Author: அருள்

போருக்கு காத்திருக்கும் ரஜினி… புதிய கட்சி துவங்குகிறார் கமல் !

புதிய கட்சி துவங்குவது பற்றி யோசித்து கொண்டிருப்பதாக உலகநாயகன் கமல் ஹாசன் ஆங்கில இதழுக்கு அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் ஆங்கில இதழுக்கு தனது அரசியல் பிரவேசம் குறித்து அளித்துள்ள பேட்டியில், எனக்கும் அரசியல் சிந்தனை உள்ளது எனது சிந்தனையுடன் எந்த அரசியல் கட்சியும் ஒத்து போகவில்லை. நான் பல்வேறு கட்சி தலைவர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துள்ளேன் ஆனால் எந்த கட்சியிலும் சேரும் எனக்கு இல்லை. அரசியலில் புதிய […]

சரவணா ஸ்டோர் உரிமையாளருடன் நடிக்கும் ஓவியா!

சரவணா ஸ்டோர் விளம்பரத்தில் அதன் உரிமையாளர் சரவணனுடன் ஓவியா நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் நடிகை ஓவியாவிற்கு புதிதாக ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது. இதனால், தங்களது படங்களில் நடிக்க வைக்க தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் வரிசைகட்டி வருகின்றனர். ஆனால் அவர் எந்தப்படத்தையும் இதுவரை ஒப்புக்கொண்டதாக தெரியவில்லை. சரவணா ஸ்டோர் அதிபர் சரவணன் அருள், விளம்பரங்களில் நடித்து வருகிறார். அவர் ஹன்சிகா மோத்வானி, தமன்னாவுடன் நடித்த விளம்பரம் […]

செல்போனை உடைத்ததால் நண்பனை கொலை செய்த சிறுவன்!

திருவாரூர் அருகே செல்போனை உடைத்ததால் 8-ம் வகுப்பு மாணவனை 15 வயது சிறுவன் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள அரசு பள்ளியில் மாஜித் முகமது என்ற மாணவன் 8-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். அதேபகுதியை சேர்ந்த அபுல் கலாம் ஆசாத் என்ற 15வயது சிறுவனும், மாஜித் முகமது இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்துள்ளனர். இதனிடையே கடந்த 4 மாதங்களுக்கு முன்பு […]

லண்டன் தாக்குதல் - சமீபத்திய செய்திகள்

லண்டன் சுரங்க ரெயிலில் குண்டுவெடிப்பு : 22 பேர் படுகாயம்

லண்டன்: இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் உள்ள பார்சன்ஸ் கிரீன் சுரங்க ரயில் நிலையத்தில் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. உள்ளூர் நேரப்படி காலை 08:20 மணியளவில் இச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள், பொதுமக்களை பாதுகாப்பாக மீட்கும் பணியில் ஈடுபட்டனர். குண்டு வெடிப்பை தொடர்ந்து சுரங்க ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த தாக்குதல் பயங்கரவாத […]

வித்தியா கொலை வழக்கு – செப்ரெம்பர் 27 அன்று தீர்ப்பு

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கு விசாரணைகள் தீர்ப்பாயத்தில் நடைபெற்று வருகின்றன. நேற்று வழக்குத் தொடநர் தரப்பு சாட்சியங்களின் தொகுப்புரை வழங்கப்பட்ட நிலையில் இன்று எதிரி தரப்பின் சாட்சியங்களின் தொகுப்புரை வழங்கப்பட்டது. அதன்பின்னர் தீர்ப்பாயம் எதிர்வரும் 27ஆம் திகதி கூடும் என்று திகதியிடப்பட்டது. அன்று தண்டனைத் தீர்ப்பு அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. https://www.youtube.com/watch?v=cXTIySR1QUs

திருமணம் செய்ய வற்புறுத்தியதால் காதலியை கொடூரமாக கொன்றேன்

ஹைதரபாத் : தெலுங்கானா மாநிலம் மியாபூரை சேர்ந்தவர் கிஷோர் ஜெயின், இவர் மகள் சாந்தினி(17) 12ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த சனிக்கிழமை நண்பர்களை சந்திக்க செல்வதாகக் கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அவருடைய பெற்றோர் சாந்தினியை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், மடினகுடா வனப்பகுதியில் […]

அமெரிக்கா மீது வரலாறு காணாத தாக்குதல்

சுவிட்சர்லாந்து: ஐக்கிய நாடுகள் சபை விதித்துள்ள புதிய பொருளாதார தடைகளுக்கு வடகொரியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரத்தில் அமெரிக்கா நடத்திய கருத்தரங்கில் பேசிய அமெரிக்காவுக்கான வடகொரியா தூதர் ஹான் டே வடகொரியா மீது அமெரிக்கா தொடர்ந்து அழுத்தங்களை ஏற்படுத்தி வருகிறது என்றார். மீண்டும் மீண்டும் வடகொரியாவின் இறையாண்மைக்கு அமெரிக்கா கலங்கம் விளைவித்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். இதன் பலனை அமெரிக்கா விரைவில் உணரும் என்றும் அவர் […]

​தாய்லாந்தில் தொடங்கிய ”கும்கி – 2” படப்பிடிப்பு!

இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான கும்கி படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தற்போது கும்கியின் இரண்டாம் பாகத்தை இயக்க முடிவு செய்துள்ள பிரபுசாலமன் அதற்கான கதையை தயார் செய்து வருகிறார். மதி, ஷிவானி முதன்மை வேடம் ஏற்றிருக்கும் இந்த படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசை அமைக்கிறார். இதன் படப்பிடிப்புகள் கடந்த வாரம் முதல் தாய்லாந்தின் அடர்ந்த காடுகளில் படமாக்கப்பட்டு வருகிறது. யானையை மையமாக கொண்ட படம் என்பதால் முதலில் […]

ப்ளூ வேல் விளையாட்டால் விபரீதம்: ராஜஸ்தானில் ஏரியில் குதித்த மாணவி

ராஜஸ்தான் மாநிலத்தில் ப்ளூ வேல் ஆன் லைன் விளையாட்டில் ஈடுபட்டு ஏரியில் குதித்து தற்கொலைக்கு முயன்ற மாணவியை போலீஸார் மீ்ட்டனர். தற்கொலைக்குத் தூண்டும் ப்ளூ வேல் ஆன் லைன் விளையாட்டில் ஈடுபட்டு மாணவர்கள் சிலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மும்பை, கொல்கத்தா, உத்தரபிரதேசம் மட்டுமின்றி தமிழகத்தில் மதுரையிலும் ப்ளூ வேல் ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்ட மாணவர்கள் சிலர் தற்கொலை செய்துகொண்டனர். ப்ளூ வேல் ஆன் லைன் விளையாட்டை நீக்கி விடுமாறு […]

வடகொரியா மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்படலாம்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை

வடகொரியா மீது ராணுவ நடவடிக்கை எடுப்பதும் பரிசீலனையில் உள்ளது. பெரும்பாலும் போரை தவிர்க்கவே விரும்புகிறேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஐ.நா. சபையின் எச்சரிக்கையை மீறி வடகொரியா அண்மையில் ஹைட்ரஜன் குண்டு சோதனையை நடத்தியது. இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், வாஷிங்டனில் நேற்று முன்தினம் கூறியதாவது: கடந்த 25 ஆண்டுகளாக வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. […]