தன்னை மீண்டும் கைதுசெய்யும் முயற்சி இடம்பெறுகின்றது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த மகனும் அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த அரசுக்கு எதிராகச் செயற்படுகின்ற அரசியல்வாதிகளைக் கைதுசெய்யும் நடவடிக்கை தொடருகின்றது எனவும் அவர் கூறியுள்ளார். அதேவேளை, வசீம் தாஜுதீனின் கொலை விவகாரம் தன்னுடைய தம்பியின் காதலியிடமிருந்து ஆரம்பமாகி தனது அம்மா வரை வந்து முடிந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். “மக்கள் விடுதலை முன்னணியின் …
Read More »புதிய உள்ளூராட்சி சபைகள் சட்டமூலம் 24ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு!
மறுசீரமைக்கப்பட்ட புதிய உள்ளூராட்சி சபைகள் சட்டமூலம் எதிர்வரும் 24ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. உள்ளூராட்சி சபைகள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவால் இந்தச் சட்டமூலம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. சிவில் அமைப்புகள் மற்றும் பொதுமக்களின் கருத்துகளை உள்ளடக்கிய வகையில் புதிய சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும், தேசிய அரசின் பங்காளிக் கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் பொது இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே இந்தச் சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது எனவும் அரசு தெரிவித்துள்ளது. 2012ஆம் ஆண்டு …
Read More »‘ட்ரயல் அட்பார்’ யோசனை ராஜிதவின் அப்பாவித்தனத்துக்கு எடுத்துக்காட்டு! – இப்படிக் கூறுகின்றது மஹிந்த அணி
ராஜபக்ஷ குடும்பத்தினர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கு ‘ட்ரயல் அட்பார்’ நீதிமன்றம் அமைக்கப்படவேண்டுமென அமைச்சரவை இணைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன கூறியிருக்கும் யோசனை அவரது அப்பாவித்தனத்துக்கு நல்லதொரு உதாரணமென மஹிந்த அணியான பொது எதிரணியின் உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு அவர் மேலும் கூறியுள்ளதாவது:- “ராஜித நினைப்பதுபோல தனி நீதிமன்றம் என்பது கிள்ளுக்கீரை வியாபாரமல்ல. தனிநபரொருவர் மீதோ அவரது குடும்பத்தினர் மீதோ …
Read More »மஹிந்தவுடன் இணையாதீர்; மைத்திரி அணியில் சேரவும்! – விஜயதாஸவுக்கு டிலான் அழைப்பு
“நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவை ஐக்கிய தேசியக் கட்சி தனது கட்சியிலிருந்து விலக்கினால் அவர் மஹிந்தவுடன் போய் இணையாமல் மைத்திரியுடன் வந்து இணையவேண்டும்.” – இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார் அமைச்சர் டிலான் பெரேரா. இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், “அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கியமைக்கு நீதி அமைச்சர் விஜயதாஸ எதிப்புத் தெரிவித்துள்ளதால் அவருக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இந்த விடயத்தில் விஜயதாஸவுக்கு ஆதரவு …
Read More »அரசியல் எதிரிகளை எந்த அரசும் இந்தளவுக்குப் பழிவாங்கியதில்லை! – குமுறுகின்றார் மஹிந்த
இலங்கையில் ஆட்சி நடத்திய எந்தவொரு அரசும் தனது அரசியல் எதிரிகளை இந்தளவுக்குப் பழிவாங்கியது கிடையாதென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு அவர் மேலும் கூறியுள்ளதாவது:- “இந்தப் பழிவாங்கலின் உச்சகட்டமாக இந்த வாரத்தில் எனது மனைவியையும், மகன்கள் இருவரையும் புலனாய்வுப் பொலிஸார் விசாரணை என்ற பெயரில் மணிக்கணக்கில் சித்திரவதை செய்திருக்கிறார்கள். எனது மனைவி ஷிராந்தியிடம் அநாவசியமான அநாகரிகமான கேள்விகளைக் கேட்டு கொடுமைப்படுத்தியிருக்கின்றனர். இந்த …
Read More »வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்! – ஜனாதிபதியிடம் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வேண்டுகோள்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்தவேளை அளித்த வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றவில்லை எனத் தெரிவித்துள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், இலங்கை அரசின் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகம் குறித்து தங்களுக்கு நம்பிக்கையில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர். அவர்கள் மேலும் கூறியுள்ளதாவது:- “இலங்கையில் காணாமல்போகச்செய்யப்பட்டவர்கள் குறித்து ஆராய்வதற்காக ஏற்படுத்தப்பட்ட ஆணைக்குழுக்கள் தொடர்பில் நாங்கள் சந்தித்த …
Read More »பிரபாகரனுடன் அதிக நேரத்தைச் செலவிட முடியவில்லை! – வருந்துகிறார் எரிக் சொல்ஹெய்ம்
“தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் அதிக நேரத்தைச் செலவிட முடியாமல் போனதற்காக வருந்துகிறேன்.” – இவ்வாறு இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான பேச்சுக்களிலும், அமைதி முயற்சிகளிலும் நடுநிலையாளராகப் பங்கேற்ற எரிக் சொல்ஹெய்ம், சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார். விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் கொண்டிருந்த உறவு, நட்பு ரீதியானதா அல்லது அதனை விடவும் அதிகமானதா …
Read More »மஹிந்த அணியிலிருந்து விலகி எவரும் அரசுடன் இணையமாட்டர்! – நல்லாட்சியின் பகற்கனவு பலிக்காது என்கிறார் செஹான் சேமசிங்க
மஹிந்த அணியான பொது எதிரணியில் இப்போது பெரும் விரிசல் ஏற்பட்டிருக்கின்றது எனவும், வெகுவிரைவில் அந்த அணியிலுள்ள ஏழு உறுப்பினர்கள் விலகி அரசுடன் சேர்ந்துகொள்ளப்போகின்றனர் எனவும் வெளிவந்திருக்கும் செய்தி வெறும் கற்பனையே எனவும், இவ்வாறு அரசு அடிக்கடி காணும் பகற்கனவுகள் ஒருபோதும் பலிக்கப்போவதில்லை எனவும் பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது:- “ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் முன்னணியின் தலைவர் சாந்த பண்டார பொது …
Read More »இளநீர் குடிப்பது ஐ.தே.க; கோம்பை தின்பது நாமா? – சு.க. ஆவேசம்
“மத்திய வங்கி பிணைமுறி மோசடிக்கான பொறுப்பையோ அதனால் ஏற்பட்ட நட்டத்தையோ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்காது. ஐக்கிய தேசியக் கட்சியே ஏற்க வேண்டும்.” – இவ்வாறு மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:- “மத்திய வங்கி பிணைமுறி மோசடியானது நல்லாட்சிக்குப் பெரும் சவாலை விடுத்துள்ளது. இதனுடன் தொடர்புபட்டவர்கள் இன்று வெளிப்படுத்தப்பட்டுள்ளனர். அந்தக் குற்றச்சாட்டுக்கு இலக்கான ரவி கருணாநாயக்க அமைச்சுப் பதவியிலிருந்து விலகியுள்ளார். ஐக்கிய தேசியக் …
Read More »கட்சியிலிருந்து நீக்கினால் நீதிமன்றத்தை நாடுவேன்! – வடக்கு அமைச்சர் டெனீஸ் தெரிவிப்பு
“ஜனநாயக விழுமியங்களுக்கு முரணான இரு வேறு நிலைப்பாடுகளுடன் கட்சி செயற்படுகின்றது. சட்டத்துக்கு மாறாகக் கட்சியிலிருந்து என்னை நீக்கினால் நீதிமன்றத்தை நாடுவேன். இருப்பினும் இன்னும் கட்சியில் ஜனநாயக விழுமியங்கள் இருப்பதாக நம்புகின்றேன்.” – இவ்வாறு வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்தார். அமைச்சுப் பதவியிலிருந்து விலகுவதற்கு மறுத்துள்ளமையால் பா.டெனீஸ்வரனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு நாளை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு ரெலோவின் உயர்மட்டக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் …
Read More »