“காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கு நீதி வேண்டி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள எமது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் ஐ.நாவும் இலங்கை அரசுமே முழுப் பொறுப்பு.” – இவ்வாறு தமிழர் தாயகத்தில் அறவழியில் தொடர்ந்து போராடி வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் எச்சரிக்கை விடுத்தனர். கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களைக் கண்டுபிடித்துத் தருமாறும், அவர்களுடைய உண்மையை வெளிப்படுத்துமாறும் வலியுறுத்தி தமிழர் தாயகத்தில் பரவலாகப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் …
Read More »போர்க்குற்றச்சாட்டுக்குள்ளான மேஜர் ஜெனரல் சாஜி கல்லகேக்கு விசா மறுத்தது ஆஸி.!
போர்க்குற்றங்களை இழைத்தார் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும், இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் சாஜி கல்லகேக்கு நுழைவு விசா வழங்க ஆஸ்திரேலியா மறுத்துள்ளது. ஆஸ்திரேலியக் குடியுரிமை பெற்றுள்ள தனது சகோதரரைப் பார்ப்பதற்காக, மேஜர் ஜெனரல் சாஜி கல்லகே ஒரு மாத கால ஆஸ்திரேலிய நுழைவு விசாவுக்கு விண்ணப்பித்திருந்தார் எனத் தெரிவிக்கப்பட்டது. எனினும், இறுதிப் போரின்போது, 2009 மே 7ஆம் திகதி தொடக்கம், 2009 ஜூலை 20ஆம் திகதி வரை 59 …
Read More »இலங்கைக்குச் செல்லாதீர்; உலகத் தமிழர்களின் வெறுப்புக்கு ஆளாகாதீர்! – ரஜினியிடம் திருமாவளவன் வேண்டுகோள்
லைக்கா நிறுவனம் சார்பில் இலங்கைத் தமிழர்களுக்கு வீடுகள் வழங்கும் நிகழ்வில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்கக்கூடாது என்று கேட்டுக்கொண்டுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், இந்நிகழ்வில் கலந்துகொண்டு உலகத்தமிழர்களின் வெறுப்புக்கு ஆளாகவேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இப்போது நடைபெறுகின்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்கு இலங்கைக்கு மேலும் இரண்டு வருடங்கள் கால அவகாசம் வழங்கித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. …
Read More »சந்திரிகா நாளை யாழ்ப்பாணம் பயணம்!
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்க நாளை சனிக்கிழமை யாழ்ப்பாணத்துக்குச் செல்கின்றார். தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்தால் வடமராட்சிப் பகுதியில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளைத் தொடக்கி வைப்பதற்கும், பார்வையிடுவதற்குமே அவர் யாழ்ப்பாணம் செல்கின்றார். நாளை சனிக்கிழமை முற்பகல் 10 மணிக்குச் செல்லும் அவர் மூன்று நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார்.
Read More »இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து கடும் வேதனையில் இந்தியா! – சுஷ்மா அதிரடி
இலங்கையின் உள்நாட்டுப் போரின் இறுதியில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் இந்திய அரசு கடும் வேதனையும் துயரமும் அடைந்தது என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார். இந்திய நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இந்திய வெளிவிவகார அமைச்சரின் இந்தக் கருத்து வழமைக்கு மாறானது. இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து இந்தியா இதுவரை வெளியிட்ட கருத்துக்களில் இதுவே கடுமையானது என்று அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். நாடாளுமன்றத்தில் …
Read More »கொலையாளியே விசாரணை நடத்துவதா? சர்வதேச விசாரணையே ஒரே வழி! – கூட்டமைப்பு திட்டவட்டம்
கொலையாளியே விசாரணை நடத்துவதா? சர்வதேச விசாரணையே ஒரே வழி! – கூட்டமைப்பு திட்டவட்டம் “கொலையாளிகளே விசாரணை நடத்தினால் எப்படி நீதி கிடைக்கும். எனவே, இலங்கையில் தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை எமக்கில்லை. நீதி, நியாயம் கிடைக்க வேண்டுமானால் சர்வதேச பங்களிப்புடனான விசாரணையே இடம்பெற வேண்டும்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் நேற்று சபையில் தெரிவித்தார். அவர் மேலும் கூறியவை வருமாறு:- “இறுதிப்போரின்போது போராளிகள் …
Read More »போர்க்கப்பல்களை இலங்கைக்கு வழங்குவதற்கு ரஷ்யா தீவிர பேச்சு!
போர்க்கப்பல்களை இலங்கைக்கு வழங்குவதற்கு ரஷ்யா தீவிர பேச்சு! ரஷ்யாவின் ஜெபார்ட் 3.9 ரக போர்க் கப்பல்களை இலங்கைக்கு வழங்குவது தொடர்பில் ரஷ்யா இலங்கையுடன் தீவிர பேச்சுக்களை மேற்கொண்டுள்ளது. ரஷ்யாவின் இராணுவத் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான சமஷ்டி சேவையின் பிரதி இயக்குநர் இதனைத் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட விடயம் தற்போதைக்கு பேச்சுகள் அளவிலேயே காணப்படுகின்றது என இராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான சமஷ்டி சேவையின் பிரதி இயக்குநர் மைக்கல் பெட்கோவ் கூறியுள்ளார். குறிப்பிட்ட நவீன போர்க் …
Read More »மாகாணங்களுக்கு டி.ஐ.ஜி.தலைமையில் பொலிஸ் அதிகாரம்! – வழிகாட்டல் குழுவின் கூட்டத்தில் இணக்கம்
மாகாணங்களுக்கு டி.ஐ.ஜி.தலைமையில் பொலிஸ் அதிகாரம்! – வழிகாட்டல் குழுவின் கூட்டத்தில் இணக்கம் பிரதிப் பொலிஸ்மா அதிபர் (டி.ஐ.ஜி.) ஒருவரின் தலைமையில் மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரத்தை வழங்குவதற்கு, புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கான வழிகாட்டல் குழு இணக்கம் கண்டது. மாகாண சட்டம், ஒழுங்கு அமைச்சுக்குப் பொறுப்புக் கூறுபவராக அவர் இயங்குவார் என்றாலும் விசாரணை மற்றும் நீதிமன்ற வழக்குகளில் அவர் சுயாதீனத்துடன் இயங்குபவராக இருப்பார். இந்த இணக்கப்பாட்டுடன் புதிய அரசமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள அதிகாரப் பகிர்வு …
Read More »கடற்படையை வெளியேறக் கோரி முள்ளிக்குளம் மக்கள் போராட்டம்!
கடற்படையை வெளியேறக் கோரி முள்ளிக்குளம் மக்கள் போராட்டம்! கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள தமது கிராமத்தை விடுவிக்குமாறு வலியுறுத்தி, மன்னார் – முள்ளிக்குளம் கிராம மக்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் நேற்றுக் காலை 7.30 மணியளவில் முள்ளிக்குளம் கிராம நுழைவாயிலில் நடைபெற்றது. மன்னார், முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மீன்பிடி மற்றும் விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்ட முள்ளிக்குளம் கிராம மக்கள் கடந்த 2007ஆம் ஆண்டு செப்டெம்பர் 5ஆம் திகதி கடற்படையினரால் …
Read More »காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரம்: தப்பிவிட முடியாது கோட்டா! – அடித்துக் கூறுகின்றார் சுமந்திரன்
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரம்: தப்பிவிட முடியாது கோட்டா! – அடித்துக் கூறுகின்றார் சுமந்திரன் “இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டவர்கள் – சரணடைந்தவர்கள் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவும் பொறுப்புக்கூறவேண்டியவர். அதிலிருந்து தப்பிப்பதற்காகவே சரணடைந்தவர்களைக் கண்டவர்கள் எவருமில்லை என்று கதை சொல்கின்றார்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அந்தக் கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ போரின் இறுதிக்கட்டத்தில் …
Read More »