முல்லைத்தீவு, கேப்பாப்பிலவு காணி விடுவிப்பு விடயம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அக்கறையோடு செயற்படுகின்றார் அவரின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கேப்பாப்பிலவில் இராணுவம் வசமுள்ள மக்களின் காணிகளை ஒரு மாதத்துக்குள் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதிக்கு கடந்த வாரம் அனுப்பிய கடிதத்தில் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் குறிப்பிட்டிருந்தார். இந்தக் கடிதத்துக்கு ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ பதில் அனுப்பியுள்ளார். அதிலேயே அவர் மேற்கண்டவாறு …
Read More »காணி விடுவிப்பு: தீர்வு கிடைக்கும்வரை தொடர்ந்து பேசுவோம் என்கிறார் சம்பந்தன்!
“கேப்பாப்பிலவு காணி விடுவிப்பு விடயம் தொடர்பில் தீர்வொன்றைப் பெறும் முகமாக ஜனாதிபதி, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் இராணுவத் தளபதி ஆகியோருடனான கலந்துரையாடல்களை நாம் தொடர்ந்தும் மேற்கொள்ளுவோம்” என்று எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். மேற்படி காணி விடுவிப்பு விடயம் தொடர்பில் ஜனாதிபதியின் நிலைப்பாட்டைத் தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனுக்கு செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ கடிதம் அனுப்பியுள்ளார். இது தொடர்பில் வினவியபோதே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு …
Read More »அமைச்சுப் பதவியை உடனடியாக இராஜிநாமா செய்க! – ரவியிடம் பந்துல வலியுறுத்து
அமைச்சர் ரவி கருணாநாயக்க உடனடியாக தனது அமைச்சுப் பதவியை இராஜிநாமா செய்யவேண்டும் என்று மஹிந்த அணியான பொது எதிரணி வலியுறுத்தியுள்ளது. கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொது எதிரணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- “முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பெற்றுக்கொண்ட கடனை அடைப்பதாகக் கூறி இவர்கள் செய்த வேலை என்ன? அது பாரிய கொள்ளையாகும். வரலாற்றில் …
Read More »யாழில் இரு பொலிஸார் மீது துரத்தித் துரத்தி வாள்வெட்டு! – படுகாயங்களுடன் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்ப்பு
யாழ்ப்பாணத்தில் இரண்டு பொலிஸார் மீது இனந்தெரியாத இளைஞர்கள் குழுவினரால் துரத்தித் துரத்தி வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொலிஸார் இருவரும் கொக்குவில், பொற்பதி வீதிப் பகுதியில் நேற்றுப் பிற்பகல் மோட்டார் சைக்கிளில் கண்காணிப்புப் பணியில் சென்றுகொண்டிருந்தபோதே இந்தத் துணிகரத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. வாள்வெட்டுக்கு இலக்காகிப் படுகாயமடைந்த இரண்டு பொலிஸாரும் யாழ். போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். 5 மோட்டார்சைக்கிள்களில் வந்த 10 இற்கும் மேற்பட்ட இளைஞர்கள் துரத்தித் துரத்தி இந்தத் …
Read More »நீதிபதி இளஞ்செழியன் மீது திட்டமிட்டே துப்பாக்கிச்சூடு! – வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் தெரிவிப்பு
“யாழ்ப்பாணம் மேல்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனைக் கொலைசெய்யும் திட்டத்துடனேயே அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது” என்று வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:- “நல்லூரில் கடந்த 22ஆம் திகதி நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் நீதிபதி இளஞ்செழியனே இலக்குவைக்கப்பட்டிருக்கின்றார். அவரது மெய்ப்பாதுகாவலரான சிங்கள பொலிஸ் உத்தியோகத்தரே தனது உயிரைக் கொடுத்து நீதிபதியைக் காப்பாற்றியுள்ளார். துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த தனது மெய்ப்பாதுகாவலரான பொலிஸ் உத்தியோகத்தரின் குடும்பத்தினரைக் கண்டதும் …
Read More »தப்புமா ரவியின் பதவி? ஓகஸ்ட் 2இன் பின்பே முடிவு! – நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு அரச தரப்பிலும் ஆதரவு
வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக மஹிந்த அணியான பொது எதிரணி கொண்டுவருவதற்கு உத்தேசித்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு தேசிய அரசிலுள்ள உறுப்பினர்கள் சிலரும் ஆதரவு வழங்க முன்வந்துள்ளனர். பிணைமுறி விநியோக மோசடி தொடர்பில் விசாரணை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் எதிர்வரும் 2ஆம் திகதி ஆஜராகி வெளிவிவகார அமைச்சர் வாக்குமூலமளிக்கவுள்ளார். அதன்போது அவர் வெளியிடும் தகவல்களை அடிப்படையாகக்கொண்டே அடுத்தகட்ட நகர்வு அரசியல் களத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது. குறிப்பாக, தேசிய அரசுக்குப் பெரும் …
Read More »துமிந்தவின் பதவியை பறிக்கவே வேண்டாம்! – அவர் சிறந்த இளம் தலைவர் என்கிறார் அமரவீர
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவிலிருந்து அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவை நீக்கவேண்டுமென அக்கட்சியின் ஊடகப் பேச்சாளரான இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா வலியுறுத்தியுள்ள நிலையில், அதற்குரிய தேவைப்பாடு இல்லையென அமைச்சர் மஹிந்த அமரவீர கூறியுள்ளார். துமிந்த திஸாநாயக்க சிறந்த இளம் தலைவராகச் செயற்பட்டுவருகின்றார் என்று சு.கவின் முக்கியஸ்தரான அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் கூறியுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நெருங்கிய சகாக்களுள் ஒருவராகக் கருதப்படும் அமைச்சர் மஹிந்த அமரவீர, …
Read More »ரவியை நீக்குவது நாட்டுக்கு நல்லது! – துமிந்தவை நீக்குவது சு.கவுக்கு நல்லது என்கிறார் டிலான்
“ரவி கருணாநாயக்க அமைச்சுப் பதவியிலிருந்தும் துமிந்த திஸாநாயக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்தும் நீக்கப்படவேண்டும்” என்று அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். ரவியை நீக்குவது நாட்டுக்கு நல்லது எனவும், துமிந்தவை நீக்குவது கட்சிக்கு நல்லது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:- “2020இல் தனித்து ஆட்சியமைக்கவேண்டும் என்ற இலக்குடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பயணித்துக்கொண்டிருக்கின்றது. ஆனால், அந்த இலக்கை அடையமுடியாமல் சில தடைகள் …
Read More »புதிய அரசமைப்பு மூலம் நிரந்தர தீர்வு கிடைக்கும்! – சம்பந்தன் நம்பிக்கை
புதிய அரசமைப்பை உருவாக்கும் அரசின் முயற்சி ஊடாக இனப்பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ‘த ஹிந்து’ பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலிலேயே இரா.சம்பந்தன் இந்த நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அந்த நேர்காணலில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:- “இலங்கை தொடர்பான இந்தியாவின் நலன்கள் என்பது பொருளாதாரம் மற்றும் மூலோபாய விடயங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றல்ல. தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்ப்பதிலும் இந்தியா …
Read More »தமிழரின் பிரச்சினைகளுக்கு உடன் தீர்வு வழங்கவேண்டும்! – கனேடியத் தூதுவரிடம் சம்பந்தன் வலியுறுத்து
“தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு இலங்கை அரசு காலத்தை இழுத்தடிக்காமல் உடன் தீர்வு வழங்கவேண்டும். இதற்கு கனேடிய அரசு உள்ளிட்ட சர்வதேச சமூகம் இலங்கை அரசுக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கவேண்டும்.” – இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். இலங்கைக்கான கனேடியத் தூதுவர் ஷெல்லி வைற்றிங், எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனை சந்தித்துக் கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பு நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள …
Read More »