“வடக்கு மாகாண மீன்பிடி மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் பா.டெனீஸ்வரன் தனது பதவியிலிருந்து விலக மறுத்திருப்பதும், கட்சி தனக்கு முக்கியமல்ல என்று தெரிவத்திருப்பதும் வேதனையை ஏற்படுத்தியிருக்கிறது” என்று ரெலோ அமைப்பின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். வடக்கு மாகாண அமைச்சரவைக் குழப்பங்களைத் தொடர்ந்து அமைச்சர் டெனீஸ்வரனை பதவியிலிருந்து விலகுமாறு கட்சி கேட்டுக்கொண்டது. ஆனால், அவர் மறுத்துவிட்டார். அதனையடுத்து அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர் கட்சியின் உயர்மட்டக் …
Read More »பாலச்சந்திரன் படையினராலேயே படுகொலை! – எரிக் சொல்ஹெய்ம் தெரிவிப்பு
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன், படையினரால் பிடிக்கப்பட்டே படுகொலை செய்யப்பட்டார் என்று தாம் வலுவாக சந்தேகிப்பதாகவும், இது ஒரு மோசமான தீய செயல் என்றும் தெரிவித்துள்ளார் இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம். விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான பேச்சுக்களிலும், அமைதி முயற்சிகளிலும் நடுநிலையாளராகப் பங்கேற்ற எரிக் சொல்ஹெய்ம், சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே இவ்வாறு கூறியுள்ளார். “பிரபாகரன் எப்படிக் …
Read More »புதிய அரசமைப்பு: இடைக்கால அறிக்கை விரைவில் என்கிறார் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல!
புதிய அரசமைப்பை உருவாக்குவது தொடர்பில் சில இணக்கப்பாடுகள் காணப்பட்டுள்ளன எனவும், வெகுவிரைவில் அரசமைப்பு உருவாக்கம் தொடர்பான இடைக்கால அறிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் எனவும் உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தின் 25ஆவது ஆண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர், முதல் இரண்டு அரசமைப்புகளிலும் தமிழ்த் தரப்பின் பங்கேற்பு இருக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்த நாடு 30 வருட மிலேச்சத்தனமான …
Read More »இனியும் சிறந்ததோர் அமைச்சரவையை முதல்வர் விக்கியால் அமைக்க முடியுமா? – கூட்டமைப்பு எம்.பி. சிறிதரன் கேள்வி
சிறந்ததோர் அமைச்சர் வாரியத்தை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் இனி அமைக்க முடியுமா என்பதே தற்போதைய சந்தேகம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்தார். வவுனியா கனகராயன்குளம் புதுக்குளத்தில் தங்கம்மா முதியோர் இல்லம் கலாநிதி முருகர் குணசிங்கத்தால் அமைக்கப்பட்டு திறந்துவைக்கும் நிகழ்விலும், ‘இலங்கைத் தமிழர்’ நூல் வெளியீட்டு நிகழ்விலும் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “2013ஆம் ஆண்டு வடக்கு …
Read More »‘மூதேவி ஆட்சி’க்கு ஆண்டுகள் இரண்டு! – மஹிந்த அணி கொழும்பில் நாளை போராட்டம்
தேசிய அரசின் இரண்டாண்டுப் பூர்த்தியை இலங்கைக்கு மூதேவி பிடித்த நாளாகப் பிரகடனப்படுத்தி கொழும்பில் நாளை வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டப் பேரணியை மஹிந்த அணியான பொது எதிரணி நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. கொழும்பு லிப்டன் சந்தியில் நாளை மாலை 3 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகளை பொது எதிரணி மும்முரமாக செய்து வருகின்றது. 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி இலங்கையில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசு …
Read More »ஹசனலியை மீண்டும் மு.காவுக்குள் கொண்டுவர ஹக்கீம் கடும் பிரயத்தனம்!
தூய முஸ்லிம் காங்கிரஸின் ஏற்பாட்டாளரான எம்.ரி.ஹசனலிக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்கி முஸ்லிம் கூட்டமைப்பு உருவாவதைத் தடுப்பதற்கான காய்நகர்த்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் ஈடுபட்டுள்ளார் என நம்பகரமாகத் தெரியவருகின்றது. முஸ்லிம் காங்கிரஸ் கட்சியிலிருந்து தூரமாகி இன்று தூய முஸ்லிம் காங்கிரஸ் கட்சியாக மக்கள் மத்தியில் களமிறங்கியுள்ள ஹசனலி மற்றும் பசீர் சேகுதாவூத் தரப்பு எதிர்வரும் தேர்தல்களில் முஸ்லிம் கூட்டமைப்பாக போட்டியிடுவதற்கான பேச்சுகளில் …
Read More »சம்மாந்துறை நௌசாத்தை மு.காவில் இணைக்கப் பேச்சு!
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சம்மாந்துறைப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான ஏ.எம்.நௌசாத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்துகொள்ளுமாறு அக்கட்சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் வேண்டுகோள் விடுத்துள்ளார் என்று நம்பகரமாகத் தெரியவருகின்றது. சம்மாந்துறைப் பிரதேசத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கான ஆதரவு மிகவும் பின்னடைந்து காணப்படும் நிலையில் எதிர்வரும் தேர்தல்களை எதிர்நோக்கும் வகையில் முன்னாள் எம்.பி. நௌசாத்தை கட்சியில் இணைப்பதற்கு அமைச்சர் ஹக்கீம் விரும்பியுள்ளார். அந்தவகையில் ஏ.எம்.நௌசாத்துடன் மு.காவினர் பேச்சில …
Read More »மஹிந்த அரசின் மோசடிகள்: ‘ட்ரயல் அட்பார்’ மூலம் விசாரணை! – இனித்தான் அதிரடி நடவடிக்கை என்கிறார் ராஜித
“மஹிந்த ஆட்சியின்போது இடம்பெற்ற பாரிய ஊழல், மோசடிகள் தொடர்பான வழக்கு விசாரணைகளைத் துரிதப்படுத்துவதற்காக மேல்நீதிமன்றத்தில் “ட்ரயல் அட்பார்’ முறையில் விசாரணை நடத்துவதற்கு அமைச்சரவையில் இணக்கம் காணப்பட்டுள்ளது” என்று அமைச்சரவை இணைப் பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். இதைச் செய்வதற்கு அரசமைப்பில் மாற்றம் கொண்டுவரவேண்டியதில்லை எனச் சுட்டிக்காட்டிய அவர், நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவின் செயற்பாடுகளையும் கடுமையாக விமர்சித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரச தகவல் …
Read More »பறிபோகுமா விஜயதாஸவின் அமைச்சுப் பதவி? – இன்று கூடுகின்றது ஐ.தே.கவின் செயற்குழு
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று நடைபெறவுள்ளது. நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவுக்கு எதிரான குரல்கள் ஐ.தே.கவுக்குள் வலுப்பெற்றுள்ள நிலையில், அவரின் அமைச்சுப் பதவியைப் பறிப்பதற்கான தீர்மானம் இன்றைய கூட்டத்தில் எடுக்கப்படும் சாத்தியம் காணப்படுகின்றது என கட்சியின் தகவல் அறியும் வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. அம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம் குறித்த அமைச்சரவையின் …
Read More »மாகாண சபைத் தேர்தல்களை ஒத்திவைப்பதற்காக அல்ல 20ஆவது திருத்தம் என்கிறது அரசு!
மாகாண சபைத் தேர்தல்களை ஒத்திவைக்கும் நோக்கிலேயே 20ஆவது அரசமைப்புத் திருத்தச் சட்டம் முன்வைக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவலை அரசு நிராகரித்தது. “மாகாண சபைத் தேர்தல்களை ஒரே நாளில் நடத்துவதே ’20’இன் நோக்கம். மாறாக ஒத்திவைப்புக்கான நடவடிக்கை அல்ல” என்று அமைச்சரவை இணைப் பேச்சாளரான அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதன்போது அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்துக்கு …
Read More »