“இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு மைத்திரி – ரணில் தலைமையிலான அரசுக்கு அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுக்கவேண்டும். இதனை இவ்வாரம் இலங்கை வரும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசியாவுக்கான பதில் உதவிச் செயலர் அலிஸ் வெல்ஸ்ஸிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேரில் வலியுறுத்தவுள்ளது.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் …
Read More »பாதுகாப்புக் காரணங்களுக்காக 1,300 வெளிநாட்டு பயணிகளுக்கு இலங்கைக்குள் நுழையத் தடை!
கடந்த வருடம் 1,300க்கும் அதிகமான வெளிநாட்டுப் பயணிகளுக்கு இலங்கைக்குள் நுழைவதற்குத் தடைவிதிக்கப்பட்டிருந்ததாக குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர்களுள் பெரும்பாலானோர் பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தான், எகிப்து மற்றும் சிரிய நாட்டவர்களாவர். இந்த நாடுகளின் பிரஜைகள் இலங்கைக்குள் நுழைவதற்கு இலங்கை அரச புலனாய்வுப் பிரிவினர் அனுமதி வழங்கினால் மாத்திரமே குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் அவர்களுக்கு விசா வழங்கும். 2014 ஆம் ஆண்டு முதல் உலகப் பாதுகாப்புக்கான வரைமுறைகள் வகுக்கப்பட்ட பின்னர் குறிப்பிட்ட சில நாடுகளின் …
Read More »கிளிநொச்சியில் வாள்வெட்டு! குடும்பஸ்தர் படுகாயம்!!
கிளிநொச்சியில் இன்று காலை இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதலில் குடும்பஸ்தர் ஒருவர் பாடுகாயமடைந்துள்ளார் பஸ் தரிப்பிடத்தில் நின்று கொண்டிருந்த நான்கு பிள்ளைகளின் தந்தை மீது நபரொருவர் வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளார். இந்தச் சம்பவம் கிளிநொச்சி, கோணாவில் பகுதியில் இன்று காலை 8.30 மணியளவில் நடந்துள்ளது. வாள்வெட்டில் படுகாயமடைந்த காந்தி கிராமத்தைச் சேர்ந்த 53 வயதுடைய கிருபாகரன் என்பவர் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். உழவு இயந்திரத்தில் வந்த …
Read More »மாகாண சபைகள் கலைக்கப்பட்ட பின்னர் மேற்பார்வை அரசு அமைக்கப்படவேண்டும்! – விக்கி யோசனை
20 ஆவது திருத்தச் சட்ட வரைபு நிறைவேற்றப்பட்டு, அதன் கீழ் மாகாண சபைகள் கலைக்கப்பட்டால், அதன் பின்னர் மாகாணங்களில் மேற்பார்வை அரசு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:- “ஒன்பது மாகாண சபைகளுக்கான தேர்தலை ஒரே நாளில் நடத்துவதற்கான 20 ஆவது அரசமைப்பு திருத்த வரைபு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்ட வரைபு நிறைவேற்றப்பட்டால், அனைத்து மாகாண …
Read More »ஜனாதிபதி மைத்திரியின் கையில் சட்டமா அதிபர் திணைக்களம்?
சட்டமா அதிபர் திணைக்களத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவுள்ளார் என்று கொழும்பு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படுகின்றது என ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. நீதி அமைச்சின் கீழேயே இதுவரை காலமும் சட்டமா அதிபர் திணைக்களம் இருந்து வருகிறது. விஜயதாஸ ராஜபக்ஷ நீதி அமைச்சராக இருந்தபோது, சட்டமா அதிபர் திணைக்களம் சரியாகச் செயற்படவில்லை என்று அரசில் அங்கம் வகிக்கும் ஐக்கிய தேசியக் …
Read More »வடக்கில் புதனன்று மாபெரும் போராட்டங்கள்!
“வடக்கு மாகாணத்தில் எதிர்வரும் 30ஆம் திகதி புதன்கிழமை மாபெரும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்” என்று வடக்கு மாகாண சபையின் ஆளுங்கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “போர் முடிந்த பின்னர் பல்லாயிரக்கணக்கானோர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். தமிழ் மக்களில் நூற்றுக்கொருவர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினத்தை முன்னிட்டு, ஓகஸ்ட் 30 ஆம் திகதி புதன்கிழமை வவுனியாவில் பெரும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முல்லைத்தீவை பிரதானப்படுத்தி முல்லைத்தீவு மாவட்ட …
Read More »தியாக தீபம் திலீபனின் தூபியைத் துப்புரவாக்கும் பணி நல்லூரில்!
தியாக தீபம் திலீபனின் நினைவு நாள் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில் நல்லூரில் அமைந்துள்ள நினைவுத் தூபியை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் நேற்று துப்புரவு செய்துள்ளனர். தியாக தீபத்தின் நினைவுநாளை கடந்த வருடம் ஜனநாயகப் போராளிகள் கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பன முன்னெடுத்திருந்த நிலையிலேயே, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் இந்தத் துப்புரவு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். இந்திய இராணுவத்தின் ஆக்கிரமிப்புக்கு எதிராக அஹிம்சை வழியில் போராடி …
Read More »சர்வதேச வல்லாதிக்க நாடுகளின் யுத்தக்களமாக மாறும் இலங்கை! – நல்லாட்சி அரசு மீது சீறிப் பாய்கிறார் குணதாஸ
நாட்டின் பொது வளங்களை சர்வதேசத்துக்கு தாரைவார்த்துக் கொடுத்து உலகின் பலமிக்க நாடுகளின் போர்க்களமாக இலங்கையை மாற்றுவதற்கே நல்லாட்சி அரசு முனைவதாக தேசிய அமைப்புகளின் சம்மேளனத் தலைவரும் மஹிந்தவின் விசுவாசியுமான குணதாஸ அமரசேகர தெரிவித்தார். கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “நல்லாட்சி என்று பொய் வாக்குறுதிகளை மக்களுக்கு விதைத்த தற்போதைய அரசு நாட்டின் பொது வளங்களையும், அரச …
Read More »வடக்கு மாகாண சபையில் புதிய அமைச்சரவை! – ஆளுநர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம்
வடக்கு மாகாண சபையின் புதிய உறுப்பினர்களைக்கொண்ட அமைச்சரவை இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற சத்தியப்பிரமாண வைபவத்துடன் பொறுப்பேற்றது. ஏற்கனவே அமைச்சராக இருக்கும் கந்தையா சர்வேஸ்வரனுக்கு மேலதிகமாக முதல்வர் விக்னேஸ்வரனும், அமைச்சர் அனந்தி சசிதரனும் புதிய அமைச்சுப் பொறுப்புகளை ஏற்றனர். அதனால் அவர்கள் இருவரும், அத்துடன் புதிதாக அமைச்சர் பதவிகளை ஏற்ற ரெலோவின் ஞானசீலன் குணசீலன், புளொட்டின் கந்தையா சிவநேசன் ஆகியோரும் இன்று தத்தமது பொறுப்புகளை ஏற்று …
Read More »கேப்பாப்பிலவு காணி விடுவிப்பு குறித்து ஜனாதிபதி – கூட்டமைப்பு பேச்சு! – இராணுவம் வெளியேற ரூ.15 கோடி அமைச்சரவை அங்கீகாரம்
கேப்பாப்பிலவு காணி விடுவிப்புத் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்குழு நேற்று ஜனாதிபதி தலைமையிலான அரசுத் தரப்புடன் பேச்சுக்களில் ஈடுபட்டது. கேப்பாபிலவுக் காணிகளை விடுவிப்பதற்காக இராணுவத்தினருக்கு 14 கோடி 80 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்வதற்கு நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தக் கூட்டத்தில் தெரிவித்தார். இந்தச் சந்திப்பு நேற்று மாலை 4.30 மணி தொடக்கம் சுமார் ஒரு மணி நேரம் நாடாளுமன்றக் …
Read More »