தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் வடக்கு மாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனுக்குமிடையிலான சந்திப்பு கொழும்பிலுள்ள ஜனாதிபதி சட்டத்தரணி கனகஈஸ்வரனின் இல்லத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வடக்கு மாகாண சபையின் நிலைமைகள் தொடர்பில் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுடன் சந்தித்துக் கலந்துரையாடிய பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது என இணக்கம் காணப்பட்டுள்ளது. அத்துடன், ஊழல், மோசடிகள் குறித்து தெரிவுக்குழு அமைக்கப்படவேண்டும் எனக் …
Read More »இளஞ்செழியனுக்கு 17 வருடங்கள் நம்பிக்கைக்குரியவராக இருந்த மெய்ப்பாதுகாவலர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மீதான துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த அவரது மெய்ப்பாதுகாவலர்களில் ஒருவரான பொலிஸ் சார்ஜன்ட் சரத் ஹேமச்சந்திர (வயது – 51) இன்று அதிகாலை உயிரிழந்தார். அவர் ஆபத்தான கட்டத்தில் நேற்று மாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. இவரது பிஸ்டலைப் பறித்தே தாக்குதல்தாரி துப்பாக்கிச்சூடு நடத்தியிருந்தார். வலது வயிற்றுப்பகுதியால் உட்புகுந்த துப்பாக்கிச் சன்னம் இடது வயிற்றுப் பக்கத்தால் வெளியேறியுள்ளது. …
Read More »நீதிபதி இளஞ்செழியன் இலக்குவைக்கப்பட்டமையை மிக வன்மையாகக் கண்டிக்கின்றது கூட்டமைப்பு!
யாழ்ப்பாணம் மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் பயணித்த வாகனத்தின் மீது யாழ்.நல்லூர் கோயில் பின் வீதியில் வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிக்கின்றது எனக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- “யாழ். மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் வாகனத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை தமிழ்த் தேசியக் …
Read More »இலங்கை மீது ஐ.நா. உன்னிப்பான கவனம்! – சம்பந்தனிடன் எடுத்துரைத்தார் ஜெப்ரி பெல்ட்மன்
“இலங்கை அரசின் செயற்பாடுகளை ஐ.நா. செயலாளர் நாயகம் உட்பட்ட ஐ.நா. சமூகமானது உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருக்கின்றது.” – இவ்வாறு தெரிவித்தார் ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் நாயகம் ஜெப்ரி பெல்ட்மன். “புதிய அரசமைப்பின் உள்ளடக்கமும் உருவாக்கும் நடைமுறைகளும் நீண்டகால அரசியல் தீர்வுக்கு மாத்திரமன்றி, நாட்டின் அபிவிருத்திக்கும் செழிப்புக்கும் மிக அத்தியாவசியமானதாகும்” எனவும் அவர் சுட்டிக்காட்டினார். இலங்கைக்கு விஜயம்செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் …
Read More »மஹிந்த அணியைச் சேர்ந்த 11 பேர் அமைச்சுப் பதவிகளுடன் ஐ.தே.கவில் இணையத் தயாராம்!
“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் அரசில் இருந்து விலகி மஹிந்த அணியில் இணைந்தால் மஹிந்த அணியைச் சேர்ந்த 11 பேர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து அமைச்சுப் பதவிகளைப் பெறுவதற்குத் தயாராக இருக்கின்றனர். அது தொடர்பில் இரகசியப் பேச்சு நடைபெற்று வருகின்றது.” – இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் அணித் தலைவரும் முன்னாள் அமைச்சருமான சாந்த பண்டார சிங்கள ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் …
Read More »யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் பயணித்த வாகனம் மீது துப்பாக்கிச்சூடு! – மெய்ப்பாதுகாவலர்கள் இருவர் காயம்
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் பயணித்த வாகனம் மீது இனந்தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இதனால் நீதிபதி மா.இளஞ்செழியனின் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் இருவர் காயமடைந்துள்ளனர். யாழ்ப்பாணம் நல்லூர் – பின் வீதியில் இன்று மாலை 5.30 மணியளவில் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் பயணித்த வாகனத்தை வழிமறித்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இதன்போது நீதிபதி மா.இளஞ்செழியனின் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் …
Read More »பொது எதிரணியின் இறுதி அஸ்திரமாகிறார் கோட்டா! – மக்கள் செல்வாக்கை நாடிபிடித்துப் பார்க்க உள்ளூராட்சி தேர்தல் ஆய்வுக் களமாகின்றது
இலங்கையில் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்கு முயற்சித்துவரும் மஹிந்த அணியான பொது எதிரணி, இதற்கான தமது இறுதி அரசியல் அஸ்திரமாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவையே முழுமையாக நம்பியிருக்கின்றது எனத் தெரியவருகின்றது. இதன்படி மக்கள் மத்தியிலுள்ள அவருக்குள்ள செல்வாக்கை நாடிபிடித்துப் பார்ப்பதற்கான பரீட்சைக் களமாகவே உள்ளூராட்சி சபைத் தேர்தலை பொது எதிரணி கையாளும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்ட பொது எதிரணி உறுப்பினர் ஒருவர், கோட்டாபயவையும், …
Read More »புதிய அரசமைப்பு உருவாவதைத் தடுக்க மஹிந்த அணியினர் இருமுனைத் தாக்குதல்!
புதிய அரசமைப்பொன்றை இயற்றும் தேசிய அரசின் முயற்சியைத் தோற்கடிப்பதற்கு இருமுனைத் தாக்குதலை நடத்துவதற்கு மஹிந்த அணியான பொது எதிரணி தீர்மானித்துள்ளது. சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக பொது எதிரணி உறுப்பினர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்றுமுன்தினம் கூடினர். கொழும்பு, விஜயராம மாவத்தையில் அமைந்துள்ள மஹிந்தவின் இல்லத்தில் நடைபெற்ற மேற்படி சந்திப்பில், அரசமைப்பு மீளமைப்பு பணி, உள்ளூராட்சி சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம், வெளிநாட்டுப் பிரமுகர்களில் இலங்கைப் …
Read More »உள்ளூராட்சி தேர்தலில் சிறுபான்மைக் கட்சிகள் யானைச் சின்னத்திலேயே களமிறங்கும்! – கூட்டமைப்பு , ஜே.வி.பி. தனிவழிப்பயணம்
உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்வரும் டிசம்பரில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், அத்தேர்தலை எதிர்கொள்வதற்காக பிரதான கட்சிகள் தயாராகி வருகின்றன. குறித்த தேர்தல் கலப்பு முறையிலேயே நடைபெறவுள்ளதுடன், அதற்குரிய திருத்தச் சட்டமூலம் அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. ஆளுங்கட்சியின் பிரதான பங்காளியான ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய தேசிய முன்னணி என்ற கூட்டமைப்பின்கீழ் யானைச் சின்னத்தில் களமிறங்கவுள்ளது. சிறுகட்சிகள் பல ஐ.தே.கவுடன் கைகோர்க்கவுள்ளன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், …
Read More »வடக்கு மாகாண சபை விவகாரம்: சம்பந்தன் – விக்கி சந்திப்புக்கு இன்னும் திகதி முடிவாகவில்லை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வடக்கு மாகாண சபையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் குறித்து கலந்து பேசித் தீர்ப்பதற்காக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் இந்த வார இறுதியில் சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப் பட்ட போதிலும் இதுவரை அந்தச் சந்திப்புக்கான ஒழுங்குகள் இறுதிசெய்யப்பட வில்லை. இருவருக்கும் பொதுவான நண்பரான ஜனாதிபதி சட்டத்தரணி கனகஈஸ்வரனின் பங்கு பற்றுதலுடன் இந்தச் சந்திப்பு நடைபெறுகின்றமையை சம்பந்தன் விரும்புகின்றார் எனக் கூறப்படுகின்றது. சட்டத்தரணி …
Read More »