Wednesday , October 15 2025
Home / அருள் (page 74)

அருள்

தாக்குதல் இடம் பெற்ற ஆலயத்தில் வட மாகாண ஆளுநர்

நீர்கொழும்பு, கட்டுவபிட்டிய புனித செபஸ்டியான் ஆலயத்திற்கு வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் இன்று முற்பகல் விஜயம் மேற்கொண்டார். ஆலயத்திற்கு விஜயம் செய்த ஆளுநர் ஆலயத்தின் பங்குத்தந்தை வணக்கத்துக்குரிய ஸ்ரீலால் பொன்சேகாவை சந்தித்து அண்மையில் உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் மரணித்த மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது சார்பிலும் வடமாகாண மக்கள் சார்பிலும் அனுதாபங்களை தெரிவித்துக் கொண்டார். இதன்போது பயங்கரவாத தாக்குதலினால் சேதமடைந்து மீள் சீரமைக்கப்படுவரும் ஆலயத்தையும் …

Read More »

IS தீவிரவாதிகளின் முகாம்!! விசேடஅதிரடிப்படையினர் முற்றுகை

மட்டக்களப்பு தாழங்குடா ஒல்லிக்குளம் முஸ்லீம் கிராமத்தில் அமைந்திருந்த இஸ்லாமிய தீவிரவாதிகளின் பயிற்சி முகாம் ஒன்று இன்று கைப்பற்றப்பட்டுள்ளது. மட்டக்களப்பு தாழங்குடா ஒல்லிக்குளம் முஸ்லீம் பிரதேசத்தில் இன்று காலை விசேடஅதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதலில் இஸ்லாமிய தீவிரவாத அமைப்பினரின் பயிற்சி முகாம் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. ஐ. எஸ் அமைப்பின் தற்கொலைதாரியான ரில்வானின் தலைமையில் இயங்கியதாக கூறப்படும் குறித்த பயிற்சி முகாமில் வைத்தே தீவிரவாதிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. குறித்த பயிற்சி முகாமில் …

Read More »

ஐ.எஸ். பயங்கரவாதம் ஒழித்துக்கட்டப்படும் ஜனாதிபதி அதிரடி!

ஜனாதிபதி

இந்த வருட இறுதிக்குள் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு ஜனாதிபதி தேர்தல் சிறப்பாக நடத்தப்படும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 42 வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட 250 ற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த ஏப்ரல் 21 தாக்குதல்களின் பின்னணியில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் உள்ளதை தாங்கள் நம்புவதாகவும் ஜனாதிபதி சர்வதேச ஊடகமான ரோய்ட்டர்ஸ் செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “தீவிரவாதிகளின் இந்த செயற்பாடுகளினால் தேர்தலை தள்ளிவைக்க முடியாது, எனவே தேர்தலுக்கு …

Read More »

அனைத்து பாடசாலைகளிலும் கடுமையான சோதனை

கடந்த மாதம் 21ஆம் திகதி இலங்கையின் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதலையடுத்து, நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக நாடளாவிய ரீதியாக அனைத்து பாடசாலைகளும் கடந்த 22ஆம் திகதியிலிருந்து மூடப்பட்டிருந்தன. அதனைத்தொடர்ந்து முப்படையினர், விசேட அதிரடிப் படையினர், பொலிஸார் இணைந்து தொடர்ச்சியாக இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் தரம் 6 இற்கு மேற்பட்ட வகுப்புக்களுக்கு நாளை (திங்கட்கிழமை) இரண்டாம் தவனைக் கல்வி நடவடிக்கைகள் …

Read More »

இன்றைய ராசிபலன் 05.05.2019

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

மேஷம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்துப் போகும். நண்பர்கள், உறவினர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள். ரிஷபம்: குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்துப் போகும். உடல் நலத்தில் கவனம் தேவை. உறவினர்களுடன் பகைமை வந்துச் செல்லும். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். …

Read More »

காத்தான்குடியில் ஆயுதங்கள் மீட்பு

கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலொன்றின் அடிப்படையில் பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது, காத்தான்குடியில் உள்ள பள்ளிவாசல் மையவாடியிலிருந்து இருந்து இன்று காலை ஆயுதங்கள் உட்பட சில பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காத்தான்குடி ஜாமியுழ்ழாபீரின் பெரிய மீரா ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் இருந்தே இந்த ஆயுதங்களும் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Read More »

கொழும்பு அந்தோனியர் ஆலயத்தில் அருகில் காத்திருந்த பேராபத்து…

கொழும்பு- கொச்சிக்கடை அந்தோனியாா் ஆலயத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் இரண்டு குண்டு வெடிப்புக்களை நடாத்த திட்டமிட்டிருந்ததாக பாதுகாப்பு தரப்பினா் நடாத்திய விசாரணைகளின் மூலம் தொியவந்துள்ளது.கொச்சிக்கடை அந்தோனியாா் ஆலயத்தின் மீது தாக்குதல் நடாத்தப்பட்டதன் பின்னா் ஆலயத்திலிருந்து 100 மீற்றா் துாரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனம் ஒன்றை சோதனையிட்ட இராணுவத்தினா் மற்றும் விசேட அதிரடிப்படையில்குறித்த வாகனத்தில் பொருத்தி வைக்கப்பட்டிருந்த ஆபத்தான குண்டு ஒன்றை வெடிக்கவைத்திருந்தனா். குறித்த வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட இந்த வான் பாணந்துறை பிரதேசத்தில் வைத்து …

Read More »

திட்டமிட்டபடி 6ஆம் திகதி பாடசாலை ஆரம்பிக்கப்படுமா?

இலங்கையின் அனைத்துப் பாடசாலைகளின் பாதுகாப்பு முழுமையாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். அனைத்து தரப்பினரும் உத்தரவாதம் அளித்ததன் பின்னரே எதிர்வரும் 6ஆம் திகதி முதல் மீண்டும் பாடசாலைகளை இரண்டாம் தவணைக் கல்வி நடவடிக்கைகளுக்காக ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி, அமைச்சரவை, உளவுப் பிரிவு, பாதுகாப்பு சபை, முப்படையினர் மற்றும் பொலிஸார் இந்த உத்தரவாத்தை வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். கொழும்பிலுள்ள சில பாடசாலைகளின் பாதுகாப்பு …

Read More »

மாத்தளையில் வெடிப்பு சம்பவம்!

மாத்தளை ,பலக்கடுவ ,வெலிக்கந்த பகுதியில் பாரிய வெடிப்புச் சத்தமொன்று கேட்டதையடுத்து படையினரும் பொலிஸாரும் இணைந்து தேடுதல்களை ஆரம்பித்துள்ளனர். விலங்குகளை விரட்டும் வகையில் பட்டாசு ஒன்றை விவசாயி ஒருவர் வெடிக்கச் செய்ததாக தகவல் வந்தாலும் அந்த சத்தம் பாரிய அளவில் உக்குவளை பிரதேச செயலாளர் பிரிவின் போவத்தை ,வரக்கமுற,கலல்பிட்டிய,பலக்கடுவ ஆகிய பகுதிகளுக்கும் கேட்டதால் படையினரும் பொலிஸாரும் இணைந்து அங்குள்ள மலைப்பகுதி ஒன்றில் தேடுதல் நடத்த ஆரம்பித்துள்ளனர். மாத்தளை – அலவத்துகொட பொலிஸாருடன் …

Read More »

தற்கொலை குண்டுதாரி சஹரான் இன்னும் இறக்கவில்லையா?

ஷங்ரி-லா ஹோட்டலில் தற்கொலை தாக்குதலில் ஈடுபட்டு தேசிய தௌஹீத் ஜமாத்தின் தலைவர் சஹரான் உயிரிழக்கவில்லை என ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. சஹரான் உயிரிழந்தமை தொடர்பாக சந்தேகம் வெளியிட்டுள்ளதாக அரச ஊடகம் புலனாய்வுத் துறையினரை மேற்கோளிட்டு இன்று (சனிக்கிழமை) செய்தி வெளியிட்டுள்ளது . அதில் தற்கொலைதாரிகளுடன் சஹரான் வந்திருந்தாலும் அவர் தற்கொலை தாக்குதல் நடத்தாமல் தூர இருந்து குண்டு ஒன்றை வெடிக்கச் செய்திருக்கலாமென பாதுகாப்பு தரப்பு சந்தேகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்கொலைதாரியின் …

Read More »