Friday , August 29 2025
Home / பார்த்தீபன் (page 9)

பார்த்தீபன்

மஹிந்தவை தலைமைப் பொறுப்பில் அமர்த்தும்வரை போராட்டம் தொடரும்! – பொது எதிரணி கூறுகின்றது 

“இன்னும் கொஞ்ச நாட்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் எஞ்சியிருக்கப்போவது கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், செயலாளர் துமிந்த திஸாநாயக்கவும்தான்” என்று மஹிந்த அணியான பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “வீட்டில் கூலிக்கு இருந்தவர் வீட்டை சொந்தமாக்கிக்கொள்ளும் செயற்பாடே இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் நடந்துள்ளது.  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வேறு அரசியல் சக்திகளுக்கு அடிபணிந்துள்ளது. இதற்கான முழுப் பொறுப்பையும் கட்சியின் …

Read More »

வடக்கு அமைச்சரவையிலிருந்து டெனீஸை தூக்கி எறிந்தார் முதல்வர் விக்கி!

வடக்கு மாகாண அமைச்சரவையிலிருந்து பா.டெனீஸ்வரனை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தூக்கி எறிந்துள்ளார். அவரது அமைச்சுப் பதவியில் சிலவற்றை திருமதி அனந்தி சசிதரனுக்கும், எஞ்சியவற்றை தானே பொறுப்பெடுப்பதாவும் தெரிவித்து வடக்கு மாகாண ஆளுநர் குரேக்கு, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கடிதம் எழுதியுள்ளார். அமைச்சர் பா.டெனீஸ்வரன் தானே அமைச்சுப் பதவியில் தொடர்வதாக ஏற்கனவே, வடக்கு மாகாண ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளமையால், இந்த விடயத்தில் சட்டஆலோசனை வழங்குமாறு கோரி வடக்கு மாகாண ஆளுநர் குரே சட்டமா அதிபர் …

Read More »

அடிப்படை உரிமையற்றவரை தற்காலிகமாக நீக்க முடியுமா? – ரெலோவிடம் கேட்கிறார் டெனீஸ்

“எனது அமைச்சுப் பொறுப்பை கபடத்தனமாகவும் – சூட்சுமமாகவும் தட்டிப்பறிக்க நினைக்கின்றார்கள். கட்சியின் அடிப்படை உறுப்புரிமைகூட இல்லாத என்னை ஆறு மாதங்களுக்கு தற்காலிகமாக எப்படி இடைநிறுத்த முடியும்? கட்சி யாப்பில் அதற்கு இடமிருக்கின்றதா? கட்சியின் அடிப்படை உறுப்புரிமை பெற்ற நபரென்று சொன்னால், உறுப்புரிமை எனக்கு எப்போது வழங்கப்பட்டது என்பதை ஆதராத்துடன் பகிரங்கப்படுத்த முடியுமா?” – இவ்வாறு வடக்கு மாகாண மீன்பிடி மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் பா.டெனீஸ்வரன் ரெலோவிடம் கேள்விகளை எழுப்பியுள்ளார். ரெலோவின் …

Read More »

மஹிந்த ஆட்சிக்கால திருடர்களை விஜயதாஸவே பாதுகாத்து வந்தார்! – நளின் பண்டார 

மஹிந்த ஆட்சிக்கால திருடர்களை நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவே பாதுகாத்து வந்தார் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “நல்லாட்சி அரசு ஈராண்டுகளைக் கடந்துள்ள நிலையில் முக்கிய சில இலக்குகளை அடைந்துள்ளது. எனினும், திருடர்களைப் பிடிக்க முடியாமல் போனதே பாரியதொரு தவறாக  இருக்கின்றது. கடந்த ஆட்சிக்கால திருடர்களை ஜனாதிபதியா …

Read More »

இன்றும் சு.கவுக்கு நானே தலைவர்! – மார்தட்டுகிறார் மஹிந்த

மகிந்த

இன்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் தானே எனவும், தன்னை அந்தப் பதவியிலிருந்து எவரும் விலக்கவும் இல்லை எனவும், தான் விலகவும் இல்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தன்னை சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து நீக்கிவிட்டதால் அந்தப் பதவி தனக்கே உரித்தாகிறது என வேறொருவர் கூறுவது வேடிக்கையாக இருக்கின்றது எனவும் அவர் கூறியுள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:- “என்னையும் எனது குடும்பத்தினரையும் பழிவாங்குவதற்காக பல்வேறு பொய் …

Read More »

காலத்தை இழுத்தடிக்காமல் வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்! – மைத்திரியிடம் நேரில் சம்பந்தன் இடித்துரைப்ப

“புதிய அரசமைப்பு உருவாக்கத்தில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்த மாத இறுதிக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட இடைக்கால வரைபின் அறிக்கை இன்னமும் சமர்ப்பிக்கப்படவில்லை. எனவே, காலத்தை இழுத்தடிக்காமல் ஜனாதிபதித் தேர்தலின்போது நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை உடன் நிறைவேற்றுங்கள்.” – இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேரில் இடித்துரைத்தார் பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். கொழும்பில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்றிரவு நடைபெற்ற முக்கிய …

Read More »

தமிழர் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி – சம்பந்தன் குழு இன்று முக்கிய பேச்சு!

காணி விடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை, தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரம் உள்ளிட்ட தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றத் குழுவுக்கும் இடையில் இன்று செவ்வாய்க்கிழமை முக்கிய சந்திப்பு நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் மாலை 4.30 மணிக்கு இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளது என கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. தெரிவித்தார்.

Read More »

மு.காவுடன் இணைவது ஒருபோதுமே நடக்காது! – ஹசனலி திட்டவட்டம்; முஸ்லிம் கூட்டமைப்பே ஒரே இலக்கு என்றும் தெரிவிப்பு 

“ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் மீண்டும் என்னை இணைப்பதற்கான எந்த முயற்சிக்கும் நான் துளியும் இடமளியேன். முஸ்லிம் கூட்டமைப்பு உருவாக்க விடயத்தில் மும்முரமாகவுள்ளேன்.”  – இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயலாளர் நாயகமும் தூய முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் கூட்டமைப்பின் ஏற்பாட்டாளருமான எம்.ரி.ஹசனலி தெரிவித்தார். ஹசனலிக்கு தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்கி, முஸ்லிம் கூட்டமைப்பு உருவாவதைத் தடுப்பதற்கான காய்நகர்த்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் …

Read More »

சுயகௌரவம் இருக்குமானால் உடன் பதவி விலகவேண்டும் விஜயதாஸ! – வலியுறுத்துகின்றார் பொன்சேகா

பொன்சேகா

நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவுக்கு சுயகௌரவம் இருக்குமேயானால் அவர் உடனடியாகப் பதவி விலகவேண்டுமென பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா வலியுறுத்தியுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- “விஜயதாஸ ராஜபக்ஷ ஊழல்வாதிகளையும், மோசடியாளர்களையும் காப்பாற்றிவருகின்றார். குற்றம் செய்தவர்களை சட்டத்தின் பிடிக்குள் கொண்டுவருவதற்குத் தடையாக இருக்கின்றார். ஐக்கிய தேசியக் கட்சியினரின் ஒட்டுமொத்த வெறுப்புக்கும் ஆளாகியிருக்கின்றார். அவர் இந்தப் பதவியைவிட்டு விலகினால் மட்டுமே குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தமுடியும். எனவே, அவருக்கு சுயகௌரவம் இருக்குமேயானால் …

Read More »

இராஜிநாமா வேண்டாம்! – அமைச்சர் விஜயதாஸவிடம் தேரர்கள் குழு கோரிக்கை 

நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவை அமைச்சுப் பதவியிலிருந்து இராஜிநாமா செய்யவேண்டாம் என தேரர்கள் குழுவினர் நேற்று கோரிக்கை விடுத்துள்ளனர். பௌத்த சங்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தேரர்கள் அடங்கிய குழுவினர் நீதி மற்றும் புத்தசாசன அமைச்சுக்கு நேற்று வந்திருந்தனர். அமைச்சரை சந்தித்து ஆசீர்வாதம் வழங்குவதற்காகவும் பதவியை இராஜிநாமா செய்யவேண்டாம் எனக் கோருவதற்காகவும் தாம் வருகை தந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், அமைச்சர் அங்கு வருகை தராத காரணத்தால் அதிகாரிகளைச் சந்தித்துவிட்டு …

Read More »