Tuesday , August 26 2025
Home / அருள் (page 97)

அருள்

வவுனியாவில் இன்று வயல் அறுவடை விழா…

வவுனியா அரச விதை உற்பத்தி பண்ணையில் வயல் அறுவடை விழா இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது. உதவி விவசாய பணிப்பாளர் ஜெகதீஸ்வரி தலைமையில் குறித்த விழா இடம்பெற்றுள்ளது. வவுனியா விவசாய திணைக்களத்தில் வழிகாட்டல் மற்றும் ஆலோசனையுடன் மேற்கொள்ளப்பட்ட இயந்திரம் மூலமான விதை நடல், கையினால் விதை நடல் போன்ற முறைகளில் செய்கை பண்ணப்பட்ட மாதிரி நெற்செய்கையின் அறுவடைகள் இதன் போது மேற்கொள்ளப்பட்டன. மேலும் இம்முறையின் மூலம் மேற்கொள்ளப்பட்ட நெற்செய்கையின் விளைதிறன், நன்மை, …

Read More »

அரசுடன் இணைந்து செயற்பட வேண்டிய கட்டாயத்தில் கூட்டமைப்பு உள்ளது

அரசுடன் ஒத்துழைத்து செயற்படாவிட்டால் அது தமிழ் மக்களுக்குப் பயங்கரமான விளைவை ஏற்படுத்துமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே அவர் இதனை கூறியுள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “அரசுக்கு நாங்கள் முண்டுகொடுக்கவேண்டிய அவசியம் தற்போதைய நிலையில் எமக்கு உண்டு. இல்லாவிட்டால் கடந்த ஒக்டோபரில் நடந்தது இப்போதும் உடனடியாக நடக்கும். அது தமிழ் மக்களுக்குப் படுபயங்கரமான ஒரு விளைவை ஏற்படுத்தும். …

Read More »

வறுமையில் வாடும் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள்!

உறவுகளை பறிகொடுத்து வறுமையில் வாடும் தமக்கு உதவி செய்யுமாறு காணாமல் ஆக்கப்பட்ட ஒருவரின் தாயார் கோரிக்கை விடுத்துள்ளார். வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரின் ஏற்பாட்டில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த காணாமலாக்கப்பட்ட உறவினர்கள் 25 பேருக்கு உதவிப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “ நாம் கடந்த …

Read More »

வடக்கிற்கு புதிய பல்கலைக்கழகம்!

யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தை வன்னி பல்கலைக்கழகமாக தரமுயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். அதன்படி இதற்கான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் ஓரிரு வாரங்களில் வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றில் இன்று நடைபெற்ற குழு நிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”கிழக்கில் இரண்டு பல்கலைக்கழகங்கள் காணப்படுகின்ற போதிலும், பிரச்சினைகள் …

Read More »

வெளிநாடுகளில் படிக்க செல்லும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

இலங்கையிலிருந்து ஆண்டொன்றுக்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் வெளிநாடுகளில் கல்வி கற்பதற்காக செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது. அவ்வாறு செல்கின்றபோதிலும் அவர்கள் மீண்டும் நாட்டுக்குத் திரும்புவதில்லையென குறிப்பிடப்படுகின்றது.நிதி இராஜாங்க அமைச்சர் ஏரான் விக்கிரமரத்ன சபையில் இதனை தெரிவித்தார். அத்துடன் இவர்கள் மீண்டும் நாட்டுக்கு திரும்புவது உறுதி செய்யப்பட வேண்டும். ஏனெனில் கல்வி என்பது அரசினால் மட்டும் கட்டி எழுப்பப்படக்கூடியதல்ல. அதற்கு பல்வேறு தரப்பினரினதும் பங்களிப்பு அவசியம். எனவே தான் வெளிநாடு சென்று கல்வி …

Read More »

இன்றைய ராசிபலன் 15.03.2019

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

மேஷம்: திட்டவட்டமாக சிலமுக்கிய  முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு சாதகமாகஇருப்பார்கள். அரசாங்கத்தாலும், அதிகாரப்பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் மேலதிகாரி உங்களிடம் புதிய பொறுப்புகளை ஒப்படைப்பார். வெற்றிபெறும் நாள். ரிஷபம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும்.தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் சக …

Read More »

சற்று முன்னர் துப்பாக்கிச்சூடு : இருவர் பலி

மொரட்டுமுல்ல – பிலியந்தலை வீதியில் சற்று முன் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகி இருவர் உயிரிழந்துள்ளனர். மோட்டர்சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவராலேயே இந்த துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Read More »

புதிய கூட்டணிக்கான பேச்சுவார்த்தை வெற்றி!

மைத்திரி மஹிந்த

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைக்கும் பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளதாக, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். அதன்படி இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று இச்சந்திப்பு இடம்பெற்றது. ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இணைந்து பரந்தளவிலான கூட்டணியொன்றை அமைப்பது தொடர்பாகவே …

Read More »

புலம்பெயர்ந்தவர்களை அழைத்துவர பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும்

புலம்பெயர்ந்து இந்தியாவில் வாழும் இலங்கையர்களை, தாய்நாட்டிற்கு அழைத்து வருவதற்கான செயற்பாடுகளை, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேற்கொள்ள வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றில் இன்று இடம்பெற்றுவரும் வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய அவர் இக்கோரிக்கையை முன்வைத்துள்ளார். அவ்வாறு அழைத்து வருவோருக்கு வீடமைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதோடு, வீடுகளுடன் காணிகள், வேளாண்மை …

Read More »

விலகிச்செல்ல வேண்டுமென்கிறார் மஹிந்தர்! – ஐ.நா. ஆணையாளரின் கூற்றை ஏற்க மாட்டோம்!

ஐ.நா. ஆணையாளர் கூறும் சகல விடயங்களையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன குறிப்பிட்டுள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்திலிருந்து இலங்கை விலகிச் செல்ல வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இன்றைய நாடாளுமன்ற அமர்வில் குறிப்பிட்டார். அதற்கு பதிலளித்து உரையாற்றியபோதே திலக் மாரப்பன மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், ”எமது நாட்டின் இறைமை, தன்னாதிக்கம் என்பவற்றை பாதுகாத்துக்கொள்ள நாம் தொடர்ச்சியாக செயற்பட்டோம். எமது …

Read More »