உள்ளூராட்சி சபைத் தேர்தலை மேலும் ஒத்திவைப்பதற்காக அரசு ஞானசார தேரரின் விவகாரத்தில் சர்வதேசத்தின் கவனத்தைத் திசைதிருப்பிக்கொண்டிருப்பதாக மஹிந்த அணியான பொது எதிரணியின் பேச்சாளர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளவை வருமாறு:- “உள்ளூராட்சி சபைத் தேர்தலைத் தள்ளிப்போடுவதற்கு இந்த அரசு ஏற்கனவே பல நொண்டிச்சாட்டுக்களைக் கூறி வந்திருக்கிறது. இப்போது ஞானசார தேரரின் விவகாரத்தைப் பூதாகரமாக்கி சர்வதேச சமூகத்தின் கவனத்தைத் திசைதிருப்ப முயற்சி செய்துகொண்டிருக்கின்றது. உள்ளூராட்சி சபைத் …
Read More »ஞானசார தேரர் பற்றிய ராஜிதவின் கருத்துக்கு சிஹல ராவய கடும் கண்டனம்!
ஞானசார தேரர் அமைச்சர் ஒருவரின் பாதுகாப்பில் இருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் டாக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்திருக்கும் கருத்துக்கு சிஹல ராவய கட்சியின் பொதுச் செயலாளர் மாகல்கந்த சுதத்த தேரர் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். ஞானசார தேரரைக் கைதுசெய்வதற்கான நீதிமன்றப் பிடியாணை விடுக்கப்பட்டுள்ள போதிலும் அவர் அமைச்சர் ஒருவரின் பாதுகாப்பில் இருப்பதாக சந்தேகிக்கப்படுவதால் அவரைக் கைதுசெய்ய முடியாமல் இருப்பதாக கடந்த புதன்கிழமை டாக்டர் ராஜித சேனாரத்ன கூறியிருக்கிறார் எனவும், அவர் உண்மையைப் …
Read More »வடக்கு மாகாண சபையில் சுழற்சி முறை ஆசனம் யாருக்கு? – தமிழரசுக் கட்சி, புளொட் கடும் போட்டி
வடக்கு மாகாண சபையின் ஆளும் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நியமன ஆசனத்தை இந்த ஆண்டு, சுழற்சி முறையில் யாருக்கு வழங்குவது என்பது தொடர்பில் ஒருமித்த நிலைப்பாடு இன்னமும் எட்டப்படவில்லை என்று அறியமுடிகின்றது. புளொட் அமைப்பு தமக்கே அந்த ஆசனம் வழங்கப்பட வேண்டும் என்று பகிரங்கமாகக் கோரிக்கை விடுத்துள்ளது. ஏற்கனவே எட்டப்பட்ட உடன்பாட்டுக்கு அமைவாக இலங்கைத் தமிழரசுக் கட்சி தமக்கே வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளதாக அறியமுடிகின்றது. இதனால் இந்த …
Read More »மகஸின் சிறை, ரத்துபஸ்வல துப்பாக்கிச்சூடுகளுக்கு கோட்டாவே காரணம்! – தண்டிக்கப்பட வேண்டும் என்று இடதுசாரி நிலையம் வலியுறுத்து
மகஸின் சிறைச்சாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு, ரத்துபஸ்வலவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு ஆகிய இரு சம்பவங்களும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவுக்கு அமையவே இடம்பெற்றது என இடதுசாரி நிலையம் குற்றம்சாட்டியுள்ளது. குற்றமிழைத்தவர்களைவிட குற்றங்களுக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் இடதுசாரி நிலையம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் இடதுசாரி நிலையத்தின் ஒருங்கிணைப்பாளர் சமீர பெரேரா மேலும் கூறியுள்ளதாவது:- “வசீம் தாஜுதீன் படுகொலை செய்யப்பட்டமை இந்த அரசு ஆட்சிக்கு …
Read More »வொஷிங்டன் செயலமர்வில் கரு, சரா, புத்திக பங்கேற்பு!
ஜனநாயக பங்கேற்றல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி ஊடாக பொதுமக்களின் பாதுகாப்பை வலுவூட்டுவதில் நாடாளுமன்றத்தின் வகிபாகம் என்ற தொனிப்பொருளில் அமெரிக்க தலைநகர் வொஷிங்டனில் விசேட செயலமர்வு நேற்று 12 ஆம் திகதி ஆரம்பமாகியுள்ளது. இந்தச் செயலமர்வு எதிர்வரும் 16 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்த விசேட செயலமர்வில் இலங்கை, டுனீசியா, கொலம்பியா, நேபாளம் மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். குறித்த நாடுகள் அரசியல் ரீதியான …
Read More »கொழும்பில் பிச்சையெடுக்கும் சிறுவர்களைப் பிடிக்க பொலிஸார் தீவிர நடவடிக்கை! – மூன்று மாதங்களில் 18 பேர் கைது
“கொழும்பிலும் அதனை அண்மித்த பகுதிகளிலும் பிச்சையெடுக்கும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகமாகியிருப்பதால் அவர்களைப் பிடிப்பதற்கான தீவிர நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்” என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரியந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார். கடந்த மூன்று மாதங்களில் 18 சிறுவர்கள் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர் எனவும், இவர்கள் மூலமாக இவர்களைப் பிச்சையெடுக்கும் தொழிலில் ஈடுபடுத்துபவர்களைக் கைதுசெய்து சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டிருக்கின்றன எனவும் அவர் கூறியுள்ளார். “கடந்த மூன்று மாதங்களில் கைதுசெய்யப்பட்ட 18 …
Read More »நாட்டைக் கட்டியெழுப்பும் சந்தர்ப்பமாக அனர்த்தத்தைப் பயன்படுத்த வேண்டும்! – ஜப்பானியத் தூதுவா் தெரிவிப்பு
அனர்த்தம் ஏற்படும்போது அதனை மேலும் பாதுகாப்பான நெகிழ்திறன் கொண்ட நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான சந்தா்ப்பமாகப் பயன்படுத்த வேண்டும் என இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவா் கெனிச்சி சுகனுமா தெரிவித்துள்ளார். ஜப்பானிய குழு வெள்ளம் மற்றும் மண்சாிவுகளுக்கான காரணத்தை ஆராய்ந்ததுள்ளதோடு, பல திட்டங்களையும் பரிந்துரைத்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் இலங்கையின் தென் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு மற்றும் மண்சாிவுகள் தொடா்பாக ஆய்வு மேற்கொண்ட ஜப்பானிய அனா்த்த நிவாரண நிபுணா் குழு, அதன் …
Read More »வெள்ளம், வறட்சியால் 14 இலட்சம் பேர் பாதிப்பு! – அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிக்கை
அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்காலும், மண்சரிவுகளாலும் சுமார் ஆறு இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை, எட்டு இலட்சத்து 49 ஆயிரத்து 752 பேர் வறட்சியால் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில் தரப்பட்டுள்ள ஏனைய தகவல்கள் வருமாறு:- வடக்கிலும் கிழக்கிலும் எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த 2 இலட்சத்து 43 ஆயிரத்து 683 குடும்பங்களைச் சேர்ந்த எட்டு இலட்சத்து 49 ஆயிரத்து 752 பேர் கடும் …
Read More »வடக்கு, கிழக்குக்கு சமஷ்டி வழங்க அமெரிக்கா திட்டம்! – கம்மன்பில குற்றச்சாட்டு
“வடக்கு, கிழக்குக்கு சமஷ்டி தீர்வைக் கொடுப்பதில் குறியாக உள்ளது அமெரிக்கா. இதற்காக திட்டமிட்ட அடிப்படையில் இங்கு பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தி வருகின்றது.” – இவ்வாறு மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குற்றஞ்சாட்டியுள்ளார். “தங்களின் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக இங்கு செயற்கையான பொருளாதார வீழ்ச்சி ஏற்படுவதைச் சில நாடுகள் விரும்புகின்றன. அந்த நாடுகளே சதிசெய்து பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்துகின்றன” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- …
Read More »ரணிலுடன் இணைந்திருப்பதால் மைத்திரியை வெறுக்கின்றோம்! – மஹிந்த அணி விளக்கம்
“நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி 106 ஆசனங்களைப் பெற்றதும் அந்தக் கட்சி தனித்து ஆட்சியமைப்பதற்கு ஜனாதிபதி அனுமதித்திருக்கவேண்டும். அதனுடன் இணைந்து கூட்டாட்சி அமைத்திருக்கக்கூடாது. அவ்வாறு செய்ததால் நன்மை ஐக்கிய தேசியக் கட்சிக்குத்தான். இதனால்தான் எம்மால் மைத்திரியின் தலைமைத்துவத்தை ஏற்று அவருடன் இணைந்து செயலாற்றமுடியாமல் உள்ளது.” – இவ்வாறு மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், “நான் ஸ்ரீலங்கா சுதந்திரக் …
Read More »