Wednesday , October 15 2025
Home / அருள் (page 71)

அருள்

பள்ளிவாசலில் துப்பாக்கிச் சூடு!

குளியாப்பிட்டிய பகுதியில் வியாபாரநிலையம் ஒன்றின் மீது நேற்றையதினம் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்ட மூவரை கைது செய்துள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக இன்று காலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளதாகவும் இராணுவம் தெரிவித்துள்ளது. இதேவேளை நேற்றையதினம் குளியாப்பிட்டி, தும்மலசூரிய , பிங்கிரிய பொலிஸ் பிரிவுகளில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் இன்று காலை தளர்த்தப்பட்டுள்ளதாக பொலிஸ் அறிவித்துள்ள நிலையில் அப்பகுதிகளில் பெருமளவு இராணுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே சில …

Read More »

இன்றைய ராசிபலன் 13.05.2019

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

மேஷம்: மற்றவர்களை நம்பிஎந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். பிரார்த்தனையை குடும்பத்தினருடன் சென்று நிறைவேற்றுவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும்.  கனவு நனவாகும் நாள். ரிஷபம்: முக்கிய பிரமுகர் களை சந்திப்பீர்கள். தாய்வழிஉறவினர்களால் அலைச்சல்ஏற்படும். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவரசலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். நினைத்தது …

Read More »

இலங்கைக்குள் கொள்கலன்கள் கணக்கில் வாள்கள்!!

நாட்டின் சட்டத்திற்கு அமைய, கொள்கலன்கள் கணக்கில் வாள்கள், இறக்குமதி செய்யப்பட்டு, அவை விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாண ஆளுநர் அஸாத் ஸாலி தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். இந்த வாள்களைக் கொண்டுவந்த அரசியல்வாதி ஒருவர் தனக்கு பிரச்சினை ஏற்படும் என அறிந்துகொண்டு, அவற்றை பள்ளிவாசலில் வைத்துள்ளார். எனவே, அந்த 47 வாள்களைத் தவிர வேறு எங்கும் வாள்கள் கைப்பற்றப்படவில்லை என அஸாத் …

Read More »

வவுனியா பகுதியில் தீப்பிடித்து எரிந்த முச்சக்கர வண்டி

வவுனியா மணியர்குளம் பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று இன்று தீப்பிடித்து எரிந்துள்ளது. குறித்த முச்சக்கரவண்டி திடீர் என்று தீப்பிடித்துள்ளது. எனினும் அப்பகுதியில் நின்றவர்களின் வேகமான செயற்பாட்டால் தீ அணைக்கபட்டிருந்தது. குறித்த தீ விபத்தினால் முச்சக்கரவண்டி பகுதியளவில் சேதமடைந்ததுள்ளது. மின்சார ஒழுக்கே தீ விபத்திற்கு காரணம் என்று கூறப்படுகின்றது.

Read More »

தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகத்தில் அடுத்தவர் வாழைச்சேனையில் கைது

தற்கொலை குண்டு தாக்குதலுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் செம்மண்ணோடையில் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டு கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்துள்ளார். வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாடசாலை வீதி செம்மண்ணோடையில் வசித்து வரும் 21 வயதுடைய நபரை கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரின் பணிப்புரைக்கமைய வாழைச்சேனை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். நாட்டில் இடம்பெற்ற தற்கொலை குண்டு …

Read More »

சஹ்ரானின் மனைவியிடம் நடத்தப்படும் விசாரணைகளில் அதிர்ச்சி தரும் தகவல்கள்!

கடந்த ஈஸ்டர் தினத்தில் இலங்கையில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களின் அதிர்ச்சி இன்னும் விலகவில்லை. இந்நிலையில் இந்த குண்டுத் தாக்குதல்களின் பின்னர் அதனுடன் சம்பந்தப்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டு கடும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். அந்தவகையில், சாய்ந்தமருதில் வீடொன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பின் போது காயமடைந்த சஹ்ரானின் மனைவி அப்துல் காதர் பாத்திமா சாதியா ( 24) பொலிஸாரின் விசாரணைகளின் போது சில தகவல்களை வெளியிட்டிருக்கிறார். ஈஸ்டர் தினத்தில் குண்டுத் தாக்குதலை நடத்திய தற்கொலைக் குண்டுதாரிகள் …

Read More »

பாதுகாப்பிற்கு மத்தியில் தேவாலயங்களில் ஞாயிறு ஆராதனை

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தொடர் குண்டு தாக்குதலின் பின்னர் நாடளாவிய ரீதியில் அனைத்து தேவாலயங்களிலும் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் இன்று ஆராதனைகள் இடம்பெற்றது. இதேவேளை தற்கொலை தாக்குதலுக்கிலக்கான மூன்று தேவாலயங்களில் ஒன்றான நீர்கொழும்பு – கட்டுவப்பிட்டிய ஷாந்த செபஸ்தியர் தேவாலயத்திலும் மூன்று வாரங்களின் பின்னர் இன்று ஞாயிற்றுக்கிழமை ஆராதனை இடம்பெற்றது. இந்த ஆராதனையின் போது குண்டு தாக்குதலுக்கு இலக்காகி உயிரிந்தவர்கள், காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் …

Read More »

இன்றைய ராசிபலன் 12.05.2019

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

மேஷம்: புதிய திட்டங்கள் தீட்டு வீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் சென்று நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். நினைத்தது நிறைவேறும் நாள். ரிஷபம்: கடந்த கால சுகமான அனுபவங்களை, சாதனைகளை அவ்வப்போது நினைத்து மகிழ்வீர்கள். பழைய கடனைத் தீர்க்க புது வழி யோசிப்பீர்கள். பயணங்களால் பயனடைவீர்கள். வியாபாரத்தில் …

Read More »

சம்பந்தனுடன் கைகோர்க்கும் மனோ கணேசன்

தமிழ் மக்கள் தற்போது எதிர்கொள்ளும் புதிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் விடயத்தில், கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட தமிழ் முற்போக்கு கூட்டணி தீர்மானித்துள்ளது.இந்த விடயம் தொடர்பாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று இரண்டு கட்சிகளும் சந்தித்து, இது தொடர்பாக கலந்துரையாடியதாக, மனோ கணேசன் தெரிவித்துள்ளார். பயங்கரவாத எழுச்சிக்குப் பின்னர் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விடயத்தில் …

Read More »

யாழில் வீதியிலிருந்து மீட்கப்பட்ட சின்னஞ்சிறு சிசு…

யாழ். வடமராட்சியில் பிறந்து சில மணி நேரமேயான சிசுவை வீதியில் எறிந்த கொடூர சம்பவமொன்று பதிவாகியுள்ளது. வடமராட்சி துன்னாலை மத்தி ஞானாசாரியார் சுடலைக்கு அண்மையில், நேற்று உரப்பை ஒன்றை நாய் கடித்து குதறிக்கொண்டிருந்ததை அவதானித்த பாதசாரிகள், உடனடியாக நெல்லியடி பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த நெல்லியடி பொலிஸார், குறித்த உரப்பையினை சோதனையிட்டபோது, அதனுள் சிசு ஒன்று உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளது. அத்தோடு சிசுவின் கை காயங்களுக்கு உள்ளாகியிருந்துள்ளது. …

Read More »