“ஐக்கிய தேசியக் கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து கூட்டரசமைப்பது நாட்டுக்குப் பெரும் ஆபத்தாக அமையும். அத்துடன், அது ஸ்திரமற்ற அரசியல் நிலைமையையே தோற்றுவிக்கும்.” – இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்தது. இவ்விடயம் உட்பட மேலும் சில காரணிகளைக் கருத்தில்கொண்டே தேசிய அரசமைக்கும் முடிவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எடுத்தது என்று அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகவியலாளர் மாநாடு …
Read More »நல்லிணக்கத்தைப் பலப்படுத்தும் மைத்திரியின் முயற்சிகளுக்கு சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் பாராட்டு!
“நல்லிணக்கத்தைப் பலப்படுத்துவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்டுவரும் முயற்சிகள் பாராட்டத்தக்கவை” என்று சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்தார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துக் கலந்துரையாடியபோதே அவர் இதனைக் கூறினார். இன்று புதன்கிழமை யாழ். பொது நூலகத்துக்கு விஜயம்செய்து நூல்களை அன்பளிப்புச் செய்யவுள்ளதாகவும், நூலக ஊழியர்களுக்கு பயிற்சி வசதிகளை வழங்கும் உடன்படிக்கையில் கைச்சாத்திடவுள்ளதாகவும் அவர் இதன்போது கூறினார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் எலும்பு இயல் …
Read More »போர்க்களமானது வடமத்திய மாகாண சபை! – ஆளும் கட்சி – எதிர்க்கட்சி கைகலப்பு; பலர் காயம்
வடமத்திய மாகாண சபையின் தவிசாளருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டிருந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை சபையின் ஒழுங்குப்பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டிருந்ததால் ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்குமிடையில் நேற்றுக் கைகலப்பு ஏற்பட்டு சபை வன்முறைக் களமாக மாறியிருந்தது. வடமத்திய மாகாண சபையின் தவிசாளருக்கு எதிராக சபையில் அங்கம் வகிக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் 11 உறுப்பினர்களால் முன்னர் சமர்ப்பிக்கப்பட்டிருந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை பல எதிர்ப்புகளையடுத்து நிராகரிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், உள்ளூராட்சி சபை செயலாளரின் பரிந்துரைக்கமைய நேற்று சபை நடவடிக்கைகளுக்கான ஒழுங்குப்பத்திரத்தில் நம்பிக்கையில்லாப் …
Read More »ரெலோவின் அடுத்த அமைச்சர் யார்? இன்றுதான் முடிவு அறிவிப்பு! – செல்வம் தெரிவிப்பு
“எமது கட்சியின் சார்பில் யாரை அமைச்சராக நியமிப்பது என்பது குறித்து இன்றுதான் நாம் முடிவை அறிவிப்போம்.” – இவ்வாறு ரெலோ அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். வடக்கு மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணத்தின் பெயரை, கட்சியின் செயலாளர் ந.சிறீகாந்தா முதலமைச்சருக்கு எழுத்துமூலமாக நேற்று அறிவித்துள்ளமை தொடர்பில் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- “எமது கட்சியின் சார்பில் அமைச்சராக யாரை நியமிப்பது …
Read More »டெனீஸ்வரனுக்குப் பதிலாக விந்தனை அமைச்சராக நியமிக்குமாறு முதலமைச்சருக்கு ரெலோ பரிந்துரை!
வடக்கு மாகாண அமைச்சரவையில் தமது கட்சியின் சார்பில் போக்குவரத்து, மீன்பிடி, வர்த்தக வாணிப, கிராம அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி அமைச்சராக நியமிக்கப்பட்ட பா.டெனீஸ்வரனை, அந்தப் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, தமது கட்சியைச் சேர்ந்த மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணத்தை அமைச்சராக நியமிக்குமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு ரெலோ நேற்றுக் கடிதம் அனுப்பியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ரெலோவின் சார்பில் வடக்கு மாகாண அமைச்சரவையில் …
Read More »சம்பந்தன் – விக்கி இவ்வார இறுதியில் கொழும்பில் சந்திப்பு!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்குமிடையிலான சந்திப்பு இந்த வார இறுதியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது பெரும்பாலும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஒருநாள் கொழும்பில் இருவரும் சந்தித்துப் பேசுவர் என அறியமுடிகின்றது முதலமைச்சர் விக்னேஸ்வரன் எதிர்வரும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கொழும்பில் நிற்பார் எனக் கூறப்படுகின்றது. அந்தவேளையில், பெரும்பாலும் சனி அல்லது ஞாயிற்றுக்கிழமையன்று கொழும்பு இசுப்பத்தான வீதியிலுள்ள சிரேஷ்ட சட்டத்தரணி கனக ஈஸ்வரனின் இல்லத்தில் இந்தச் …
Read More »சர்வகட்சிப் பேரவையை அமைக்கிறார் மைத்திரி!
புதிய அரசமைப்புத் தொடர்பில் பெளத்த மகா நாயக்க தேரர்கள் சுமத்திய குற்றச்சாட்டுக்களைத் தொடர்ந்து சர்வகட்சிப் பேரவை ஒன்றைக் கூட்டுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. அரசமைப்புப் பேரவையாக மாறியுள்ள நாடாளுமன்றத்தில் உருவாக்கப்படும் புதிய அரசமைப்பு வரைவுத் திட்டத்திற்குச் சர்வகட்சிப் பேரவையின் ஊடாக அனுமதி பெற்றுக் கொள்ள ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார் என்றும் – அரசமைப்பு யோசனைகள் தயாரிக்கப்பட்டதும் சர்வ கட்சிப் பேரவை கூட்டப்படும் என்றும் கூறப்பட்டது. நாடாளுமன்றைப் பிரதிநிதித்துவம் …
Read More »டெனீஸ்வரனைப் பதவி நீக்க ரெலோவோ, வடக்கு முதல்வரோ என்னுடன் ஆலோசிக்கவில்லை! – சம்பந்தன் தெரிவிப்பு
“வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து, வர்த்தக வாணிப, கிராம அபிவிருத்தி மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனீஸ்வரனைப் பதவிநீக்குவதற்கான நடவடிக்கை எடுப்பது தொடர்பில் ரெலோவோ அல்லது வடக்கு மாகாண முதலமைச்சரோ என்னுடன் கலந்தாலோசிக்கவில்லை.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். ரெலோ அமைப்பு வடக்கு மாகாண முதலமைச்சருக்குக் கடந்த 13ஆம் திகதி கடிதம் அனுப்பியிருந்தது. தமது கட்சி சார்பான தங்கள் அமைச்சரவையிலுள்ள பா.டெனீஸ்வரனை …
Read More »இலங்கை வருகிறார் ஆஸி. வெளிவிவகார அமைச்சர் ஜூலி!
ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிசப் இந்த வாரம் இலங்கைக்கு வருகை தரவுள்ளார். இலங்கை வரும் அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் முக்கிய அமைச்சர்கள் சிலரையும் சந்திக்கவுள்ளார். இரு தரப்பு பாதுகாப்பு மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் அவர் பேச்சுகளில் ஈடுபடவுள்ளார். டெங்குக் காய்ச்சலைத் தடுக்க ஆஸ்திரேலியா வழங்கும் உதவி குறித்தும் ஜனாதிபதியுடன் …
Read More »அரசியல் தீர்வு, பொருளாதார நிலைமை தொடர்பில் சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சருடன் பேசவுள்ளேன்! – சம்பந்தன் தெரிவிப்பு
இலங்கைக்கு நேற்றிரவு பயணம் மேற்கொண்ட சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் விவியன் பாலகிருஷ்ணன் கொழும்பில் இன்று முக்கிய சந்திப்புகளை நடத்தவுள்ளார். இரண்டு நாட்கள் பயணமாக கொழும்புவந்த அவருக்கு கட்டுநாயக்க விமானநிலையத்தில் நேற்றிரவு வரவேற்பளிக்கப்பட்டது. இன்று பிற்பகல் ஒரு மணியளவில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவை அவர் சந்திக்கவுள்ளார். இந்தச் சந்திப்பையடுத்து இவ்விரு அமைச்சர்களும் இணைந்து கூட்டு ஊடகவியலாளர் மாநாடொன்றை நடத்தவுள்ளனர். அதன்பின்னர் பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் …
Read More »