நிதியமைச்சர் மங்கள சமரவீர அமெரிக்காவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். வொஷிங்டன் நகரில் இடம்பெறும் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்தர கூட்டத்தில் பங்கேற்பதற்காகவே அவர் அங்கு சென்றுள்ளார். இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக நிதி ராஜாங்க அமைச்சர், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி ஆகியோர் சென்றுள்ளனர். நிதியமைச்சர் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை வொஷிங்டனில் தங்கிருப்பார் என அந்த அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Read More »வடக்கில் 4,142 ஏக்கர் நிலம் படையினரின் வசம் !!
வடக்கு – கிழக்கு மாகாணங்களில் 2 ஆயிரத்து 457 ஏக்கர் தனியார் நிலமே படையினரின் வசமிருப்பதாக அரசதலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்த தகவல் தவறானது, உண்மைக்குப் புறம்பானது என்பது மாவட்டச் செயலகங்களின் புள்ளி விவரங்களின் மூலம் தெரியவந்துள்ளது. வடக்கு – கிழக்கு மாகாணங்களின் நில விடுவிப்பு சம்பந்தமான தற்போதைய நிலைமை, மற்றும் தீர்வுகள்பற்றி மக்கள் பிரதிநிதிகள், படையினர் இடையில் கடந்த 3ஆம் திகதி இடம்பெற்ற வடக்கு கிழக்கு அபிவிருத்திச் செயலணியில் …
Read More »சூழ்ச்சிகளிற்கு காரணம் பிரதமர் ரணிலாம்
மாகாணசபை தேர்தலை தொடர்ந்து பிற்போடும் சூழ்ச்சிகளை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே வகுப்பதாக குற்றம் சாட்டிய பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க, மக்களின் தேர்தலை உரிமை தொடர்ந்து மீறப்படுவதை கருத்திற் கொண்டு இம்முறை மாத்திரம் பழைய முறையில் தேர்தலை நடத்த நாங்கள் இணக்கம் தெரிவித்தோம். ஆனால் மாகாண சபை தேர்தலை நடத்த எவ்வித முன்னேற்றகரமான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டார். தற்போது 07 மாகாண சபைகளின் பதவி காலம் முடிவடைந்துள்ள நிலையில் இம்மாத …
Read More »இன்றைய ராசிபலன் 12.04.2019
மேஷம்: இன்று குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் டென்ஷனை உண்டாக்கும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் கவனம் தேவை. தாய், தந்தையின் உடல்நிலையில் எச்சரிக்கை அவசியம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9 ரிஷபம்: இன்று எதையும் செய்யும் முன்பு திட்டமிட்டு அதன்படி செயல்படுவது நல்லது. பயணங்கள் செல்லும் போது கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. மாணவர்கள் கவனத்தை சிதறவிடாமல் …
Read More »இன்றைய ராசிபலன் 11.04.2019
மேஷம்: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். வெற்றி பெறும் நாள். ரிஷபம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். வியாபாரத்தில் வேலை …
Read More »ஜனாதிபதி வேட்பாளாராக விக்னேஸ்வரன்?
தமிழ் மக்களின் தலைவர் என்ற வகையில் விக்கினேஸ்வரனுக்கு ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க சகல உரிமையும் உள்ளதென ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செய்தியாளர் சந்திப்பு கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது இதில் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர கலந்துகொண்டிருந்தார், இதன்போது ஜனாதிபதி வேட்பாளர் குறித்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் வேட்பாளரை தேடுவதில் சிரமப்படுகின்றீர்கள், ஆனால் வடக்கில் விக்கினேஸ்வரன் தயாராகிவிட்டார் என …
Read More »சம்பந்தனின் நியமனம் – இழுத்தடிக்கிறாரா ?
அரசியலமைப்பு சபையின் உறுப்பினராக நியமிக்கப்படுவதற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கான நியமனத்தை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்னமும் வழங்கவில்லை. அரசியலமைப்பு சபைக்கு இரா.சம்பந்தனை நியமிப்பதற்கு, கடந்த 5ஆம் நாள் நடந்த அரசியலமைப்பு சபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக சபாநாயகர் கரு ஜெயசூரியவினால், இரா சம்பந்தனுக்கு அறிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும், இந்த நியமனத்துக்கு, சிறிலங்கா அதிபரின் அங்கீகாரம் இன்னமும் வழங்கப்படவில்லை. உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதியரசர் நியமனம் …
Read More »பண்டிகைக் காலத்தில் விசேட போக்குவரத்து சேவை
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு இன்று முதல் விசேட போக்குவரத்து சேவை அமுல்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார் நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதேவேளை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை மேலதிகமாக 65 ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை போக்குவரத்து சபையினால் மேலதிகமாக 1500 பஸ்களும் தனியார் பஸ்கள் 2200 இலிருந்து 2600 வரையான பஸ்களும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக …
Read More »யாழ் பல்கலைக்கழகத்தின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆய்வு
அனைத்து பல்கலைக்கழகங்களின் தொழிற்சங்கங்களின் சம்மேளன தலைவர், செயலாளர் மற்றும் ஆலோசகர்கள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு அவசர விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளனர்.குறித்த நபர்கள் இன்று (புதன்கிழமை) இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளனர். கைவிரல் அடையாள பதிவு இயந்திர சுற்று நிருப அமுலாக்கத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் தொடர்பாக பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் தொழிற்சங்க போராட்டம் தொடர்பாகவும் அதன் விளைவுகள் குறித்தும் பல்கலைக்கழகத்தின் பல்வேறு தரப்புகளுடன் கலந்துரையாடி சுமுக நிலை ஏற்படுத்துவதற்கே இவர்கள் இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளனர். பாதுகாப்பு …
Read More »யாழில் பொலிஸ் மீது தாக்குதல்
அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் குடும்ப தகராறை விசாரிக்கச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கணவன் மனைவிக்கு இடையில் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு குறித்து, மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொள்ள பொலிஸ் உத்தியோகத்தர் முறைப்பாட்டாளரான பெண்ணின் வீட்டுக்குச் …
Read More »