மேஷம்: இன்று எதிர்பார்த்த பணவரத்து இருந்தாலும் வியாபாரம் தொடர்பான செலவுகள் கூடும். போட்டிகள் தொல்லை தராமல் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பான நிலை காணப்படும். பிள்ளைகளின் அறிவு திறமை வெளிப்படும். அடுத்தவர்கள் பிரச்சனையை தீர்த்து வைப்பீர்கள். பயணங்கள் சாதகமான பலன் தரும். பொறுப்புகள் கூடும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9 ரிஷபம்: இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிசுமை குறைந்து காணப்படுவார்கள். மாணவர்களுக்கு …
Read More »இன்றைய ராசிபலன் 23.03.2019
மேஷம்: உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். மூத்த சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். கல்யா ணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள். ரிஷபம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் பற்று வ ரவு உயரும். …
Read More »கோத்தபாயவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க வலுக்கும் எதிர்ப்பு
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் களுத்துறை மாவட்ட எம்.பியான குமார வெல்கம விரைவில் தீர்க்கமான அரசியல் தீர்மானமொன்றை எடுக்கவுள்ளார் என நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. அம்முடிவு கொழும்பு அரசியலில் திருப்புமுனையாக அமையும் எனவும் கூறப்படுகின்றது.கோத்தபாய ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவதற்கு குமார வெல்கம எம்.பி. போர்க்கொடி தூக்கியிருந்தாலும், கடும் எதிர்ப்பையும்மீறி கோத்தபாயவை களமிறக்கும் தீர்மானத்துக்கு ராஜபக்சக்கள் வந்துள்ளனர் எனக் கூறப்படுகின்றது.குறித்த தீர்மானம் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டபின்னர், குமார வெல்கம, மஹிந்த அணிக்கு …
Read More »வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட பெண்
வவுனியா நெளுக்குளம் பகுதியில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இரு பிள்ளைகளின் தாயின் கையடக்க தொலைபேசியினை புலனாய்வு பிரிவினருக்கு வழங்கி பகுப்பாய்வு செய்யுமாறு வவுனியா மாவட்ட நீதிமன்ற நீதிபதி தஸ்னீம் பௌஷான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். வவுனியா நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுற்றுவட்ட வீதியில் இன்று (20.03) அதிகாலை வெட்டுக்காயங்களுடன் கிணற்றில் பெண்ணொருவர் சடலமாக கிடப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டினையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா மற்றும் நெளுக்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர். …
Read More »வலுப்பெற்றது இலங்கை ரூபாவின் பெறுமதி
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றைய தினம் வலுப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் வௌியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்கள் தொடர்பான அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 179 ரூபா 78 சதமாக காணப்பகின்றது. கடந்த 2018 ஆம் ஆண்டு இலங்கை ரூபாவின் பெறுமதி நூற்றுக்கு 16 சதவீதத்தினால் குறைவடைந்திருந்ததோடு இந்த வருடத்தில் நூற்றுக்கு 3 …
Read More »கிளிநொச்சியில் தொடர்ந்தும் மின்வெட்டு
கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ந்தும் மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக விசனம் வெளியிட்டுள்ளனர். குறிப்பாக பகல் வேளைகளில் சுமார் நான்கு மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதாகவும் இதுகுறித்து எவ்வித முன்னறிவித்தல்களும் வழங்கப்படுவதில்லை என்றும் அவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். நீண்ட நேர மின்வெட்டு காரணமாக வர்த்தகர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கின்றனர். மாவட்டத்தில் கடுமையான வெப்பம் நிலவும் நிலையில், மின்வெட்டும் அமுல்படுத்தப்படும் சந்தர்ப்பங்களில் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கின்றனர். மேலும் 4 …
Read More »பொது மக்களுக்கு மைத்திரி விடுத்துள்ள அறிவிப்பு
பாதீட்டு இடைவெளியை சமாளிப்பதற்கு அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாட்டுக்காக ஒன்றாய் இருப்போம் என்ற தொனிப்பொருளில் புத்தளம் மாவட்டத்தில் வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போது அவர் இதனைக் கூறியுள்ளார். பில்லியன் கணக்கான பாதீட்டு இடைவெளியை தணிப்பதற்கு நாம் அனைவைரும் முக்கியமான விடயங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. பொதுமக்கள், பாதுகாப்பு தரப்பினர், அரச அதிகாரிகள் என்று பலரும் இந்த விடயத்தில் ஒன்றிணைய வேண்டும் …
Read More »இன்றைய ராசிபலன் 22.03.2019
மேஷம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். அரசால் அனுகூலம் உண்டு. வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். அமோகமான நாள். ரிஷபம்: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளால் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். புதுப் பொருள் சேரும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் …
Read More »வெளிநாட்டிலிருந்து வந்த பலர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது
வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த 9 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமான முறையில் தங்கக்கட்டிகள் கொண்டு வந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் பெறுமதி 4 கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தின் நுழைவு பகுதியில் வைத்து சுங்க பிரிவு அதிகாரிகளினால் குறித்த 9 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 3 இலங்கையர்களும் 6 இந்தியர்களும் அடங்குகின்றனர். வவுனியா பிரதேசத்தை சேர்ந்த 23 …
Read More »யாழில் மீண்டும் வாள்வெட்டு குழுவினர்…
யாழ்ப்பாணம் வேம்படி வீதியில் சாரதி ஒருவர் மீது வாள்வெட்டு குழுவொன்று தாக்குதல் மேற்கொண்டு தப்பிச்சென்றுள்ளது. இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். உந்துருளியில் வருகைதந்த குழுவொன்றே இவ்வாறு வாள் வெட்டு தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலில் படுகாயமடைந்த சாரதி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதோடு தாக்குதல் மேற்கொண்டவர்களை கைது செய்ய காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Read More »