Sunday , December 22 2024
Home / மலரவன் (page 65)

மலரவன்

ஸ்டெர்லைட் போராட்டம்: துப்பாக்கி சூட்டில் பெண் உள்பட 9 பேர் பலி

தூத்துகுடியில் இன்று நடைபெற்ற ஸ்டெர்லைட் போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் போலீசார் தடியடி, கண்ணீர்குண்டு, மற்றும் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் இதுவரை 9 பேர் பலியாகியுள்ளனர். மேலும் போலீஸ் தடியடியால் பலருக்கு மண்டை உடைந்து சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த போராட்டத்தினால் ஏற்பட்ட வன்முறை குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில், ‘போராட்டத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க …

Read More »

ஸ்டெர்லைட் போராட்டம் ; தமிழக அரசே பொறுப்பு : ரஜினிகாந்த் கண்டிப்பு

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் மக்கள் நடத்திய போராட்டம் கலவரமாக மாறியுள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் மற்றும் ஸ்டெர்லை ஆலை நோக்கி இன்று காலை பேரணியாக சென்றனர். அவர்களை போலீசார் தடுக்க முயன்றனர். அப்போது, பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது, பொதுமக்களை நோக்கி போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 10 பேர் பலியாகினர். இந்நிலையில், …

Read More »

எப்போதும் மக்களே உயிர் இழக்கிறார்கள் – கமல்ஹாசன் வேதனை

தூத்துக்குடியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10க்கும் மேற்பட்டோர் பலியானதற்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் மற்றும் ஸ்டெர்லைட் ஆலை நோக்கி இன்று காலை பேரணியாக சென்றனர். அவர்களை போலீசார் தடுக்க முயன்றனர். அப்போது, பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது, பொதுமக்களை நோக்கி போலீசார் துப்பாக்கி …

Read More »

பாஜகவுடன் கூட்டணி இல்லை – குமாரசாமி திட்டவட்டம்

கர்நாடகாவில் ஆட்சி அமைப்பது தொடர்பான விவகாரத்தில், பாஜகவுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என மதசார்பற்ற ஜனதா தளம் முதலமைச்சர் வேட்பாளர் குமாரசாமி தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் அளவுக்கு மெஜாரிட்டி கிடைக்காததால், கர்நாடகாவில் ஆட்சி அமைப்பதில் குழப்பம் நீடிக்கிறது. திடீர் திருப்பமாக, மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு கொடுக்க முன்வந்துள்ளது. அதேசமயம், 104 தொகுதிகளை பெற்றுள்ள பாஜக ஆட்சி அமைக்க அழைப்பு …

Read More »

விஷால் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிப்பு

விஷால், சமந்தா நடிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கிய ‘இரும்புத்திரை’ திரைப்படம் கடந்த வாரம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தமிழகம் மற்றும் தெலுங்கு மாநிலங்களில் அபார வசூலை பெற்று வரும் இந்த படம் விஷாலின் வெற்றிப்பட பட்டியலில் இணைந்துள்ளது. இந்த நிலையில் விஷால் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. விஷாலின் அடுத்த படத்திற்கு ‘அயோக்யா’ என்ற டைட்டில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த படம் தெலுங்கில் சூப்பர் ஹிட் ஆன …

Read More »

பிளஸ் 2 பொதுத்தேர்வில் 91.1 சதவீதம் பேர் தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத்தேர்வில் 91.1% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த மார்ச் மாதம் 1ஆம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் நடந்த பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகவுள்ளது. முதல்முறையாக இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் மட்டுமே வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று காலை சரியாக …

Read More »

சாலையில் கொட்டிய 12 டன் சாக்லேட் திரவம்

போலந்து நாட்டில் 12 டன்கள் சாக்லேட் திரவத்தை ஏற்றி கொண்ட சென்ற கண்டெய்னர் லாரி ஒன்று திடீரென விபத்துக்குள்ளாகியதால் அதில் இருந்த சாக்லேட் திரவங்கள் சாலையில் கொட்டியது. இதனால் அந்த பகுதியில் உள்ள சாலை முழுவதும் சாக்லேட் திரவத்தால் சூழப்பட்டது. விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்புப்படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப்பணி குறித்து ஆலோசித்து வருகின்றனர். இந்த சாலையில் கொட்டிய சாக்லேட் திரவங்களை அகற்றி பின்னர் இந்த …

Read More »

சோமாலியா: மார்க்கெட்டில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 5 பேர் பலி

சோமாலியா மாகாணத்தில் உள்ள மொகடிஷீயில் உள்ள மார்க்கெட்டில் பயங்கராவதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 5 பேர் பலியாகியுள்ளனர். சோமலியா நாட்டில் அல்கொய்தா இயக்கத்தின் ஆதராவளர்களான அல் ஷபாப் பயங்கரவாதிகள் இயங்கி வருகின்றனர். இவர்கள் அந்நாட்டில் அடிக்கடி பயங்கரவாத தாக்குதல்களை நிகழ்தி வருகின்றனர். அந்த வகையில் நேற்று இந்த பயங்கரவாதிகள் மொகடிஷுவில் அருகில் உள்ள லாயென் நகரில் இயங்கிவரும் மார்க்கெட்டில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 5 பேர் பரிதாபமாக …

Read More »

மே 14ம் தேதி வரைவு திட்டம் தாக்கல் – மத்திய அரசு அறிவிப்பு

காவிரி நீர் விவகாரத்தில் இனிமேல் அவகாசம் கேட்க மாட்டோம் என மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் இன்று தெரிவித்துள்ளார் காவிரி நீர் தொடர்பான வழக்கில் தமிழகத்திற்கு 4 எம்.டி.சி நீரை தர வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், மழை பற்றாக்குறையை காரணம் காட்டி தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது என கர்நாடக அரசு சமீபத்டில் உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்தது. கடந்த 8ம் தேதி …

Read More »

கேரளாவில் திருநங்கை திருநம்பி காதல் திருமணம்!

கேரள மாநிலத்தில் சூர்யா என்ற திருநங்கையும், இஷான் என்ற திருநம்பியும் காதலித்து சட்டப்படி திருமணம் செய்துக்கொண்டனர். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த இஷான் பெண்ணாக பிறந்து ஆணாக மாறியவர். சூர்யா பெண்ணாக ஆணாக பிறந்து பெண்ணாக மாறியவர். இவர்கள் இருவரும் நண்பர்களாக அறிமுகமாகி காதலர்களாக மாறினார்கள். இதைத்தொடர்ந்து இவர்கள் திருமணம் செய்துக்கொள்ள முடிவெடுத்து பெற்றோர் சம்மதத்துடன் சட்டப்படி திருமணம் செய்துக்கொண்டனர். இவர்களது திருமணம் கோலகலமாக நடைபெற்றது. மேலும் சட்டப்படி நடைப்பெற்ற …

Read More »