தமிழகத்தின் குமரி மாவட்டம் மற்றும் கேரள கடலோர பகுதிகளில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள், கடந்த 30-ந்தேதி தாக்கிய ‘ஒகி’ புயலில் சிக்கி மாயமானார்கள். இதில் ஏராளமானோர் மீட்கப்பட்ட நிலையில், இன்னும் நூற்றுக்கணக்கான மீனவர்கள் கரை திரும்பவில்லை. அவர் களை தேடும் பணியில் கடற்படை, கடலோர காவல்படை மற்றும் விமானப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். மாயமான மீனவர்களை தேடி கண்டுபிடிக்கும் பணி இன்று (சனிக்கிழமை) 8-வது …
Read More »அத்துமீறி தாக்குதல் இந்தியா மீது பாகிஸ்தான் குற்றச்சாட்டு
நடப்பு ஆண்டில் மட்டும் இந்தியா 1300 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியிருப்பதாக பாகிஸ்தான் அபாண்டமாக குற்றம் சாட்டியுள்ளது. இந்தியா நடத்திய அத்துமீறிய தாக்குதலில் 52 பாகிஸ்தானியர்கள் கொல்லப்பட்டதாகவும் 175 பேர் உயிரிழந்ததாகவும் அந்நாடு தெரிவித்துள்ளது. இஸ்லமபாத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் முகம்மது பைசல் கூறுகையில், “ காஷ்மீர் மக்களின் மீது இந்திய அரசு அடக்குமுறையை ஏவி வருகிறது. இந்த விவகாரத்தை உலக நாடுகள் கவனத்தில் …
Read More »தம்பிப்பிள்ளை சிவராசா
காரைநகர், பலகாட்டைப் பிறப்பிடமாகவும் 76/4, கலட்டிப்பிள்ளையார் கோவிலடி யை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை சிவராசா நேற்று (07.12.2017) வியாழக் கிழமை இறைபதம் எய்தினார். அன்னார் காலஞ்சென்ற கதிரவேலு தம்பிப்பிள்ளை – சிவபாக்கியம் தம்பதியரின் புதல்வனும் காலஞ்சென்ற அழகரத்தினம் – தெய்வானைப் பிள்ளை தம்பதியரின் அன்பு மருமகனும் சிவசோதியின் அன்புக் கணவரும் சிவநிதி (கனடா), சிவரூபன் (ஆஸ்தி ரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும் தயாபரனின் (கனடா) மாமனும் விஜயலட்சுமி கதிரவேலு, புனிதகுமாரி …
Read More »நான் போட்ட கையெழுத்து என்னுடையதல்ல
நடிகர் விஷாலின் ஆர்.கே.நகர் தொகுதி வேட்புமனு நிராகரிக்கப்பட்டதற்கு ஒரே காரணம் அவரை முன்மொழிந்த தீபன் மற்றும் சுமதி ஆகிய இருவரும் தாங்கள் விஷாலை முன்மொழிந்து கையெழுத்து போடவில்லை என்று கூறியதுதான் இந்த நிலையில் தேர்தல் அதிகாரி முன் தீபன் கூறும் வாக்குமூலத்தின் வீடியோவை விஷால் வெளியிட்டுள்ளார். அதில் தீபன், ‘நான் போட்ட கையெழுத்து என்னுடையதல்ல’ என்று கூறுகிறார். இதைவிட ஜனநாயக கேலிக்கூத்து எங்காவது நடந்ததுண்டு? என்றும் விஷால் கேள்வி எழுப்பியுள்ளார் …
Read More »8-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தீவைத்து எரிப்பு
மத்திய பிரதேசத்தில் 8-ம் வகுப்பு மாணவியை இரண்டு கொடூரர்கள் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததோடு, அச்சிறுமியை தீவைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசம் சாகர் மாவட்டம் தேவல் கிராமத்தில் 8ம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர் வீட்டில் தனியாக இருந்ததை நோட்டமிட்ட 2 இளைஞர்கள் அவரது வீட்டிற்குள் புகுந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர். பின்னர் வீட்டில் இருந்த மண்ணெண்ணையை சிறுமி மீது ஊற்றி …
Read More »கோபமடையச் செய்த பாராட்டு!
ரசிகர் ஒருவரின் பாராட்டு இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவை கடும் கோபமடையச் செய்திருக்கிறது. இந்திய-இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி இவ்வாரம் வெற்றி, தோல்வியின்றி நிறைவடைந்தது. எனினும் 1-0 என்ற கணக்கில் தொடரை இந்தியா பெற்றுக்கொண்டது. மொத்த மூன்று போட்டிகளிலும் பந்து வீசிய ஜடேஜா, பத்து விக்கட்களை வீழ்த்தியிருந்தார். அத்துடன் நாற்பது ஓட்டங்களையும் பெற்றிருந்தார். போட்டியின் பின் ரசிகர் ஒருவர் ஜடேஜாவைப் பார்த்து, “அஜய் (!) …
Read More »வவுனியாவில் விழிப்புணர்வு வாகனப் பேரணி
வவுனியாவில் “பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுப்போம்” எனும் தொனிபொருளில் விழிப்புணர்வு வாகன பேரணியும் பொது மக்களிடம் கையச்சுப் பெறும் நிகழ்வும் நேற்று முன்னெடுக்கப்பட்டது. ஐக்கிய அபிவிருத்தி நிதியம், ஜெர்மன் நிதி வழங்கும் நிறுவனம் ஆகியன இணைந்து இந்தப் பேரணியை முன்னெடுத்தது. பேரணியின் நிகழ்வில் பொதுமக்கள், இளைஞர்கள் கையில் ஒறேஞ் நிறத்திலான மையை பூசி கையச்சு பதியும் நிகழ்வும் வாகனத்தைக் கழுவி சுத்தம் செய்யும் நிகழ்வும் இடம்பெற்றது.
Read More »தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என இனி எவரும் தங்களை தாங்களே கூறிக்கொள்ள கூடாது
“காணாமல் ஆக்கப்பட்டவா்களின் பிரச்சினைக்காக எந்த அரசியல்வாதிகளும் எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாத காரணத்தினால் காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினர்களாகிய நாம் வருகின்ற உள்ளூராட்சி தேர்தலை பகிஸ்கரிக்கப் போகின்றோம்” என காணாமல் ஆக்கப்பட்வா்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
Read More »இந்தியா சென்ற காரணம் எனக்கு மட்டுமே தெரியும்
நான் ஆயிரம் தடவை இந்தியாவுக்குச் சென்று வந்திருப்பேன். ஒவ்வொரு தடவையும் எதற்காக இந்தியா சென்றேன் என்பது எனக்கு மட்டுமே தெரியும் என்று கூறினார் ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்பின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன். ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சி தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து அந்தக் கட்சியின் சின்னத்தில் தேர்தலைச் சந்திக்கவுள்ளது. அதற்கான ஒப்பந்தம் நேற்றுக் கைச்சாத்திடப்பட்டது. அதன்பின்னர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஊடகவியலாளர்களுக்குக் கருத்துக் கூறினார். “அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸூடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவீர்கள் …
Read More »யாழில் வாள்வெட்டுச் சம்பவம்
யாழில் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பங்களுடன் தொடர்புடைய ஆறு போ் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனா். குறித்த வாள்வெட்டு குழுவினர் யாழ் வட்டுக்கோட்டை பகுதியில் தாக்குதல் நடவடிக்கை ஒன்றுக்கு தயாரகி இருப்பதாக வட்டுக்கோட்டைப் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று மாலை வட்டுகோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த இளைஞர்கள் ஒரு தலைக் காதல் விவகாரம் காரணமாகவே வாள்வெட்டுச் சம்பவங்களில் தொடர்சியாக ஈடுபட்டு வந்துள்ளனர் என ஆரம்ப கட்ட …
Read More »