Friday , August 29 2025
Home / பார்த்தீபன் (page 21)

பார்த்தீபன்

வடக்கு, கிழக்கில் இன்று கண்டனப் பேரணிகள்!

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தை கண்டித்து, வடக்கு கிழக்கில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு கண்டனப் பேரணிகள் நடைபெறவிருக்கின்றன. இந்தக் கண்டனப் பேரணிகளை வடக்கு, கிழக்கு ஒருங்கமைப்புக் குழு ஏற்பாடு செய்துள்ளது. அந்தக் குழு அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- “யாழ்ப்பாணம் நல்லூர்ப்பகுதியில் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி அவர்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை, மிக வன்மையாகக் கண்டிக்கின்றோம். இந்தச் சம்பவமானது …

Read More »

நீதிபதி இளஞ்செழியன் மீதான தாக்குதலுக்கு எதிராக வடக்கு முழுவதும் போராட்டங்கள்!

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனை இலக்குவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து வடக்கு மாகாணம் முழுவதும் நேற்றுப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. வடக்கு மாகாண தனியார் பஸ் உரிமையாளர்கள் நேற்றுப் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தனியார் பஸ் சேவைகள் வடக்கில் நேற்று இடம்பெறவில்லை. அதேவேளை, வடக்கு மாகாணத்துக்கு உட்பட்ட திணைக்களங்கள் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் கவனயீர்ப்புப் போராட்டங்கள் நேற்று முன்னெடுக்கப்பட்டன. திணைக்களங்கள் மற்றும் …

Read More »

இம்மாத இறுதிக்குள் கேப்பாப்பிலவு காணிகள் விடுவிக்கப்பட வேண்டும்! – ஜனாதிபதிக்கு சம்பந்தன் அவசர கடிதம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்பிலவில் காணிகள் விடுவிக்கப்படும் என்று ஒரு மாதத்துக்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய வாக்குறுதியை மீளவும் நினைவூட்டிய எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், அந்தக் காணிகள் மாத இறுதிக்குள் விடுவிப்பதற்கு உடன் நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைத்துள்ள அவசர கடிதத்திலேயே அவர் மேற்படி கோரிக்கையை முன்வைத்துள்ளார். அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:- “கடந்த மே மாதம் 18ஆம் திகதி நானும் நாடாளுமன்ற உறுப்பினர் …

Read More »

காணாமல்போனோர் குறித்தும் ஜனாதிபதிக்கு சம்பந்தன் கடிதம்!

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயம் தொடர்பிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் அவசர கடிதம் அனுப்பிவைத்துள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- “காணாமல்போனவர்களுடைய விடயம் மிகவும் பாரதூரமான ஒரு விடயம் என்பதையும், இப்பிரச்சினைக்கான தீர்வைக் கோரி வடக்கு, கிழக்கில் காணாமல்போனவர்களின் குடும்ப உறவினர்களால் பல மாதகாலமாகப் போராட்டங்கள் நடாத்தப்பட்டு வருவதையும் தாங்கள் அறிவீர்கள். இந்தக் குடும்பங்களில் அதிகம் பேர் தமது உறவினர்களைப் பாதுகாப்புப் படையினரிடம் கையளித்தவர்கள் அல்லது தமது உறவினர்கள் பாதுகாப்புப் …

Read More »

நல்லூர் சம்பவம் தொடர்பில் அரசு விழிப்பாகவே இருக்க வேண்டும்! – மஹிந்த கூறுகின்றார் 

யாழ்.நல்லூரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பில் அரசு ஆழகாக சிந்தித்துச்செயற்படவேண்டும் எனக் கூறியுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, விடுதலைப்புலிகள் அமைப்பு உருவாகும் காலப்பகுதியில் இவ்வாறான சம்பவங்களே வடக்கில் இடம்பெற்றன எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். அம்பாந்தோட்டை, வீரகெட்டிய பகுதியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர், நல்லூர் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் குறித்து ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:- “யாழ்ப்பாணத்தில் பொலிஸ்அதிகாரிகள் இருவர் …

Read More »

நீதிபதி இளஞ்செழியன் மீதான தாகுத்தல்: மல்வத்து பீடமும் கடும் கண்டனம்!

யாழ்ப்பாணம் மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மீதான தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாக, பௌத்த மக்களின் முக்கிய பீடங்களில் ஒன்றான மல்வத்து பீடம் தெரிவித்துள்ளது. “இந்த ஆட்சியில் நீதித்துறை சுயாதீனமாகச் செயற்பட வேண்டும். ஆயுதங்களால் அதனை அச்சுறுத்தி அடிபணிய வைக்க முடியாது. இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் உடன் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். தாக்குதலாளிகள் சட்டத்தின் முன்நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்” என்று மல்வத்து பீடம் குறிப்பிட்டுள்ளது.

Read More »

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று மீண்டும் பணிப்பகிஷ்கரிப்பு!

சைட்டம் எனப்படும் மாலபே தனியார் வைத்திய கல்லூரியை பொதுவுடமையாக்குமாறு கோரி அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று மீண்டும் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்தில் குதித்துள்ளது. இன்று காலை 8 மணிமுதல் நாட்டின் அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படும். மாலபே தனியார் வைத்திய கல்லூரியை அரசுடமையாக்குமாறு கோரி அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தொடர்ச்சியாக கடந்த மாதம் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்திருந்தது. எனினும், இம்மாத ஆரம்பத்தில் மீண்டும் பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொள்வதாக அரச …

Read More »

இளஞ்செழியன் இலக்குவைக்கப்பட்டமைக்கு விக்கி கடும் கண்டனம்! – உயிரிழந்த மெய்ப்பாதுகாவலருக்கு ஆழ்ந்த இரங்கல்

“யாழ்.நல்லூர் பகுதியில் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனை மிக வன்மையாகக் கண்டிக்கின்றேன். இந்தத் தாக்குதல் சம்பவத்தில் உயிர்நீத்த பொலிஸ் சார்ஜன்ட் சரத் ஹேமச்சந்திரவின் மறைவு அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.” – இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு விக்னேஸ்வரன் கூறியுள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- கடமையில் ஈடுபட்டிருந்தபோது உயிர் …

Read More »

இளஞ்செழியன் உட்பட அனைத்து நீதிபதிகளினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துக! – பொலிஸ்மா அதிபருக்கு ஜனாதிபதி பணிப்புரை 

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் பயணம்செய்தவேளை நேற்றுமுன்தினம் மாலை  நல்லூர் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தை வன்மையாகக் கண்டித்துள்ளார்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. அந்தச்  சம்பவத்தில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரி சரத் ஹேமச்சந்திரவின் மறைவுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவத்தையடுத்து நீதிபதி இளஞ்செழியனின் பாதுகாப்பு குறித்து கவனஞ்செலுத்தியுள்ள ஜனாதிபதி, அனைத்து நீதிபதிகளினதும் பாதுகாப்பு தொடர்பில் விசேட நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துமாறு பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். விசேட …

Read More »

மஹிந்த அணியின் அரச எதிர்ப்புத் தினமன்று தேசிய அரசு பிளவடையும் சாத்தியம்!

தேசிய அரசிலிருந்து விலகி  நாடாளுமன்றில் சுயாதீனமாக இயங்கப்போவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 18 உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் அறிவித்திருந்த நிலையில், இவர்களில் சிலர் கடந்த வாரம் கூட்டு எதிரணியுடன் இரகசிய சந்திப்பொன்றை நடத்தியுள்ளனர் எனத் தெரியவருகின்றது. தேசிய அரசை இரண்டாக பிளவுப்படுத்தும் நோக்கில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பலவழிகளிலும் நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றார். மக்கள் மத்தியிலும், நாட்டில் தொழிற்சங்கங்கள் மற்றும் சில அரச மற்றும் தனியார் தரப்பினருடன் அரசுக்கு ஏற்பட்டுள்ள முரண்பாடு …

Read More »