இலங்கையில் மனித உரிமைகள் பாதுகாப்பு மற்றும் ஊக்குவிப்பு விடயத்தில் ஐ.நாவின் தலையீடுகள் தொடர்பாக, கொழும்பு வந்திருந்த ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளருக்கும் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவுக்கும் இடையில் காரசாரமான வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது. ஆங்கில ஊடகம் ஒன்று இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது. ஐந்து நாட்கள் பயணமாக மனித உரிமைகள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு குறித்த ஐ.நா. சிறப்பு அறிக்கையாளரான பென் எமர்சன், ஐந்து நாட்கள் விஜயமாக கடந்த 10ஆம் திகதி இலங்கைக்கு …
Read More »மைத்திரி, ரணிலுடன் அடுத்த வாரம் கேப்பாப்பிலவு மக்கள் நேரில் பேச்சு!
கேப்பாப்பிலவில் மண்மீட்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை அடுத்த வாரம் நேரில் சந்தித்து நீதி கோரப்போகின்றார்கள். இந்தச் சந்திப்புக்கான முயற்சிகளைத் தான் மேற்கொண்டுள்ளார் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். கேப்பாப்பிலவு மக்கள் 136 நாட்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். 138 குடும்பங்களுக்கு சொந்தமான 482 ஏக்கர் …
Read More »புதிய அரசமைப்புக்கு முன்னரே வருகின்றது தேர்தல் சட்டத் திருத்தம்! – உள்ளூராட்சித் தேர்தலை நடத்தும் திட்டத்துடன் தேசிய அரசு முயற்சி
புதிய அரசமைப்புக்கு முன்னதாகவே தேர்தல் திருத்தச் சட்டவரைபு நாடாளுமன்றத்துக்குக் கொண்டுவரப்படும் என்று கொழும்பு அரசியல் வட்டாரங்கள் எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளன. உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தும் நோக்குடனேயே இந்தச் சட்டவரைபைக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அறியமுடிகின்றது. புதிய அரசமைப்பில் தொகுதிவாரிப் பிரதிநித்துவம் 60 சதவீதமும், விகிதாசாரப் பிரதிநிதித்துவம் 40 சதவீதமுமாகக் கலப்பு முறையில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்த இணக்கம் காணப்பட்டுள்ளது. மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை எந்த …
Read More »முஸ்லிம் கூட்டமைப்பில் இணைந்துகொள்ளுமா மு.கா?
கிழக்கு மாகாணத்தை மையப்படுத்தி ஆரம்பிக்கப்படவுள்ள முஸ்லிம் கூட்டமைப்பில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியையும் இணைத்துக்கொள்வதற்கான பேச்சுகள் இடம்பெறவுள்ளன எனத் தெரிவிக்கப்படுகின்றது. முஸ்லிம் கூட்டமைப்பை ஆரம்பிப்பதற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி மற்றும் ஹசனலி தரப்பினர் கொள்கையளவில் இணக்கம் தெரிவித்துள்ள நிலையில், இறுதிக்கட்டப் பேச்சு எதிர்வரும் கிழமைகளில் கொழும்பில் இடம்பெறவுள்ளது. கொழும்பில் நடைபெறவுள்ள பேச்சு முடிந்ததன் பின்னர் ஸ்ரீலங்கா …
Read More »புதிய அரசமைப்பு அறவே வேண்டாம்! – நடவடிக்கைளை உடனே நிறுத்தக் கோருகிறார் எஸ்.பி.
“புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கான மக்கள் ஆணை இந்த அரசுக்கு இல்லை. மக்கள் ஆணை இல்லாத ஒரு செயலை எம்மால் செய்யமுடியாது. ஆகவே, புதிய அரசமைப்பை உருவாக்கும் முயற்சியை இத்தோடு நிறுத்திக்கொள்வதுதான் நல்லது.” – இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:- “புதிய அரசமைப்பொன்றைக் கொண்டுவருவதற்கான ஆணையை ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்களிடம் கோரின. ஆனால், எந்தக் …
Read More »2020இல் ஜனாதிபதியாக கோட்டா: அச்சமடைகின்றது தேசிய அரசு! – அதனாலேயே அவரைக் கைதுசெய்ய திட்டம் என்கிறார் மஹிந்தானந்த எம்.பி.
“2020ஆம் ஆண்டில் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப்போகின்றார் என்ற பயத்தின் காரணமாக அவரைக் கைதுசெய்து சிறையிலடைப்பதற்கு தேசிய அரசு திட்டமிட்டுள்ளது.” – இவ்வாறு மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளவை வருமாறு:- “மஹிந்த அணிக்கான செல்வாக்கு நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டு வருவதால் அந்தச் செல்வாக்கை எப்படியாவது குறைத்துவிடுவதற்கு தேசிய அரசு திட்டமிடுகின்றது. அந்தச் செல்வாக்குக்குப் பயந்துதான் உள்ளூராட்சி சபைத் தேர்தலை …
Read More »போர்க்குற்ற விசாரணை இலங்கையில் படுதோல்வி! – அரசின் போக்குக் குறித்து ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் காட்டம்
ஐ.நா. தீர்மானங்களை நிறைவேற்றுகின்ற விடயத்தில் இலங்கை அரசின் நடவடிக்கைகள் முடக்க நிலைக்குள்ளாகியுள்ளதாகத் தெரிகின்றதென இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள மனித உரிமைககள் மற்றும் தீவிரவாத எதிர்ப்பு தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன் தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் பணிமனையில் நேற்று மாலை இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கவலை வெளியிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “ஐக்கிய நாடுகள் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இரண்டு ஆண்டுகள் …
Read More »இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான சித்திரவதை தொடர்கின்றது! – உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச செயற்றிட்டம் குற்றச்சாட்டு
இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான அரசின் சித்திரவதையும், பாலியல் துஷ்பிரயோகமும் தொடர்கின்றன என்று உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச செயற்றிட்டம் குற்றம்சாட்டியுள்ளது. பாதுகாப்புப் படையினர் தமிழர்களைக் கடத்துவதும், சித்திரவதை செய்வதும் புதிய அரசு பதவியேற்று 30 மாதங்கள் கடந்தும் தொடர்கின்றது எனவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையில் தொடரும் தமிழர்களுக்கு எதிரான இவ்வாறான செயற்பாடுகளைத் தடுப்பதற்குப் புதிய அரசும் தவறியுள்ளது எனவும் உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச செயற்றிட்டம் குறிப்பிட்டுள்ளது. இலங்கையில் …
Read More »வடக்கின் 4 அமைச்சர்களையும் ஒரேயடியாக நீக்கினால் விக்கியும் தனது அமைச்சு பொறுப்புகளை துறக்கவேண்டும்! – மாவை வலியுறுத்து
“வடக்கு மாகாண சபையின் நான்கு அமைச்சர்களையும் ஒரேயடியாக மாற்றும் முயற்சியில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஈடுபட்டுள்ளார். வரம்பு மீறிச் செயற்படும் அவரின் இந்த நடவடிக்கையை நாம் ஏற்றுக்கொள்ளமாட்டோம். விசாரணைக்குழுவின் பரிந்துரைக்கிணங்க குற்றவாளிகளான இரு அமைச்சர்களை மட்டும் அவர் பதவிநீக்கம் செய்து புதியவர்களை நியமிக்கவேண்டும். இதைவிடுத்து குற்றவாளிகளுடன் நிரபராதிகளான அமைச்சர்களையும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மாற்றினால் அவரும் தனது அமைச்சுப் பொறுப்புக்களை உடன் துறக்கவேண்டும். புதியவர்களை நியமிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் …
Read More »வடக்கு அமைச்சர்கள் விவகாரம்: விக்கியுடன் சம்பந்தன் தொலைபேசியில் பேச்சு!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வடக்கு மாகாண சபையின் நான்கு அமைச்சர்களையும் பிரதான பங்காளிக் கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன் கலந்தாலோசிக்காமல் ஒரேயடியாக மாற்றும் முயற்சியில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஈடுபட்டுள்ள நிலையில், அவருடன் கூட்டமைப்பின் தலைவரும் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவருமான இரா.சம்பந்தன் நேற்று தொலைபேசியில் திடீரென உரையாடியுள்ளார். இந்த அவசர உரையாடலில் பேசப்பட்ட விடயங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. எனினும், இந்த உரையாடலின்போது வரம்பு மீறிய வடக்கு …
Read More »