உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி கொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி கேரளாவில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரபல வழக்கறிஞரும், மாநிலங்களவை உறுப்பினருமான ராம் ஜெத்மலானிக்கு (94) இன்று உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து மதியம் 12.45 மணிக்கு கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Read More »இந்திய மீனவர்கள் 12 பேர் கைது!
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுப்பட்டு வந்த இந்திய மீனவர்கள் 12 பேர் இரவு நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இவர்கள் புதுக்கோட்டை பகுதிகளை சேர்ந்தவர்கள் என விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது. இவர்கள் பயன்படுத்திய இரண்டு விசைப் படகுகள் மற்றும் ஏனைய மீன்பிடி உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
Read More »முல்லைத்தீவு மாவட்ட இளைஞர் சம்மேளன நிர்வாகத்தெரிவுகள்
முல்லைத்தீவு மாவட்ட இளைஞர் சம்மேளன நிர்வாகத்தெரிவுகள் கடந்த 18.03.2017 சனிக்கிழமை அன்று நாடளாவிய ரீதியில் மாவட்ட இளைஞர் சம்மேள நிர்வாக தெரிவுகள் இடம்மெற்றன. அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்னைய தலைவர் கி.தரணீதரன் தலமையில் இடம்பெற்ற நிகழ்வில் மங்கள விளக்கேற்றல்,அதனைத்தொடர்ந்து தலமையுரை இடம்பெற்றது, பின்பு மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி மா.சசிக்குமார் அவர்களால் கடந்த ஆண்டு பொதுக்கூட்ட அறிக்கை வாசிக்கப்பட்டது . அதனைத்தொடர்ந்து மாவட்ட உதவிப்பணிப்பாளர் k.சரோஜா அவர்களால் தேசிய …
Read More »36 கிராம் கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் கைது
36 கிராம் கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் கைது. பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் 35கிராம் கஞ்சாவினை உடமையில் வைத்திருந்த இளைஞர் ஒருவரை இரவு கைது செய்துள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர். கைதானவர் அதே பகுதியினை சேர்ந்த 36வயதுடைய நபர் என பொலிஸார் கூறினர். கிடைக்கபெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதுடன் உடமையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா சரை ஒன்றும் கைபெற்றப்பட்டிருந்தது. …
Read More »டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலையின் தமிழக மாணவர் மரணத்தில் மர்மம்!
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலையின் தமிழக மாணவர் மரணத்தில் மர்மம்! டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்து வந்த முத்துகிருஷ்ணன் (எ) ரஜினி கிருஷ் என்ற தலித் மாணவர், திங்கள்கிழமை மாலை தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். சேலத்தைச் சேர்ந்த அந்த மாணவர், ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சிப் படிப்பு படித்து வந்தார். திங்கள்கிழமை பிற்பகல் முனிர்காவில் உள்ள தனது நண்பரின் அறைக்குச் சென்ற அவர், அங்கு …
Read More »வவுனியாவில் வீடு தீக்கிரை !
வவுனியாவில் வீடு தீக்கிரை ! வவுனியாவில் சாதிக்காதல் விவகாரம் காரணமாக காதலர் களில் ஒருவரின் வீடொன்றின் மீது தாக்குதல் ஒன்று இரவு மேற்கொள்ளப்பட்டுள்ளது மேற்கண்ட சம்பவம் வவுனியா தரணிகுளப்பகுதியில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Read More »மந்திகையில் வர்த்தகர் மீது தாக்குதல் !
மந்திகையில் வர்த்தகர் மீது தாக்குதல் ! கடையில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த வர்த்தகர் மீது மந்திகை துறையாமூலைப் பகுதியில் மூவர் தாக்குதல் நடத்தியதில் காயங்களுக்கு இலக்கான வர்த்தகர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்றிரவு 8.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த எஸ்.செந்தில்குமரன் (வயது-32) என்பவரே தாக்குதலுக்குள்ளானவராவார். கடையில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த வர்த்தகர் மீது மந்திகை துறையாமூலைப் பகுதியில் மூவர் தாக்குதல் …
Read More »