வெளிநாடுகளில் நடக்கும் போட்டிகளுக்கு பயிற்சி எடுக்க போதுமான கால அவகாசம் இல்லை என கோலி கூறியது சரிதான் இருந்தாலும் அது ஒரு கிரிக்கெட் வீரருக்கு சவால்தான் என தோனி கூறியுள்ளார். இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்த தொடர் முடிந்ததும் அடுத்த இரண்டு நாட்களில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 6 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. …
Read More »யாழ். பல்கலை வவுனியா வளாக கல்விச் செயற்பாடுகள் இடைநிறுத்தம்
யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் காலவரையறையின்றி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாக முதல்வர் த.மங்களேஸ்வரன் தெரிவித்தார். பிரயோக விஞ்ஞான பீட மாணவர்களுக்கிடையில் நேற்றிரவு இடம்பெற்ற மோதலைத் தொடர்ந்து கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, நாளை காலை 8 மணிக்கு முன்னர் மாணவர்களை விடுதிகளில் இருந்து வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. மோதல் தொடர்பிலான விசாரணைகள் நாளை ஆரம்பிக்கப்படும் என யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாக முதல்வர் …
Read More »பல்லாயிரம் உறவுகள் திரண்டு துயிலுமில்லங்களில் சுடரேற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி
தாயகத்தில் மாவீரர் துயிலுமில்லங்களில் உணர்வெழுச்சியுடன் இன்று மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்பட்டது. மாவீரர்களின் பெற்றோர்கள் மட்டுமன்றி விடுதலை வேட்கை கொண்ட பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டு மாவீரச் செல்வங்களுக்கு மலர் தூவி சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர். தாயகத்தில் முக்கியமான துயிலுமில்லங்கள் அனைத்திலும் மாவீரர்களின் பெற்றோர் பொதுச்சுடரேற்றி வணக்கம் செலுத்தினர். முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லம் – பிரதான சுடரினை மேஜர் பசீலனின் தாயார் ஏற்றிவைத்தார். உடுத்துறை மாவீரர் துயிலுமில்லம் – பிரதான சுடரினை நான்கு …
Read More »யாழில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சிறுவனின் மரணத்தில் மர்மம்
மானிப்பாய் சங்கம்வேலி பகுதியில் அமைந்துள்ள கிணற்றிலிருந்து சிறுவன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சடலம் நேற்றைய தினம் மீட்கப்பட்டதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். 3 வயதுடைய சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நீண்ட நேரமாக சிறுவனை காணாமல் தேடிக்கொண்டிருந்த பெற்றோர் கிணற்றை பரிசோதித்த போது சிறுவன் கிணற்றிற்குள் சடலமாக மிதப்பதனை கண்டறிந்துள்ளனர். இந்நிலையில், காவல் துறையினருக்கு அறிவித்ததன் பின்னர் சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. எனினும் குறித்த கிணற்றினை சுற்றி …
Read More »ஆவா கும்பலின் மேலும் இரு உறுப்பினர்கள் கைது
குற்றச்செயல் ஒன்றிற்காக வாள் ஏந்தியவாறு மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆவா கும்பலின் இரு உறுப்பினர்கள் இன்று அதிகாலை சாவகச்சேரி பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்யும் வேளையில் குறித்த நபர்கள் வைத்திருந்த வாள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த சந்தேக நபர்கள் சாவகச்சேரி பகுதியை சேர்ந்த 21, 22 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் இன்று சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் …
Read More »வீரவணக்கத்துக்கு தயாராகியுள்ள மாவீரர் துயிலுமில்லங்கள்
தாயகமெங்கும் தமிழ் மக்கள் திரண்டெழுந்து மாவீரச் செல்வங்களுக்கு வீரவணக்கம் செலுத்த தயாராகியுள்ளனர். இராணுவத்தினரின் பிடியிலுள்ள மாவீரர் துயிலுமில்லங்கள் தவிர்ந்த ஏனைய துயிலுமில்லங்கள் அலங்கரிக்கப்பட்டு வீரவணக்கம் செலுத்துவதற்குத் தயாராகியுள்ளன. கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலுமில்லம் இரணைப்பாலை மாவீரர் துயிலுமில்லம் முள்ளிவாய்க்கால் மாவீரர் துயிலுமில்லம் சாட்டி மாவீரர் துயிலுமில்லம் கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம்
Read More »டக்ளஸ் தேவானந்தா தற்போது பாவமன்னிப்புக் கோரிவருகிறார்!
கடந்த அரசாங்கத் தரப்பினருடன் இணைந்து கொண்டு மக்களின் உணர்வுகளை மதிக்காது தேன்நிலவு கொண்டாடிய நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா, தற்போது பாவமன்னிப்புக் கோரிவருவதாக வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். அவரின் பாவங்களை மன்னிக்க வேண்டுமா, இல்லையா? என்பது தொடர்பாக பொது மக்களே தீர்மானிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 63 ஆவது பிறந்த நாள் நிகழ்வு, வல்வெட்டித்துறையில் உள்ள …
Read More »வாகன விபத்தில் இருவர் பலி
யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியின் சாவகச்சேரி பூனாவில் பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தொன்றில் இருவர் பலியாகியுள்ளனர். மோட்டார் சைக்கிள் ஒன்றும் பஸ் வண்டி ஒன்றும் மோதியதால் குறித்த விபத்து நிகழ்ந்துள்ளதாகவும் விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளதாகவும் சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களின் கவனயீனமே குறித்த விபத்துக்கு காரணம் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை, சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பஸ் வண்டியின் சாரதி …
Read More »ராஜபக்ஷக்கள் மீண்டும் அதிகாரத்தை கைப்பற்ற வாய்ப்பு- சரத்
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இரண்டாக பிளவுபடுவதனால் மகிழ்ச்சியடைய முடியாது. எதிரணியில் பலவீனமாக உள்ள நபர்கள் அடுத்த 10 ஆண்டுகளில் மீண்டும் ஆட்சியை பிடிக்க வாய்ப்புள்ளதாக ஐக்கிய தேசிய முன்னணியின் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். நாம் தனித்து ஆட்சியமைக்கும் வியூகங்களை வகுக்க வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். குருநாகல் பிரதேசத்தல் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
Read More »தமிழ்மக்கள் ஒன்றுபட்டு ஒன்றுமையினை வெளிக்காட்ட வேண்டிய காலம் வந்துவிட்டது-இரா.சம்பந்தன்
தமிழ்மக்கள் ஒன்றுபட்டு நின்று மீண்டும் ஒருமுறை தமது ஒற்றுமையினை வெளிக்காட்டவேண்டிய காலகட்டமாக இன்று உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். இந்த நாடு கடன்சுமையில் இருந்துவிடுபட்டு பொருளாதார ரீதியில் முன்னேற்றம்பெறவேண்டுமானல் இந்த நாட்டில் இனப்பிரச்சினை தீர்க்கப்படவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். மட்டக்களப்பில் அரசியல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு சனிக்கிழமை மாலை நடைபெற்றது. மட்டக்களப்பு தாண்டவன்வெளி, பேர்டினன்ட் மண்டபத்தில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு …
Read More »