Tuesday , August 26 2025
Home / அருள் (page 290)

அருள்

மஹிந்தவை வளைக்க மறுபடியும் ‘கதிரை’! – திட்டத்தை தூக்கி வீசினார் மைத்திரி

பொதுஜன ஐக்கிய முன்னணி ஊடாக ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு முக்கியத்துவமளிக்கும் வகையில் முன்வைக்கப்பட்ட யோசனையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார் என அறியமுடிகின்றது. மேற்படி முன்னணியின் பொதுச் செயலாளர் பதவியை சமல் ராஜபக்ஷவுக்கு வழங்கி, உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி “கதிரை’ சின்னத்தில் களமிறங்கவேண்டும் என முன்வைக்கப்பட்ட திட்டமே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளது. 2018 ஜனவரியில் நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ‘கை’ சின்னத்திலேயே …

Read More »

2020இல் ஆட்சியைக் கைப்பற்ற பலம்வாய்ந்த கூட்டணியை அமைக்க ஜே.வி.பி. தீவிரம்!

2020ஆம் ஆண்டில் ஆட்சியைக் கைப்பற்ற ஜே.வி.பி. நாட்டிலுள்ள சக்திவாய்ந்த தொழிற்சங்கங்களுடனும், சிவில் அமைப்புகளிடனும், கல்விமான்களிடனும் தீவிர கலந்துரையாடல்களை மேற்கொண்டுவருவதாக அக்கட்சியின் தகவல் அறியும் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகிறது. நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை முற்றாக எதிர்க்கும் ஜே.வி.பி., பிரதமர் தலைமையிலான நாடாளுமன்ற ஆட்சியைக் கொண்டுவரும் முனைப்புடன் புதிய அரசமைப்பொன்றை கொண்டுவர அரசுடன் ஒன்றிணைந்துச் செயற்பட்டுவருகிறது. மறுபுறத்தில் 2020ஆம் ஆண்டு புதிய ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கில் தீவிர நகர்வுகளையும் முன்னெடுத்துவருகிறது. அதனடிப்படையில் நாட்டில் …

Read More »

கேப்பாப்பிலவு காணி விவகாரம்: பேச்சுக்கு சம்பந்தனுக்கு மைத்திரி அழைப்பு

கேப்பாப்பிலவு காணி விவகாரம் தொடர்பில் முக்கிய பேச்சு நடத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் இந்தச் சந்திப்பு நடைபெறக்கூடும் என்று ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்பிலவில் இராணுவத்தினர் வசமுள்ள 302 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு கோரி மக்கள் கடந்த 215 நாட்களாகத் தொடர் போராட்டத்தை முன்னெடுத்துவருகின்றனர். காணி விடுவிப்புத் தொடர்பில் கடந்த மே மாதம் …

Read More »

வித்தியா கொலை வழக்குத் தீர்ப்பு நீதி தேவதைக்குக் கிடைத்த வெற்றி! – இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன்

“யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் புங்குடுதீவு மாணவி  வித்தியா தொடர்பான வழக்குக்கு, நீதிபதிகளால் வழங்கப்பட்ட தீர்ப்பு, நீதி தேவதைக்குக் கிடைத்த பெரும் வெற்றியாகும். கடந்த காலங்களைவிட தற்போது, அரசின் தலையீடு இல்லாமல் நீதிமன்றங்கள் சுயாதீனமாக செயல்படுகின்றது. இது நல்லாட்சியின் மூலம் கிடைத்த ஒரு வெற்றியாகும். தீர்ப்பை வழங்கிய நீதிபதிகள் பாராட்டுக்குரியவர்கள். சட்டம் அனைவருக்கும் சமனானது என இந்தத் தீர்ப்பின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.” – இவ்வாறு கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் …

Read More »

எதிரிகளை எப்படி எதிர்கொள்வது: பிக்பாஸ் கன்பெஷன் ரூமில் கதறி அழுத சினேகன்

தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. இப்போட்டி நாளையுடன் முடிவடையவுள்ளதால், பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் 100-வது நாளை எதிர்நோக்கி காத்து கொண்டிருக்கின்றனர். இவ்வளவு நாட்கள் கடுமையான டாஸ்க்குகளை கொடுத்து வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடையவுள்ளதால், போட்டியாளர்களுக்கு பிரியாணி, சிக்கன் என கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார். அதுமட்டுமின்றி சினேகன் வீட்டில் இவ்வளவு நாட்கள் இருந்ததைப் பற்றி கவிதை எழுதினார். இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி …

Read More »

அமெரிக்காவை எதிர்கொள்ள 5 மில்லியன் ராணுவத்தினர் தயார்: வடகொரியா அறிவிப்பு

அமெரிக்க ராணுவத்தை எதிர்கொள்ள 5 மில்லியன் வடகொரிய ராணுவத்தினர் தயார் நிலையில் இருப்பதாக அந்த நாடு அறிவித்துள்ளது. டிரம்ப் அரசியின் அச்சுறத்தலை எதிர்கொள்ளும் பொருட்டு வடகொரிய ராணுவத்தில் இணைந்து போராட 4.7 மில்லியன் மாணவர்கள் உள்ளிட்ட இளைஞர் மற்றும் பணியாளர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ளதாக வடகொரியா அறிவித்துள்ளது. இதில் 1.22 மில்லியன் பேர் இளம் பெண்கள் எனவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. மட்டுமின்றி வடகொரியாவின் புகழில் களங்கம் விளைவிக்கும் …

Read More »

ஜெயலலிதா எனக்கு இட்லி ஊட்டிவிட்டாங்க: நடிகை கஸ்தூரி

ஜெயலலிதா கனவில் வந்து தனக்கு இட்லி ஊட்டிவிட்டதாக நடிகை கஸ்தூரி டுவிட்டரில் கூறியுள்ளார். தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதா மரணம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் இருந்து வருகிறது. ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது, அவர் உடல்நலம் தேறி இட்லி சாப்பிட்டார் என அதிமுக-வின் முக்கிய பிரமுகர்கள் பேட்டியளித்தனர். ஆனால் அவர் உயிரிந்த பின்னர் ஜெயலலிதா இட்லி சாப்பிட்டதாக நாங்கள் பொய் சொன்னோம், நாங்கள் அவரை பார்க்கவே …

Read More »

கடையில் டீ குடித்துக்கொண்டிருந்த திருமுருகன் காந்தி கைது

சென்னை: இலங்கை தூதரகத்தை முற்றுகையிட முயன்றதாக மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். ஜெனீவாவில் வைகோ மீது சிங்களர்கள் தாக்குதல் நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகம் எதிரே தமிழ் புலிகள் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்துக்கு மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி ஆதரவு தெரிவித்தார். ஆதரவு தெரிவித்துவிட்டு திருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 பேர் …

Read More »

ஸ்டாலின் பதவி ஆசை இல்லாத துறவியா: அமைச்சர் சண்முகம் கேள்வி

புதுடில்லி: தமிழக சட்டத்துறை அமைச்சர் சண்முகம் அளித்த பேட்டி: ஸ்டாலின் பதவி ஆசை இல்லாத துறவியா? ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை ஆணையம் கேட்டவர் ஸ்டாலின் தான். சிபிஐ மீது நம்பிக்கை உள்ளதாக கூறும் ஸ்டாலின், 2ஜி ஊழலில் சி.பி.ஐ., விசாரணை முடிவை ஏற்பாரா? இவ்வாறு அவர் கூறினார்.

Read More »

வைகோ மீது தாக்குதல் முயற்சி: முதல்வர் கண்டனம்

சென்னை: ஜெனிவாவில் வைகோ மீது சிங்களவர்கள் தாக்குதல் நடத்த முயற்சித்ததற்கு தமிழக முதல்வர் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: ஜெனிவாவில் வைகோ மீது தாக்குதல் நடத்த முயற்சித்திருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது. இது கண்டனத்திற்குரியது. எதிர்காலத்தில் இது போல் நிகழா வண்ணம் இருக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Read More »