காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தம்மிடம் ஒப்படைக்குமாறும், அது தொடர்பான தகவல்களை வெளிப்படுத்துமாறும் கோரி தமிழர் தாயகத்தில் 5 மாவட்டங்களிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று சனிக்கிழமையும் போராட்டத்தைத் தொடர்கின்றனர். இந்தப் போராட்டங்கள் குறித்து அரசு தொடர்ந்தும் பராமுகமாகவே இருக்கின்றது எனப் போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உணவுகளின் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று சனிக்கிழமை 41ஆவது நாளாகவும் தொடர்கின்றது. இந்தப் போராட்டத்துக்கு ஆதரவாக நாளாந்தம் …
Read More »கால அவகாசம் கிடைத்ததும் மீறப்படுகின்றன வாக்குறுதிகள்! – போட்டுத் தாக்குகிறது யஸ்மின் சூகாவின் அமைப்பு
“இராணுவக் கட்டமைப்பை மறுசீரமைப்பதாகவும் இராணுவத்தின் உயர் பதவிகளுக்கு அதிகாரிகளை நியமிக்கும்போது இறுதிக்கட்டப் போரில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான கொடூரங்களுடன் தொடர்புள்ளதா என்பதை விரிவாக ஆராய்ந்து பார்ப்பதாகவும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு உறுதியளித்த இலங்கை அரசு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டுச் சில தினங்களுக்குள்ளேயே அந்த வாக்குறுதியை மீறியுள்ளது.” – இவ்வாறு யஸ்மின் சூகாவைத் தலைமைச் செயற்பாட்டாளராகக் கொண்டியங்கும் சர்வதேச நீதிக்கும் நியாயத்திற்குமான செயற்திட்டம் தெரிவித்துள்ளது. போர்க்குற்றச்சாட்டை …
Read More »மைத்திரி, ரணில், சம்பந்தன் திருமலையில் பத்திரகாளி அம்பாள் தரிசனம்!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் இன்று சனிக்கிழமை திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்துக்குச் சென்றனர். அவர்கள் அங்கு வழிபாட்டில் ஈடுபட்டதுடன் ஆலயத்தையும் சுற்றிப் பார்த்தனர்.
Read More »போர்க்குற்ற விசாரணைக்கு வெளிநாட்டு பங்களிப்பு அவசியம்! – லால் விஜேநாயக்க வலியுறுத்து
“உள்ளக விசாரணையின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவதற்காக வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்களை அரசு அனுமதிக்க வேண்டும்.” – இவ்வாறு புதிய அரசமைப்பு குறித்து மக்களின் கருத்துக்களை அறிவதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் தலைவராகச் செயற்பட்டவரும் சட்டத்தரணியுமான லால் விஜேநாயக்க தெரிவித்தார். இலங்கையில் இடம்பெற்றவை எனக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு வெளிநாட்டு நீதிபதிகளையும் உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றப் பொறிமுறை அவசியம் என்று ஐ.நா. மனித உரிமைகள் பேரவை …
Read More »கேப்பாபிலவுக் காணிகள் நிச்சயம் விடுவிக்கப்படும்! – சம்பந்தனிடம் இராணுவத் தளபதி உறுதி
முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்பிலவில் இராணுவத்தினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகள் நிச்சயமாக விடுவிக்கப்படும் என்று இராணுவத் தளபதி கிரிஷாந்த டி சில்வா, நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனிடம் உறுதியளித்துள்ளார். இந்தத் தகவலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். கேப்பாப்பிலவில் உள்ள 468 ஏக்கர் காணியை இராணுவத்தினர் கைப்பற்றி வைத்துள்ளனர். இராணுவத் தலைமையகமும் அதில் அமைந்துள்ளது. இந்தக் காணியை விடுவிக்குமாறு கோரி …
Read More »காணிகளை உடன் விடுவிக்காவிடின் மக்களுடன் இணைந்து போராடுவோம்! – கேப்பாப்பிலவில்வைத்து மாவை எம்.பி. அரசுக்கு எச்சரிக்கை
“தொடர் அமைதிவழிப் போராட்டத்தின் மூலம் மக்கள் பெற்ற பலத்தைப் பிரயோகித்து விரைவில் காணிகள் விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். இல்லாதுபோனால் நாங்களும் மக்களாகிய உங்களுடன் இணைந்து அரசுக்கு எதிராகவும், இராணுவத்துக்கு எதிராகவும் போராடுவோம்.” – இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். கேப்பாப்பிலவில் உள்ள பூர்வீக நிலங்களான 138 குடும்பங்களுக்குச் சொந்தமான 482 ஏக்கர் காணிகளை விடுவிக்கக் கோரி …
Read More »உறவுகளின் கண்ணீரைத் துடைக்க சர்வதேசத்துக்கும் இலங்கை அரசுக்கும் அழுத்தம் கொடுப்போம்! – முல்லைத்தீவில் மாவை
“காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கண்ணீரைத் துடிக்க சர்வதேச சமூத்திடமும், இலங்கை அரசிடமும் தன்னாலான அழுத்தங்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொடுக்கும்.” – இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்ட மக்கள் மாவட்ட செயலத்துக்கு முன்னால் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டி கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டக் களத்துக்கு நேற்று நேரில் சென்று ஆதரவைத் …
Read More »சர்வதேசம் தமிழர் பக்கம்! அச்சத்தில் மைத்திரி அரசு!! – சுமந்திரன் சுட்டுக்காட்டு
“சர்வதேச சமூகம் தமிழர்களுடன் இருப்பதைக் கண்டு மைத்திரி அரசு பயப்படுகின்றது. எனவே, சர்வதேச சமூகத்தை இன்னும் கூடுதலாக இறுக்கிக்கொண்டு நாங்கள் வெற்றி பெற வேண்டும். அதை விடுத்து சர்வதேச சமூகத்தினரை அடித்து விரட்டுகின்ற அடிமுட்டாள்தனமான காரியங்களில் தமிழர்கள் ஈடுபடக்கூடாது.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். வடமராட்சி கிழக்கு, கட்டைக்காட்டுப் பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு …
Read More »வத்துகாமத்தில் உடைந்து விழுந்தது பாடசாலைக் கூரை! – 26 மாணவர்கள் காயம்
கண்டி, வத்துகாமம் கல்வி வலயத்திலுள்ள சிரிமல்வத்தை நவோதயப் பாடசாலையின் நேற்றுக் கூரை உடைந்து விழுந்ததில் 26 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். தரம் 5 வகுப்பில் நடந்த இவ்விபத்தில் இயற்கைக்கடன் கழிக்கச் சென்ற ஒரு மாவணைத்தவிர ஏனைய அனைவரும் காயமடைந்து கண்டி வைத்திய சாலையின் 70ஆம் வார்ட்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவத்தையடுத்து குறித்த பாடசாலை வளாகத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. தரம் 5 வகுப்பு மாணவர்களின் பெற்றோர் பதறியடித்துக்கொண்டு கதறியபடியே …
Read More »தமிழர் தாயகத்தில் தொடர்கின்றது உறவுகளின் கவனயீர்ப்புப் போராட்டம்!
காணாமல்போனோரின் உறவினர்களால் கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டுவரும் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று வெள்ளிக்கிழமை 40ஆவது நாளாகவும் தொடர்கின்றது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வெளிப்படுத்தலையும், விடுதலையையும் வலிறுத்தி உறவினர்கள் தமிழர் தாயகத்தில் காலவரையற்ற கவனயீர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்தனர். இந்தப் போராட்டம் வடக்கு, கிழக்கில் 5 மாவட்டங்களில் இன்றும் தொடர்கின்றது. “உறுதியான தீர்வு கிடைக்கும்வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை. எம்மை வீதியில் விட்டு வேடிக்கை பார்ப்பதை விடுத்து தீர்வைப் பெற்றுத் தரவேண்டும்” என்று காணாமல்போனோரின் உறவினர்கள் கூறியுள்ளனர். …
Read More »