Tuesday , October 14 2025
Home / தமிழவன் (page 99)

தமிழவன்

கொட்டும் மழையின் மத்தியிலும் அலையெனத் திரண்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய யாழ் பல்கலை சமூகம்!!

யாழ். பல்கலைக்கழகத்தில் கொட்டும் மழைக்கு மத்தியிலும் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.மாவீரர்களின் எழுச்சி கீதங்கள் இசைக்க, பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள் இணைந்து மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள மாவீரர்களுக்கான நினைவிடத்தில் இந்த அஞ்சலி நிகழ்வுகள் இன்று காலை நடத்தப்பட்டுள்ளன. இதன்போது தமிழ் மக்களின் விடுதலைக்காக களமாடி உயிர் நீத்த மாவீரர்களுக்கு இரண்டு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக மாணவ, மாணவிகள், விரிவுரையாளர்கள், ஆசிரியர் சங்கத்தினர், ஊழியர்கள் எனப் …

Read More »

கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தின் முன்பாக மாவீரர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி!

யாழ். கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தின் முன்பாக தமிழீழ மாவீரர்களுக்கும், தேச விடுதலைப் போரில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.வட மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் ஆகியோர் இன்று காலை குறித்த இடத்திற்கு சென்று சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர். கடுமையான பாதுகாப்புடன் இருக்கும் கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக இந்த அஞ்சலி நிகழ்வு இன்று காலை 11.40 மணிக்கு நடைபெற்றுள்ளது.இதன்போது கோப்பாய் …

Read More »

போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களால் தொழில் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது!

வட மகாண சபையின் 2017 ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் இருந்து மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல் அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களால், போரினால் பாதிக்கப்பட்ட பெண்தலைமைத்துவ குடும்பங்கள் உள்ளிட்ட 9 பயனாளிகளுக்கான வாழ்வாதார உதவியாக 3.5 லட்சம் ரூபா பெறுமதியான தொழில் உபகரனங்கள் வழங்கப்பட்டுள்ளது. வட மாகாண தொழிற்துறைத் திணைக்களத்தின் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட தொழில் உபகரனங்கள் வழங்கும் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் மகளிர் விவகார …

Read More »

சுற்றுச்சூழல் மீது அக்கறை கொண்டவராக தலைவர் பிரபாகரன் மட்டுமே இருந்தார்!

பிரபாகரன் அவர்களை ஒரு ஆயுதப் போராட்டத் தலைவராகவே வெளியுலகம் அறிந்து வைத்திருக்கிறது. அவரைப்பற்றி அறியப்படாத பல பக்கங்கள் உள்ளன. அதில் சுற்றுச்சூழல் குறித்த அவரது அக்கறையும் ஒன்று. உலக சூழல்தினத்துக்காகத் தங்கள் மாணவர் தினத்தையே மாற்றி அமைத்தவர் அவர். நான் அறிந்த ஆயுதப் போராட்டத் தலைமைகளில் சுற்றுச்சூழல் மீது இப்படி அக்கறை கொண்ட ஒரு தலைவராகப் பிரபாகரன் மட்டுமே இருந்தார் என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும் முன்னாள் விவசாய …

Read More »

யேர்மன் தலைநகரில் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் அகவை 63 நிகழ்வு.

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் அகவை 63 தாயகத்திலும், தமிழகத்திலும், புலம்பெயர் தேசமெங்கிலும் எழுச்சியாக கொண்டாடப்படுகின்றது. அந்தவகையில் யேர்மன் தலைநகரில் வரலாற்றுமிக்க சதுக்கத்தில் ( Brandenburger Tor முன்பாக ) தமிழ் இளையோர்கள் , தமிழின உணர்வாளர்கள் கேக்(குதப்பி) வெட்டியும், மற்றவர்களுடன் வாழ்த்துக்களையும், இனிப்புக்களையும் பகிர்ந்து தமது மகிழ்ச்சியை ஆரவாரமாகக் கொண்டாடினர். தமிழீழத் தேசியத் தலைவரின் அகவை 63 எழுச்சியாகவும், எளிமையாகவும் கொண்டாடப்பட்டதுடன் நிகழ்வில் தமிழீழத் …

Read More »

சம்பந்தனைவிட தானே தமிழ்மக்களின் சேவகன் என்கிறார் கோட்டபாய!

தற்போதைய எதிரக்கட்சித் தலைவரிலும் பார்க்க தாம் தமிழ் மக்களுக்கு சேவையாற்றியுள்ளதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார். எளிய என்ற அமைப்பு இனவாத அமைப்பென அண்மையில் எதிரக்கட்சித் தலைவர் சம்பந்தன் கருத்து வெளியிட்டிருந்தார். அவர் நேர்மையான மற்றும் அனுபவம் வாய்ந்த அரசியல்வாதியாக அறியப்படுபவர். கடந்த காலத்தில் இடம்பெற்ற பிரிவினைவாத யுத்த சூழல் காரணமாக அவரால் தமிழ் மக்களுக்கென எதனையும் …

Read More »

பாலி தீவு அகங் எரிமலை குமுறல் 50 விமான சேவைகள் இரத்து

பாலி தீவிலுள்ள அகங் எரிமலைக் குமுறல் காரணமாக 50 விமான சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. இந்தோனேசியாவின் பாலி தீவிலுள்ள அகங் எரிமலைக் குமுறல் காரணமாக அபாய வலையம் விஸ்தரிக்கப்பட்டுள்ளது. கடந்த 22 ஆம் திகதி குறித்த எரிமலையிலிருந்து புகை வெளியேற ஆரம்பித்தது. அதைத் தொடர்ந்து எரிமலையைச் சுற்றியுள்ள பகுதிகளிலுள்ள 150,000 பேர் வெளியேற்றப்பட்டனர். தற்போது எரிமலை எந்த நேரமும் வெடிக்கும் அபாயம் காணப்படுவதாகவும் அபாய வலையம் விஸ்தரிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நாட்டு …

Read More »

மழைக் காலநிலை தொடரும்

வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக இன்றும் நாட்டின் பல பகுதிகளில் மழையுடன் கூடிய காலநிலை நிலவும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. விசேடமாக மேல், தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் 75 மில்லி மீட்டர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடைக்கிடையில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

Read More »

அர்ப்பணிப்புள்ளவர்களுக்கு வாக்களிக்குமாறு சந்திரிக்கா கோரிக்கை

கட்சி பேதங்கள் பாராது நாட்டுக்காக பணிபுரியக்கூடியவர்களுக்கு எதிர்வரும் தேர்தலில் வாக்களிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார். வேயங்கொடையில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் அவர் இதனை தெரவித்தார். கட்சியில் தவறிழைத்தவர்களை நீக்கிவிட்டு புதியவர்களை இணைத்துக்கொண்டே நாட்டை முன்னோக்கிக் கொண்டுச் செல்ல வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கட்சிக்காகவன்றி நாட்டுக்காக முன்னிலையாகும் எவருக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார். தேசத்திற்காக தொலைநோக்குடன் செயற்படக் கூடிய அரசியல் தலைவர்கள் உருவாக்கப்பட வேண்டும் …

Read More »

ஜனாதிபதி நாளை கொரியக் குடியரசுக்கு விஜயம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை செவ்வாய்க்கிழமை கொரியக் குடியரசுக்கான மூன்று நாட்கள் உத்தியேபகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இலங்கைக்கும் கொரிய குடியரசிற்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 40 வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு கொரிய ஜனாதிபதி முன் ஜே இன்னின் அழைப்பிற்கு அமைய, இந்த விஜயம் இடம்பெறுகிறது. இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை நாளை மறுதினம் புதன்கிழமை இடம்பெறவுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையில் நல்லுறவை மேம்படுத்துவற்காக தலைவர்கள் விரிவாக பேச்சுவார்த்தை …

Read More »