Friday , August 29 2025
Home / பார்த்தீபன் (page 23)

பார்த்தீபன்

தடைகள் யாவும் நீக்கம்; விரைவில் குட்டித் தேர்தல்! – நம்பிக்கை வெளியிடுகின்றார் உள்ளூராட்சி அமைச்சர் பைசர்

உள்ளூராட்சி சபைத் தேர்தலை விரைவில் நடத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தப்பா தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:- “உள்ளூராட்சி சபைத் தேர்தலை விரைவில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. தேர்தல் முறையில் தொகுதி மற்றும் விகிதாசார அடிப்படையில் ஆசனங்களை ஒதுக்கீடுசெய்வது குறித்தும், பெண்களுக்கு 25 வீத வாய்ப்பளிப்பது குறித்தும் பேச்சுகள் நடைபெற்றுவருகின்றன. நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கான சட்டமூலம், பேச்சுகளையடுத்து …

Read More »

அரசிலிருந்து எவரும் வெளியேறமாட்டர்! – டிசம்பரில் சு.கவின் முடிவை அறிவிப்போம் என்கிறார் துமிந்த

“வீடு என்றால் ஆயிரம் சண்டை இருக்கும். சாதாரண சண்டைக்காக உடனே எவரும் வெளியேறமாட்டார்கள். டிசம்பர் மாத இறுதியில் தேசிய அரசில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொடர்ந்து இருக்குமா? இல்லையா? என்று அறிவிப்போம்.” – இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் விவசாய அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “தேசிய அரசில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்பட்டுவரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து சிலர் விலகவுள்ளனர் …

Read More »

2025 வரை நல்லாட்சி அரசின் பயணத்தை எவராலும் நிறுத்தவே முடியாது! – அடித்துக் கூறுகின்றார் ராஜித

“நல்லாட்சி அரசு அதன் கோட்பாடுகளை முன்னோக்கிக் கொண்டுசெல்வதில் உறுதிபூண்டுள்ளது. எவரும் அச்சம்கொள்ளத் தேவையில்லை.” – இவ்வாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அத்துடன், இரண்டு பிரதான தேசியக் கட்சிகளும் இணைந்து அமைத்துக்கொண்ட தேசிய அரசு (நல்லாட்சி அரசு) 2020ஆம் ஆண்டுவரை தொடரும் எனவும், 2020ஆம் ஆண்டு தேர்தலின் பின்னர் 2025ஆம் ஆண்டுவரை ஒப்பந்தம் புதுப்பிக்கப்படும் என்றும் அவர் கூறினார். ஜப்பானிய வேலைத்திட்டத்தின்கீழ் கல்கமுவயில் அமைக்கப்படும் வைத்தியசாலையின் பணிகளை ஆரம்பித்துவைக்கும் …

Read More »

அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பான ராஜிதவின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது! – அருட்தந்தை சக்திவேல் தெரிவிப்பு  

தெற்கில் புரட்சியில் ஈடுபட்டவர்களை விடுதலைசெய்ததுபோல், அரசியல் கைதிகளையும் விடுவிக்கவேண்டும் எனத் தாம் அமைச்சரவை சந்திப்பில்  தெரிவித்தார் என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்திருக்கும் கருத்தை அரசியல் கைதிகளை விடுதலைசெய்வதற்கான தேசிய அமைப்பு வரவேற்றுள்ளது. இது தொடர்பாக கருத்து வெளியிட்ட அவ்வமைப்பின் ஏற்பாட்டாளர் அருட்தந்தை மா. சக்திவேல் கூறியவை வருமாறு:- “தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாஷைகள் மட்டுமல்ல, காணிப் பிரச்சினை, மீள்குடியேற்றம், காணாமற்போனோர் விடயங்கள் என்பவற்றில் தீர்க்கமான முடிவெடுக்க முடியாது. நல்லாட்சி …

Read More »

சு.கவின் மாநாட்டுக்கு மஹிந்த அணிக்கும் அழைப்பு!

“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 66ஆவது மாநாட்டு நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு மஹிந்த அணியான பொது எதிரணி உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படவுள்ளது”  என்று அக்கட்சியின் இளைஞர் அணியின் தலைவர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார். கடந்த வருடத்தைவிட சிறப்பாக நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் நாட்டுக்குத் தேவையான அதிமுக்கிய தீர்மானங்கள் பல பிரகடனப்படுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவை சரிசெய்துகொள்வதற்கும், கட்சியின் பாரம்பரியத்தையும் கட்டுக்கோப்பையும் பாதுகாத்துக்கொள்வதற்கும் பொது எதிரணியினர் உட்பட …

Read More »

சு.கவின் 66ஆவது மாநாட்டை கொழும்பில் நடத்த ஏற்பாடு! – அமைச்சர் அமரவீர அறிவிப்பு

“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 66ஆவது மாநாட்டை மிகவும் பயனுள்ளதாக நடத்துவதற்கான ஏற்பாட்டை கட்சியின் மத்திய குழு முன்னெடுத்துவருகின்றது”  என்று மீன்பிடி அமைச்சரும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 65ஆவது மாநாடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் குருநாகலையில் கடந்த வருடம் சிறப்பாக நடைபெற்றது. இம்முறை 66ஆவது மாநாட்டை கொழும்பில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. செப்டெம்பர் மாதம் 2ஆம் …

Read More »

ஐ.தே.கவின் 71ஆவது ஆண்டு விழாவிலும் மைத்திரி பிரதம அதிதி!

செல்வநாயகம் ஒத்துழைத்திருந்தால் பிரபாகரன்

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 6ஆம் திகதி வரவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் 71ஆவது நிறைவுக் கொண்டாட்டத்துக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பிரதம அதிதியாக அழைப்பதற்கு முடிவெடுக்கப்பட்டிருப்பதாக சிறிகொத்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த செப்டெம்பர் மாதம் அக்கட்சியின் 70ஆவது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டம் பொரளை கெம்பல் மைதானத்தில் நடந்தபோதும் ஜனாதிபதி மைத்திரிபால அதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். கடந்த வாரம் நடைபெற்ற கட்சியின் நிறைவேற்றுக்குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது எனவும், …

Read More »

அரசு விசாரணை செய்யத் தவறினால் ஐ.நாவே நேரில் களமிறங்கும்! – எச்சரிக்கின்றார் ஆயர் கிங்ஸிலி சுவாம்பிள்ளை 

“இலங்கையில் காணாமலாக்கப்பட்டோர் மற்றும் கடத்தப்பட்டவர்கள் குறித்து இலங்கை அரசு மறந்துபோனாலும் ஐ.நாவில் உள்ளோரும் அதிகாரிகளும் மறந்துபோகவில்லை. அவர்கள் அளவுக்கு மிஞ்சி அமைதி காக்கமாட்டார்கள். சந்தர்ப்பம் வரும்போது அவர்களே நேரடியாக இங்கு இறங்கும் கட்டம் வரும். ஐ.நா. அதிகாரிகளே வந்து போர்க்குற்றச்சாட்டுக் குறித்து ஆராயும் சூழ்நிலைகூட ஏற்படலாம்.” – இவ்வாறு எச்சரித்திருக்கின்றார் மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் வணக்கத்துக்குரிய ஆயர் ஜோஸப் கிங்ஸிலி  சுவாம்பிள்ளை. அவர் மேலும் தெரிவிக்கையில், “காணாமலாக்கப்பட்ட மற்றும் …

Read More »

மறுபடியும் ஜனாதிபதியாக களமிறங்குவார் மைத்திரி! – 2020இல் தனியாட்சியே குறிக்கோள் என்கிறது சு.க.

2020இல் தனியாட்சி அமைப்பதே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் குறிக்கோளாக இருக்கின்றது என்றும், ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவே களமிறங்குவார் என்றும் அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல் ஆகிய இரண்டுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் மஹிந்த ராஜபக்ஷ …

Read More »

மீண்டும் ரணில் தலைமையில் நாளை கூடுகின்றது அரசமைப்பு வழிகாட்டல் குழு!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க

கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் நடைபெறவிருந்து பின்னர் ஒத்திவைக்கப்பட்ட அரசமைப்புப் பேரவையின் வழிகாட்டல் குழுவின் கூட்டம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நாளை வியாழக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடவடிக்கைக் குழுவின் இடைக்கால அறிக்கையை எப்படியாயினும் இந்த மாத முடிவுக்கு முன்னர் இறுதிசெய்து பூர்த்தியாக்கிவிடவேண்டும் என்பதில் உறுதியாகவுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அதன் காரணமாக நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெறும் சமயம் என்று பார்க்காமல் வழிகாட்டல் குழுவின் …

Read More »