பிரித்தானியாவிலிருந்து இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த அகதிகள் நாடுகடப்படுகின்றமைக்கு ஐ.நா கண்டனம் வெளியிட்டுள்ளது. துன்புறுத்தல்களுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் செயற்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் இருந்து அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த அகதிகள் நாடுகடத்தப்படுகின்றமையை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடுகடத்தப்படுகின்ற அதிகள் அவர்களது சொந்த நாடுகளில் துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறான சூழ்நிலையில், கடந்த ஆண்டு …
Read More »பொது மக்களிடம் இராணுவ தளபதி முக்கிய கோரிக்கை
எதிர்வரும் 21ம் திகதியின் பின்னர் மீண்டும் பாடசாலை, அலுவலகங்களுக்கு வழக்கம் போல சென்று அன்றாட பணிகளில் ஈடுபடுமாறு இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அச்சத்தின் பின்னர், நாட்டில் இயல்பான சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அனைத்து மக்களுக்கும் வலுவான முறையில் பாதுகாப்பு வேலைத்திட்டத்துடன் இணைந்து கொள்ள வேண்டும். நாட்டில் அமைதியான சூழல் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இதனால் வெசாக் கால பகுதியில் அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபட முடியும். …
Read More »தாயக மண்ணில் இராணுவத்தினர் நிலைகொள்வதை விரும்பவில்லை!
கொடிய அரச பயங்கரவாதத்தை மேற்கொண்ட படையினரை தாயக மண்ணில் நிறுத்துவதற்கு ஒருபோதும் விரும்பவில்லை என வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். யாழில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே இதனை அவர் குறிப்பிட்டிருந்தார். வடக்கில் இராணுவத்தினரை நிறுத்துமாறு தான் கூறியதாக தென்னிந்திய ஊடகமொன்றில் செய்தி வெளியிடப்பட்டதாகவும் இந்த செய்தி உண்மைக்கு புறம்பானதென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இராணுவத்தினரால் சித்திரவதைக்கு உள்ளாக்கபட்ட தான், ஒருபோதும் கொடிய …
Read More »படுகொலைகளைப் புரிந்த கோட்டாவை உலாவவிட்டது ஐ.தே.க. வின் தவறு!
மனிதப் படுகொலைகளைப் புரிந்த முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை சிறையில் அடைக்காமல் வெளியில் உலாவவிட்டது ஐக்கிய தேசியக் கட்சி அரசு செய்த பாரிய தவறென மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அத்தோடு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கி வென்றால் இந்நாட்டில் மீண்டும் இரத்த ஆறு ஓடுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் தான் களமிறங்கி வென்றதும் பயங்கரவாதிகளைக் கூண்டோடு …
Read More »கருணாவின் மற்றுமொரு தில்லாலங்கடி வேலை சிக்கியது!
ஏறாவூர் பிரதேச அங்காடி வியாபாரிகளின் பிரச்சனைகள் மற்றும் அவர்களது தொழில் உறுதிப்பாடு , பாதுகாப்பு , பிரதேசத்தின் சகவாழ்வு தொடர்பில் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா அவர்களுக்கும் கிரான் பிரதேச இந்து ஆலயங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் இடம்பெற்று வந்த தொடர் சந்திப்புக்களின் ஒரு அங்கமாக விசேட சந்திப்பொன்று நேற்று காலை இராஜாங்க அமைச்சரின் ஏறாவூர் அலுவலகத்தில் இடம்பெற்றது. எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பல்வேறு விடயங்கள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டது. …
Read More »இன்றைய ராசிபலன் 19.05.2019
மேஷம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் ஒருவரை மாற்றி ஒருவர் குறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் அதிகாரிகளை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். விட்டுக் கொடுத்துப் போக வேண்டிய நாள். ரிஷபம்: சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். மனைவி வழியில் மதிக்கப்படுவீர்கள். கல்யாணப் …
Read More »இன்றைய ராசிபலன் 18.05.2019
மேஷம்: இன்று கணவன், மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவது நன்மையை தரும். பிள்ளைகள் எதிர்காலம் குறித்து தேவையான பணிகளை கவனிப்பீர்கள். புத்திசாதூரியம் அதிகரிக்கும். பயணங்களின் போது கவனம் தேவை. வேலைக்கு செல்லும் பெண்கள் தங்கள் பொருட்களை பத்திரமாக வைத்திருப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7 ரிஷபம்: இன்று திடீர் கோபங்கள் உண்டாகலாம். நிதானமாக இருப்பது நல்லது. புத்திசாதுரியத்தால் …
Read More »18 ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் கூடுமாறு விக்னேஸ்வரன் வேண்டுகோள்!
இனப்படுகொலைசெய்யப்பட்டஉறவுகளைநினைவுகூர 18 ஆம் திகதிமுள்ளிவாய்க்காலில் கூடுமாறுவிக்னேஸ்வரன் வேண்டுகோள் முள்ளிவாய்க்கால் மண்ணில் எதிர்வரும் 18 ஆம் திகதிநடைபெறும் 10 ஆம் ஆண்டு இனப் படுகொலை நினைவேந்தல் நிகழ்வில் தமிழ் மக்கள் அனைவரும் கலந்து கொண்டுபடுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கு அஞ்சலிகளை செய்யுமாறுவேண்டுகோள் விடுத்திருக்கும் வடமாகாணமுன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமானநீதியரசர் விக்னேஸ்வரன், தானும் அன்றையதினம் நினைவேந்தல் நிகழ்வுகளில் கலந்துகொள்ளவிருப்பதாகதெரிவித்திருக்கிறார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ளஅறிக்கையில்மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 10 …
Read More »புலிகளின் தொழிநுட்பத்தில் உருவாகிய கடற்கலன் தற்போதும் முள்ளிவாய்க்காலில்
விடுதலைப் புலிகளின் தொழிநுட்பத்தில் உருவாகிய கடற்கலன் ஒன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் காணப்படுகின்றது. எனினும் இறுதி யுத்தத்தின் போது குறித்த கடற்கலன் இலங்கை விமான படையினரின் தாக்குதலுக்கு இலக்காகி சேதமடைந்துள்ளது. இந்த நிலையில் யுத்த காலத்தில் இலங்கை விமான படையினரின் தாக்குதலுக்கு இலக்காகி சேதமடைந்த விடுதலைப் புலிகளின் தொழிநுட்பத்தில் உருவாகிய குறித்த கடற்கலன் 10 வருடங்கள் கடந்த நிலையிலும் முள்ளிவாய்க்கால் பகுதியில் தற்பொழுதுவரை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Read More »சஹ்ரான் பயிற்சிபெற்ற அருப்பல முகாம் கண்டுபிடிப்பு
கொழும்பு, ஷங்கரில்லா ஹோட்டலில் தற்கொலைத் தாக்குதல் நடத்திய தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவரான மொஹமட் சஹ்ரான் பயிற்பெற்றதாகக் கூறப்படும் பயிற்சி முகாமொன்று, கண்டி, அருப்பல பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேற்படி பிரதேசத்தில் முப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து கடந்த பல நாள்களாக தொடர்ச்சியாக மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் பயனாக, மேற்படி முகாம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. கண்டி, அருப்பல தர்மாசோக மாவத்தையிலுள்ள இரண்டு மாடிகளைக் கொண்ட வீடொன்றே, பயிற்சி முகாமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் …
Read More »