தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தங்கள் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களை ஒரு சேர வணங்கிப் போற்றும் மாவீரர் நாள் இன்று தாயகத்திலும் புலம்பெயர் மக்களாலும் உணர்வு பூர்வமாக கடைப்பிடிக்கப்படுகின்றது. இராணுவ ஆக்கிரமிப்பில் காணப்படுகின்ற மாவீரர் துயிலும் இல்லங்களிலும் அவற்றை அண்மித்த பகுதிகளிலும் சுடறேற்றி வணக்கம் செலுத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் இன்றுவரையில் சரியான முறையில் தங்கள் பிள்ளைகளை நினைவுகூர முடியாத அவல நிலையை தமிழ் மக்கள் எதிர்கொண்டே வருகின்றனர். …
Read More »தடவியல் நிபுணர்களால் தடவல் மன்னன் நித்யானாந்தாவுக்கு சிக்கல்
சர்ச்சைக்குரிய வீடியோவில் இருப்பது நித்தியானந்தாவும், நடிகை ரஞ்சிதாவும் தான், அதில் டூப்ளிகேட் எதுவும் இல்லை என்று சமீபத்தில் டெல்லி தடயவியல் ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டது. இந்த அறிக்கையால் நித்யானந்தா வழக்கு மீண்டும் உயிர்ப்பெற்றுள்ளது. டெல்லி தடயவியல் ஆய்வு மையத்தின் ஆய்வறிக்கை தற்போது நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் நிலையில் இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை காரசாரமாய் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நேற்று நித்தியானந்தாவின் பெங்களூர் ஆசிரமம் முன் …
Read More »ஆர்.கே.நகரில் கமல்ஹாசன் போட்டியா?
கடந்த சில மாதங்களாகவே டுவிட்டரிலும் நேரிலும் அரசியல் கருத்துக்களை கூறி வரும் நடிகர் கமல்ஹாசன் விரைவில் அரசியல் கட்சியை தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளார். ஆனால் அவருடைய சகோதரர் சாருஹாசனே கமலும், ரஜினியும் சேர்ந்து கட்சி ஆர்மபித்தாலே 5% ஓட்டுக்கு மேல் கிடைக்காது என்று கூறியுள்ளதால் அரசியல் கட்சியை உடனே தொடங்க அவர் தயங்குவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன்னர் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு தனக்குள்ள செல்வாக்கை உறுதி …
Read More »வாராந்திர ராசிபலன் 27-நவம்பர் – 3-டிசம்பர்-2017
மேஷம்:பிரச்சனைகளை சமாளிக்கும் மன தைரியம் கொண்ட நீங்கள், மனசாட்சிக்கு விரோதமாக எதையும் செய்ய தயங்குவீர்கள். உங்கள் ராசிநாதன் செவ்வாய் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் புதிய திட்டம் மனதில் உதயமாகும். மாறுபட்ட அணுகுமுறையால் காரியங்கள் சாதிப்பீர்கள். தடைப்பட்ட வேலைகள் முடியும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். சகோதரங்களால் நன்மை உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். சுக்ரன் சாதகமான வீடுகளில் சென்றுக் …
Read More »துப்பாக்கியை கண்டே அஞ்சாதவர்கள் தொப்பியை பார்த்தா பயப்பட போகிறோம்: தமிழிசை
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மீண்டும் தொப்பி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறுவேன் என்று டிடிவி தினகரன் கூறியிருக்கும் நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் தமிழிசை செளந்திரராஜன் அப்போது செய்தியாளர் கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த தமிழிசை ‘மீண்டும் தொப்பி சின்னத்தை தினகரனுக்கு கொடுக்க கூடாது என்று தேர்தல் கமிசனிடம் வலியுறுத்துவோம். கடந்த முறை எத்தனை லட்சம் தொப்பிகளை அவர் ஆர்.கே.நகர் தொகுதியில் இறக்கினார் என்பது அனைவரும் அறிந்ததே’ என்று கூறினார். அப்போது …
Read More »மாணவன் வாயை பிளாஸ்திரி போட்டு ஒட்டிய ஆசிரியை
தெலங்கானா மாநிலத்தில் வகுப்பறையில் பேசிய 5வயது மாணவனின் வாயை பிளாஸ்திரி போட்டு ஒட்டிய ஆசிரியை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தெலங்கானா மாநிலம் நர்சிங்கி அருகே உள்ள உப்பலகுடா கிராமத்தில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த ஊரை சேர்ந்த 5 வயது சிறுவன் அந்த பள்ளியில் யூ.கே.ஜி வகுப்பில் படிக்கிறான். இந்த சிறுவன் வகுப்பறையில் இருந்தபோது சக மாணவனுடன் பேசியுள்ளார். வகுப்பு ஆசிரியை சிறுவனை கண்டித்துள்ளார். ஆனால் …
Read More »வடக்கில் பிரபாகரனின் பிறந்த நாள் தெற்கில் அதிர்வை ஏற்படுத்தும் – சிவாஜிலிங்கம்
தமிழ்த் தேசியத் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்த தினத்தை நாங்கள் இவ்வாறு கொண்டாடுவது தென்னிலங்கையில் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்று தெரிந்தும் தான் நாங்கள் இவ்வாறு கொண்டாடுகின்றோம். இது சட்டவிரோதமான நிகழ்வு அல்ல என வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். வல்வெட்டித்துறையில் பிரபாகரனின் இல்லம் அமைந்திருந்த இடத்தின் முன்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பிறந்த நாள் கொண்டாட்டம், மர நடுகை நிகழ்வு மற்றும் பல்வேறு நலத்திட்ட அறிவிப்பு ஆகியவற்றுக்குப் பின்னர் …
Read More »பிரபாகரனுக்கு நிகர் யாரும் இல்லை என்பதலில் வைகோ உறுதியான நிலைப்பாடு
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு நிகராக ஆயுதப் புரட்சியை நடத்திய தலைவர் உலகில் வேறு யாரும் இல்லை என்பதலில் நான் உறுதியான நிலைப்பாட்டில் உள்ளேன் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். தேசியத் தலைவர் பிரபாகரனின் 63 ஆவது பிறந்ததினத்தை முன்னிட்டு சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த வைகோ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்;. தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் மூலமே விடுதலைப்புலிகளை சிங்கள அரசால் தோற்கடிக்க …
Read More »இலங்கைக் குடும்பத்துக்காகத் திரண்ட நியூஸிலாந்துவாசிகள்!
நாடுகடத்தப்படவிருக்கும் இலங்கை குடும்பத்துக்கு ஆதரவாக நியூஸிலாந்தின் குவீன்ஸ்டவுன்வாசிகள் பேரணியொன்றை நடத்தியுள்ளனர். தினேஷா அமரசிங்க, அவரது கணவர் சேம் விஜேரத்ன மற்றும் அவர்களது மூன்று பிள்ளைகள் ஆகியோர் கடந்த எட்டு வருடங்களாக நியூஸிலாந்தின் குவின்ஸ்டவுன் நகரில் வாழ்ந்து வருகின்றனர். மூன்று வருடங்களுக்கு முன்னர் தினேஷா ‘மல்ட்டிபிள் ஸ்லெரோசிஸ்’ என்ற நோயினால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து, தினேஷாவையும் அவரது குடும்பத்தினரையும் நாட்டை விட்டு வெளியேறுமாறு நியூஸிலாந்து அரசு உத்தரவிட்டது. மனிதாபிமான அடிப்படையில் முறையீடு செய்தபோதும் …
Read More »மண்காத்த மாவீரர்கள் நினைவாக சூழல் காக்கும் மரங்களை நாட்டுவோம் – பொ.ஐங்கரநேசன்
மாவீரர்களுக்காகக் கண்ணீர் சொரியும் இக்கார்த்திகை மாதம் வானம் மழைநீர் சொரியும் மாதமுமாக இருப்பதால் மண்காத்த மாவீரர்கள் நினைவாக சூழல் காக்கும் மரங்களையும் நாட்டுவோம். இந்த உயிருள்ள நினைவுச் சின்னங்களில் எம்மாவீரச் செல்வங்கள் தினம் தோறும் முகம் காட்டுவார்கள் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும் முன்னாள் விவசாய அமைச்சருமான பொ.ஐங்கரநேசன் குறிப்பிட்டுள்ளார். மாவீரர் தினம் தொடர்பாக அவர் விடுத்திருக்கும் ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில், மாவீரர்கள் …
Read More »