலலிதா மரணத்தில் தப்பு செய்தவர்கள் தப்பிக்க முடியாது. அரசோடு …

Read More »

திருச்சி வருமான வரி அலுவலகத்தில் செந்தில்பாலாஜியின் நண்பர் – நிதி நிறுவன ஊழியர்கள் நேரில் ஆஜர்

கரூர் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர்கள், ஆதரவாளர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகள், அலுவலகங்கள், ஜவுளி, நிதி நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 21-ந்தேதி முதல் முகாமிட்டு தொடர்ந்து 4 நாட்கள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் செந்தில் பாலாஜியின் தீவிர ஆதரவாளரான தாரணி சரவணனுக்கு சொந்தமான நிதி நிறுவனத்தை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். பல கோடி மதிப்பிலான பினாமி சொத்து குறித்த ஆவணங்கள், ரொக்கப்பணம், …

Read More »

அ.தி.மு.க.வில் கருத்து வேறுபாடு நீங்கி விட்டது. இரட்டை இலை சின்னம் விரைவில் மீட்கப்படும் – அமைச்சர் ஆர்.பி. உதயகுமா

மதுரை வண்டியூரில் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்டச் செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசியதாவது:- அ.தி.மு.க.வில் இரு அணிகளும் கருத்து வேறுபாடுகளை அகற்றி இணைந்து விட்டது. இதனால் சீரான ஆட்சி தமிழகத்தில் நடந்து வருகிறது. இதனை சீர்குலைக்கும் நோக்கத்தில் தி.மு.க.வினர் பல்வேறு சதித்திட்டங்களை தீட்டி வருகிறார்கள். மக்களிடம் பொய்களை பரப்பி வருகிறார்கள். மேலும் பாரதிய …

Read More »

வட கொரியா ஆடைகளை வாங்க முற்றிலுமாக தடை – சீனா அதிரடி அறிவிப்பு

வட கொரியா சமீபத்தில் 6-வது அணு ஆயுத பரிசோதனை செய்ததை தொடர்ந்து அமெரிக்கா அந்நாட்டின் மீது புதிய பொருளாதார தடையை விதித்தது. அமெரிக்காவை தொடர்ந்து தற்போது சீனாவும் வட கொரியா மீது பொருளாதார தடையை விதித்துள்ளது. இதன் அடிப்படையில், வட கொரியா நாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் கச்சா எண்ணெய்யின் அளவை குறைப்பதுடன், வட கொரியா உற்பத்தி செய்யும் ஆடைகளை வாங்க முற்றிலுமாக தடை விதிப்பதாக சீனா அறிவித்துள்ளது. வட கொரியா …

Read More »

துருக்கி: கருங்கடலில் அகதிகள் சென்ற படகு விபத்து – 15 பேர் பலி

உள்நாட்டுப்போரில் பாதிக்கப்பட்டு ரோமானியாவை நோக்கி அகதிகள் சென்ற படகானது கருங்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள சிரியா, ஈராக், ஏமன் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஐரோப்பிய நாடுகளில் புகலிடம் தேடி ஆபத்தான முறையில் படகுகளில் பயணம் செய்கின்றனர். இதனால், மத்தியதரைக் கடல், கருங்கடல் பகுதிகளில் படகுகள் மூழ்கி அகதிகள் பலியாவது தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில், துருக்கி அருகே கருங்கடலில் அகதிகள் சென்ற …

Read More »