“வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான ஊழல், மோசடி குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை அறிக்கை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்துப் பேசவேண்டும். அதன்போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்க்கமான முடிவை நாம் எடுக்கவேண்டும்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம், நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெற்றபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இந்தக் கூட்டத்தில் …
Read More »விசாரணை அறிக்கை விவகாரம் முடியும் வரை பதவியிலிருந்து ஒதுங்கியிருக்க விரும்பும் குருகுலராஜா!
வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான ஊழல், மோசடி விசாரணை அறிக்கை விவகாரம் முடியும் வரையில் தனது பதவியிலிருந்து ஒதுங்கியிருக்க விரும்புவதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு அறிவித்துள்ளார். தமிழரசுக் கட்சிக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் அமைச்சர் த.குருகுலராஜா கையெழுத்திடவில்லை என்பதால், இதனைக் கவனத்திலெடுக்கத் தேவையில்லை என்று கட்சித் தலைமை கூறியுள்ளது எனத் தெரியவருகின்றது. வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான ஊழல், மோசடி குற்றச்சாட்டுகள் விசாரணை அறிக்கை …
Read More »வடக்கு அமைச்சர்கள் ஊழல், மோசடி விவகாரம்: தமிழரசுக் கட்சி உறுப்பினர்களுக்கு வாய்ப்பூட்டு
வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை தொடர்பாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் எவரும் கருத்து வெளியிடவேண்டாம் என்று அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. அத்துடன், வடக்கு மாகாண சபையின் விசேட அமர்வுக்கு முன்னதாக இன்று 12ஆம் திகதி திங்கட்கிழமை இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் சந்தித்துப் பேசவுள்ளனர் எனவும் தெரியவருகின்றது. வடக்கு மாகாண சபையின் அமைச்சர்கள் மீதான …
Read More »வடக்கு அமைச்சர்கள் மீதான ஊழல், மோசடி: சரியாகவே நடந்தது விசாரணைக் குழு என்கிறார் விக்கி
“வடக்கு மாகாண சபையின் அமைச்சர்கள் மீதான ஊழல் மற்றும் நிர்வாக முறைகேடுகள் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு சரியாகத்தான் செயற்பட்டது. அமைச்சர்கள், விசாரணைக் குழு முன்பாக தங்களது குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்வதற்கு அவகாசம் வழங்கப்பட்டது. விசாரணைக் குழு உரிய முறையில்தான் செயற்பட்டது.” – இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சபையில் தெரிவித்தார். “பொதுவாகக் குற்றச்சாட்டுகள் எமது உறுப்பினர்களாலேயே முன்வைக்கப்பட்டுள்ளன. உறுப்பினர்கள் நால்வரான அமைச்சர்கள் மீது மற்றைய …
Read More »வடக்கு அமைச்சர்களான ஐங்கரநேசன், குருகுலராஜாவை பதவியிலிருந்து நீக்குங்கள்! – பரிந்துரைத்தது விசாரணைக் குழு
வடக்கு அமைச்சர்களான ஐங்கரநேசன், குருகுலராஜாவை பதவியிலிருந்து நீக்குங்கள்! – பரிந்துரைத்தது விசாரணைக் குழு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வடக்கு மாகாண சபையின் அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு தனது அறிக்கையில் இரு அமைச்சர்கள் உடன் பதவி விலகவேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. விவசாயமும் கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் மற்றும் கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டு மற்றும் …
Read More »போர்க்குற்றங்களை மூடிமறைக்கமுடியாது! – சபையில் சம்பந்தன் எடுத்துரைப்பு
போர்க்குற்றங்களை மூடிமறைக்கமுடியாது! – சபையில் சம்பந்தன் எடுத்துரைப்பு “ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் இலங்கைக்கு எதிரானது அல்ல. எனவே, அதை நிறைவேற்றும் கடப்பாடு அரசுக்கு இருக்கின்றது. தண்டனையிலிருந்து தப்பும் கலாசாரம் இனியும் தொடரக்கூடாது.” – இவ்வாறு நாடாளுமன்றில் வலியுறுத்தினார் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன். ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானம் குறித்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை …
Read More »5 தமிழர்களைக் கொன்ற பொலிஸார் இருவருக்கு மரணதண்டனை! – இருபது வருடங்களுக்குப் பின் தீர்ப்பு
அம்பாறையில் 5 தமிழர்களை சுட்டுக் கொலைசெய்த சம்பவத்தில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவருக்கு அம்பாறை சிவில் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசரும் அம்பாறை மேல்நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசருமான சுமுது பிரேமச்சந்திர மரணதண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார். அம்பாறை மாவட்டத்தில் பணிபுரிந்த முன்னாள் கான்ஸ்டபிள்களான ஆர்.பி.காமினி குமாரசிங்க மற்றும் ஜே.எம்.நிமல் குணரத்ன ஆகிய இருவருக்குமே மரணதண்டனை வழங்கப்பட்டுள்ளது எனவும், இந்தச் சம்பவத்தின் மற்றொரு சந்தேகநபரான ஏ.டபிள்யூ.வசந்தகுமார எனும் கான்ஸ்டபிள் வழக்கு விசாரணை நடைபெற்ற …
Read More »லண்டன் தாக்குதல்களைக் கண்டிக்கிறது நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
லண்டன் தாக்குதல்களைக் கண்டிக்கிறது நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் லண்டன் தொடர் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், அரசுகளும், அரசல்லாதோரும் அப்பாவிப் பொதுமக்கள் மீது நடத்தி வரும் வன்செயல்கள் குறித்து, செஞ்சிலுவைச் சங்கத்தின் 1977ம் மாநாட்டினை மீள நடத்துமாறு அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- மானிட விழுமியங்களைக் கிஞ்சிற்றும் மதிக்காமல் லண்டனில் அப்பாவி மக்களைப் படுகொலை செய்ததும் காயப்படுத்தியதுமான …
Read More »இராணுவத்தினருக்கு தண்டனை வழங்குக! – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வலியுறுத்து
“இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல்போனவர்கள், இராணுவத்தினரால் கொலைசெய்யப்பட்டிருக்கலாம் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். எனவே, அதற்குரிய ஆதாரங்களையும் வெளியிடவேண்டும். இராணுவம் அவர்களைக் கொலைசெய்துவிட்டதென்றால், குற்றத்தை மேற்கொண்டவர்களுக்குத் தண்டனையை வழங்க வேண்டியதுதானே.” – இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களை மீட்டுத்தருமாறு கோரி வடக்கு, கிழக்கில் தொடர் கவனயீர்ப்புப் போராட்டங்களை நடத்திவருகின்ற அவர்களின் உறவினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டவர்கள் ராஜபக்ஷ ஆட்சியில் இராணுவத்தினரால் கொலைசெய்யப்பட்டிருக்கலாம் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா …
Read More »தீவிரவாதத் தாக்குதல்களால் பீதியில் உறைந்தது லண்டன்! 7 பேர் பலி; 48 பேர் படுகாயம்!!
தாக்குதல்தாரிகள் மூவர் சுட்டுக்கொலை நகரமெங்கும் உச்சக்கட்டப் பாதுகாப்பு உலகத் தலைவர்கள் கடும் கண்டனம் பிரிட்டனின் தலைநகரான லண்டனில் நேற்றுமுன்தினம் இரவும், நேற்று அதிகாலையும் நடத்தப்பட்டுள்ள தொடர் தீவிரவாதத் தாக்குதல்களால் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல்களில் குறைந்தது 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 48இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். அதேவேளை, தாக்குதல்களை மேற்கொண்ட மூவர் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். மூன்று மாத காலப்பகுதியில் பிரிட்டனில் இடம்பெற்றுள்ள மூன்றாவது தாக்குதல் இதுவென்பதுடன் பொதுத்தேர்தலிற்கு சில நாட்களுக்கு முன்னர் …
Read More »