Sunday , December 22 2024
Home / மலரவன் (page 71)

மலரவன்

கட்சி பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யும் கமல்ஹாசன்….

நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் கட்சியின் பெயரை பதிவு செய்ய தேர்தல் ஆணையத்திடம் நேரம் கேட்டுள்ளார். நடிகர் கமல்ஹாசன் வருகிற 21ம் தேதி மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் வீட்டிலிருந்து தனது அரசியல் பயணத்தை துவங்குவதாக ஏற்கனவே அறிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து அன்று மதுரையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தனது அரசியல் கட்சியின் பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை அவர் அறிமுகம் செய்ய உள்ளார். இந்நிலையில், தனது அரசியல் கட்சியின் …

Read More »

தேர்தலில் வரலாறு காணாத வெற்றி ; இரு பிரதான தலைவர்களும் படுதோல்வி

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆறாயிரத்திற்கும் அதிகமான ஆசனங்களைப் பெற்றுள்ளது. இவ்வெற்றியானது வரலாறு காணாத வெற்றியாகும். இதன் மூலம் அரசாங்கத்திற்கான மக்கள் ஆதரவு இல்லாது போயுள்ளது. ஆகவே அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும் என கூட்டு எதிர்க்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்தன தெரிவித்தார். நாட்டு மக்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுடனும் தாமரை மொட்டு சின்னத்துடனும் இணைந்திருக்கின்றனர். ஆகவே அரசாங்கத்தின் பிரதான தலைவர்கள் இருவரும் …

Read More »

மக்களின் தீர்ப்புக்கு தலைவணங்குகின்றோம் ; ஐ.தே.க.

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் நாட்டு மக்கள் வழங்கிய தீர்ப்புக்கு நாம் தலைவணங்குகின்றோம். மக்கள் எமக்கு வழங்கிய எச்சரிக்கையாகவே தேர்தல் முடிவினை கருதுகின்றோம். இது தொடர்பில் ஆழ்ந்து சிந்தித்து எமது செயற்பாடுகளை சரியான முறையிலும் வேகமாகவும் முன்னெடுக்க நாம் பாடுபடுவோம் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹாஷிம் தெரிவித்தார். 2015 ஆம் ஆண்டில் சமூக பொருளாதார மற்றும் அரசியல் மாற்றத்திற்கு மக்கள் எமக்கு பொறுப்பு வழங்கினர். அதே …

Read More »

மக்கள் மனங்களை வென்றவர் என்றும் மறையப்போவது கிடையாது

மக்களின் மனங்களை வென்றவர்கள் என்றும் மறையப்போவது கிடையாது. நல்லாட்சி அரசாங்கம் எம்மை பழிவாங்கினாலும். நாட்டு மக்கள் கைவிடவில்லையென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார் . நல்லாட்சி அரசாங்கத்தின் மீது நாட்டு மக்கள் கொண்டுள்ள பற்று தற்போது வெளிப்பட்டுள்ளது. உள்ளுராட்சி மன்ற தேர்தலின் பெறுபேறுகள் தொடர்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கடந்த காலங்களில் நாட்டு மக்கள் பல்வேறு …

Read More »

இந்தியா தோற்க காரணமான அந்த நோ பால்

இந்தியா அணி தென் ஆப்பரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. நேற்று நான்காவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்தது. இந்திய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 289 ரன்கள் குவித்தது. தவான் சதம் விளாசி ஆசத்தினார். கேப்டன் கோலி 75 ரன்கள் குவித்தார். இதையடுத்து 290 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற தென் ஆப்பரிக்க அணி களமிறங்கியது. …

Read More »

சவுதியில் பெண்கள் பர்தா அணிய வேண்டியதில்லை

சவுதியில் பெண்களுக்கு அதரவாக இஸ்லாமிய மத ரீதியான கட்டுபாடுகள் தொடர்ந்து விலக்கப்பட்டு வருகிறது. சவுதியில் இளவரசராக முகமது பின் சல்மான் பதவியேற்றத்தில் இருந்து நிறைய மாற்றங்கள் நடந்து வருகிறது. குறிப்பாக பெண்களுக்கு ஆதரவாக பல விஷயங்கள் நடந்து வருகிறது. திரையரங்குகள் திறக்க திட்டமிட்டுள்ளனர். பெண்களுக்கு வாகனம் ஓட்டுநர் உரிமம் வழங்க முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் தற்போது பெண்கள் பர்தா அணிவது அவசியமில்லை என்று முதன்மை இஸ்லாமிய மதபோதகர் ஷேக் அப்துல்லா …

Read More »

விபத்தில் சிக்கிய ரஷ்ய விமானம்: 71 பயணிகள் கதி என்ன?

ரஷ்யாவை சேர்ந்த பயணிகள் விமானம் ஒன்று திடீரென நடுவானில் விபத்துக்குள்ளானதால் அதில் பயணம் செய்த 71 பயணிகளும் மரணம் அடைந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. ரஷ்யாவை சேர்ந்த ”சரடோவ் ஏர்லைன்ஸ்” நிறுவனத்திற்கு சொந்தமான ஆன்டோனோவ் ஏஎன்-148 என்றா பெயரை கொண்ட இந்த விமானம் மாஸ்கோவில் இருந்து அரசாக் என்ற நகரம் நோக்கி இன்று சென்று கொண்டிருந்தது. அப்போது இந்த விமானம் பைலட்டுக்களின் கட்டுப்பாட்டை இழந்து ரஷ்யாவில் உள்ள ஆர்குனாவோ என்ற கிராமம் …

Read More »

தமிழ் இருக்கைக்கு ரூ.1 கோடி வழங்கிய ஸ்டாலின்

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் அமைய இருக்கும் தமிழ் இருக்கைக்காக ரூ.1 கோடிக்கான காசோலையை தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். ஹார்வர்டு பல்கலைக்கழகம் 382 ஆண்டுகள் பழமையானது. சில உலகத் தலைவர்களையும், நோபல் பரிசு பெற்ற அறிஞர்கள் பலரையும் பெற்றுத்தந்த பெருமைமிக்கது. 382 ஆண்டுகள் பழைமையான ஒரு பல்கலைக் கழகத்தில் 3000 ஆண்டுகள் மூத்த மொழியான தமிழ் அமரப்போவது அந்தப் பல்கலைக் கழகத்திற்குத்தான் பெருமை. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் செம்மொழியான தமிழுக்கு தனி …

Read More »

கனடாவில் எதிர்கால குடியுரிமை தலைவராக ஈழத்தமிழச்சி அபி ஜெயரட்னம் !

கனடாவில் எதிர்கால குடியுரிமை தலைவர்கள் திட்டத்திற்காக தமிழ் பெண் ஒருவர் தெரிவாகியுள்ளார். டொரொண்டோ பிராந்தியத்தின் எதிர்கால குடியுரிமை தலைவராக அபி ஜெயரட்னம் என்ற தமிழ் பெண் தெரிவாகியுள்ளார். சுமார் 50 வீத புலம்பெயர் சிறுபான்மையினர்கள் வாழும் நகரமாக டொரொண்டோ விளங்குகிறது. அபி ஜெயரட்னம் தலைமைத்துவ அறக்கட்டளையின் கட்டடக்கலைஞர் மற்றும் Centennial கல்லூரியின் பேராசிரியராக பணியாற்றுகிறார். மேலும் சமூக நீதி பற்றி மாணவர்களுக்கும் சமுதாய பங்குதாரர்களுக்கும் தேவையான கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருகின்றார். …

Read More »

தைய்வானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 2 பேர் பலி

தைவான் தலைநகர் தைபேயில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கத்தால் குடியிருப்புகள் இடிந்து விழுந்து 2 பேர் பலியாகினர் மேலும் 114 பேர் காயமடைந்துள்ளனர். தைவான் நாட்டின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கடந்த சில நாட்களாகவே தைவானில் லேசான நில நடுக்கம் உணரப்பட்ட நிலையில், தற்பொழுது 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் பீதியடைந்த மக்கள் வீட்டிலிருந்து வெளியேறி தெருக்களில் தஞ்சம் அடைந்தனர். …

Read More »