Wednesday , October 15 2025
Home / தமிழவன் (page 96)

தமிழவன்

விபத்தில் சிக்கிய ஆறுபிள்ளைகளின் தாய் பரிதாப மரணம்! மட்டக்களப்பில் சம்பவம்!

மட்டக்களப்பு ஓட்டமாவடி பாலத்துக்கு அருகாமையில் இன்று மதியம் 1.15 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். தியாவட்டவான் மையவாடி வீதியில் வசிக்கும் ஆறு பிள்ளைகளின் தயாரான றலீனா (வயது 35) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சுகயீனம் காரணமாக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் இருந்து மருந்து பெற்றுக்கொண்டு தனது வசிப்பிடமான தியாவட்டவான் பிரதேசத்தை நோக்கி, கணவருடன் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போதே, இவர் விபத்தக்கு உள்ளாகியுள்ளார். காத்தான்குடியில் இருந்து பொலனறுவைக்கு கொண்டு …

Read More »

த. கூட்டமைப்பு விடுதலைப்புலிகளால் உருவாக்கப்படவில்லை என்கிறார் வரதராஜப் பெருமாள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தமிழீழ விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்டது என்பது தவறான கருத்து, தங்களது முயற்சியால் உருவானது என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் பலதடவைகள் சொல்லியிருக்கின்றார். என்று வரதராஜப் பெருமாள் தெரிவித்துள்ளார். வரதராஜப் பெருமாள் தலைமையிலான குழுவினர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைவது தொடர்பாக செய்திகள் வெளிவந்த நிலையில் அரசாங்கத் தமிழ் பத்திரிகைக்கு வரதராஜப்பெருமாள் அவர்கள் வழங்கிய செவ்வி ஒன்றிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். ஈபிஆர்எல்எவ் பிளவு தொடர்பாக கருத்துத் …

Read More »

ஆசிரியர் திட்டியதால் 12ம் வகுப்பு மாணவன் தற்கொலை – கோவையில் அதிர்ச்சி

ஆசிரியர் திட்டி காரணத்தில் அரக்கோணத்தை சேர்ந்த 4 பள்ளி மாணவிகள் சமீபத்தில் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுத்த கலெக்டர் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுத்துள்ளார். இந்நிலையில், கோவை மாவட்டம் சோமனூரில் 12ம் வகுப்பு படித்து வரும் அருள்செல்வன் என்ற மாணவரை, வேதியியல் ஆசிரியை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அவமானம் அடைந்த அருள்செல்வன், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, அவரின் …

Read More »

கொழும்பை சுற்றிவளைப்போம்!

லசந்த, தாஜுதீன் கொலை வழக்கு

மஹிந்த ராஜபக்ஷவுடன் ஒட்டிக்கொண்டு தமது இருப்பை தக்கவைக்கும் முயற்சிகளையே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுத்து வருகின்றார். தேர்தலை பிற்போடுவதன் முழுப்பொறுப்பையும் ஜனாதிபதியே ஏற்றுகொள்ள வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக தெரிவித்தார். இந்த வாரத்தினுள் தேர்தல் குறித்து அரசாங்கம் மௌனம் கலைக்காவிட்டால் நாடு பூராகவும் மக்களை ஒன்றுதிரட்டி கொழும்பை சுற்றிவளைப்போம் எனவும் அவர் குறிப்பிட்டார். மக்கள் விடுதலை முன்னணியின் செய்தியாளர் சந்திப்பு இன்று கட்சி அலுவலகத்தில் …

Read More »

ஒப்பந்தத்தை மறுத்தமையே இந்தியாவுடனான போருக்கு காரணம்!- த ஹிந்து

1987 ம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் மறுத்தமை இந்தியாவிற்கும் புலிகளுக்கும் இடையிலான ஒரு போருக்கு வழிவகுத்ததாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் அப்போதைய தமிழக முதலமைச்சர் எம்.ஜி. ராமச்சந்திரன் பிரபாகரனுக்கு உறுதியான ஆதரவு வழங்கியதாக ஆயுதக் குழு கூறியிருந்தது. ​சென்னை வி.ஓ.சி. நூலகத்தினால் விடுதலைப் புலிகளுடன் சம்பந்தப்பட்ட பல ஆவணங்கள் மற்றும் பிரகாகரனின் வரலாறு அடங்கிய புத்தகம் ஒன்று விரைவில் வௌியிடப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக திரட்டப்பட்ட ஆவணங்களில் …

Read More »

கோட்டாபய குற்றம் செய்யவில்லை சொல்கிறார் சரத் அமுணுகம

இரகசிய இராணுவக் கொலைக் குழுவை

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் எந்தவொரு நிதி மோசடியுடனும் தொடர்புடையவர் அல்ல என, அமைச்சர் சரத் அமுணுகம தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். முன்னாள் பாதுகாப்புச் செயலாளரைக் கைதுசெய்யத் தயாராகி வருவதாக நாட்டில் வதந்திகள் பரவிவருவதாக குறிப்பிட்ட அவர் அதுபோன்ற எந்தவொரு நடவடிக்கையும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், கோட்டாபய ராஜபக்ஷவைக் கைதுசெய்ய எந்தவொரு காரணமும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Read More »

வடக்கில் அரச பேருந்து இயக்குனர்கள் வேலை நிறுத்தம்

அரச பேருந்து சேவைகள் அனைத்தும் வடக்கு மாகாணத்தில் இன்று காலை தொடக்கம் ஸதம்பிதம் அடைந்துள்ளன. இதனால் பொதுமக்கள், மாணவர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர். இலங்கை போக்குவரத்துச் சபையின் வட பிராந்திய ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையை இன்று காலை முதல் ஆரம்பித்தனர். வட பிராந்திய பிரதான முகாமையாளர் உபாலி கிரிவத்துடுவ மற்றும் பாதுகாப்பு அதிகாரி ஆகியோரை வடக்கிலிருந்து உடன் இடமாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. …

Read More »

தமிழகத்தில் இருந்து சட்டவிரோதமாக தாயகம் திரும்பிய ஈழ அகதிகள்

தமிழகத்தின் தூத்துக்குடி அகதிகள் முகாமைச் சேர்ந்த ஒன்பது பேர் இராமேசுவரத்தில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு தப்பிச்சென்றது திங்கள்கிழமை தெரியவந்துள்ளது. இதுகுறித்து உளவுத் துறை அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் உள்ள பல்வேறு முகாம்களில் இலங்கைத் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த முகாம்களில் உள்ள சிலர் தங்களது உறவினர்களைப் பார்க்க இராமேசுவரத்தில் இருந்து படகுகள் மூலம் இலங்கைக்கு சென்று விடுகின்றனர். இந்தநிலையில், தூத்துக்குடி மாவட்டம் தாப்பாத்தி இலங்கை தமிழர்கள் முகாமில் …

Read More »

பிரபாகரனின் புகைப்படங்களை பயன்படுத்தியவர்களை கைதுசெய்ய நடவடிக்கை

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படங்களை பயன்படுத்தி, மாவீரர் தினத்தை அனுஷ்டித்தவர்களைக் கைதுசெய்வது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவர் விஜேவர்த்தன குறிப்பிட்டுள்ளார். இதுபோன்ற செயற்பாடுகள் சட்டவிரோதமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், தீவிரவாத விசாரணைப் பிரிவினரால் குறித்த நபர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ருவன் விஜேவர்த்தன மேலும் தெரிவித்துள்ளார். கம்பஹா பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வௌியிட்ட போதே …

Read More »

தென்கொரியா சென்றடைந்தார் மைத்திரி

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை தென்கொரியாவின் தலைநகர் சியோல் நகரை சென்றடைந்தார். தென்கொரியா நாட்டு ஜனாதிபதி மூன்ஜேனின் அழைப்பை ஏற்று மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதியை அந்நாட்டு உதவி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் Cho Hyun தலைமையில் இன்சிஜோன் சர்வதேச விமானநிலையத்தில் ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பு வழங்கப்பட்டது. ஜனாதிபதிக்கு உத்தியோகபூர்வ வரவேற்பு இன்று இடம்பெறவுள்ளது. இதனை தொடர்ந்து இரு நாட்டு தலைவர்களுக்கும் இடையில் இருதரப்பு …

Read More »