Wednesday , August 27 2025
Home / அருள் (page 289)

அருள்

பிக்பாஸில் ஆரவ் ஜெயித்தது அநியாயம்: நடிகை கஸ்தூரி

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரவ்வை வெற்றியாளராக அறிவித்தது அநியாயம் என நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார். தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி நேற்றுடன் முடிவடைந்தது. நூறாவது நாள் நிகழ்ச்சியில் ஓவியா, பரணி உட்பட பிக் பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் வெற்றியாளராக நடிகர் ஆரவ் அறிவிக்கப்பட்டு 50 லட்சம் பரிசு தொகையை தட்டி சென்றார். இந்நிலையில், ஆரவ்வின் வெற்றியை விமர்சித்து நடிகை கஸ்தூரி டுவிட் …

Read More »

கனடா எட்மன்டனில் பயங்கரவாத தாக்குதல்?

கனடா-எட்மன்டனில் சனிக்கிழமை இரவு இடம்பெற்ற ஒரு பயங்கரவாத தாக்குதலில் பொலிஸ் அதிகாரி ஒருவர் குத்தப்பட்டதுடன் பாதசாரிகள் U-Haul டிரக்கினால் தாக்கப்பட்டுள்ளனர். ஓடிக்கொண்டிருந்த யு-ஹால் வாகனத்தில் இருந்து இத்தாக்குதல் நடாத்தப்பட்டுளளது. நான்கு பாதசாரிகள் மோதி விழுத்தப்பட்டுள்ளனர். எட்மன்டனை சேர்ந்த 30-வயதுடைய மனிதன் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன் இவன் தனியாக செயல்பட்டதாக தெரிவித்த பொலிசார் இதில் மற்றவர்கள் சம்பந்தப்பட்டடிருப்பார்களா என கருதப்படவில்லை. எட்மன்டன் மக்களை- அவர்களது சுற்றாடல்களில் இருப்பவர்களை எச்சரிக்கையாகவும் விழிப்புணர்வுடனும் இருக்குமாறு எட்மன்டன் …

Read More »

பிரான்சில் புகையிரத நிலையத்தில் தாக்குதல்: இருவர் படுகொலை

தென் பிரான்ஸ் பகுதியில் உள்ள மார்செய்ல் (Marseille ) நகரில் உள்ள செயின்ட் சார்ள்ஸ் (Saint Charles ) நிலக்கீழ் புகையிரத நிலயத்தில் இன்று இனந்தெரியாத நபர் ஒருவர் கத்தியால் குத்தி மேற்கொண்ட தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில் குறித்த பிரதேசத்துக்கு சென்ற காவல்துறையினர் தாக்குதலாளியை சுட்டுக் கொன்றுள்ளனர். தாக்குதல் நடத்திய நபர் குறித்த தகவல்கள் எவையும் இதுவரை வெளியாகவில்லை. குறித்த பகுதிக்கு பொதுமக்கள் …

Read More »

அரசியலில் வெற்றி பெறும் சூட்சமங்கள் கமலுக்கு மட்டுமே தெரியும்!

நடிகர் திலகம், செவாலியே சிவாஜி என தமிழ் சினிமாவில் ஒப்பற்றவராக திகழ்ந்தவர் சிவாஜி கணேசன். அவரின் மணி மண்டபம் இன்று சென்னை அடையாறில் திறக்கப்பட்டது. இவ்விழாவில் அரசியல் பிரமுகர்கள், நடிகர், நடிகைகள் என பலர் பங்கேற்றனர். நடிகர் சங்கம் சார்பாகவும் அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் கமல் பேசிய போது எத்தனை தடைகள் இருந்தாலும், ஒரு ரசிகனாக இங்கு வந்திருப்பேன். இந்நிகழ்விற்கு என்னை அழைத்த கலைத்துறைக்கும், தமிழக அரசுக்கும், அரசியல்லுக்கும் நன்றி …

Read More »

அரசியலுக்கு வர என்ன தகுதி வேண்டும் என தெரியவில்லை..! புலம்பும் ரஜினி…!!

சென்னை அடையாறில் அமைக்கப்பட்டுள்ள நடிகர் சிவாஜிகணேசன் மணி மண்டப திறப்பு விழா நடந்தது. இதில் துணை முதல்வர் பன்னீர் செல்வம் திறந்து வைத்தார். இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசும்போது,இந்த விழாவில் கலந்து கொண்டுள்ள ஓபிஎஸ் அதிர்ஷ்டசாலி. இது பல முறை நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒருவருக்கு சிலை வைக்கும் பாக்கியம் பலகோடி பேர்களில் ஒருவருக்குதான் அமையும். அது …

Read More »

ஆரவ் வெற்றி பெற காரணம் ஓவியாவா??

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி போட்டி நேற்று நடந்தது. இதில் ஆரவ் வெற்றி பெற்றார். சினேகன் இரண்டாம் இடம் பெற்றார். வெற்றி பெற்ற ஆரவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் சினேகன்தான் வெற்றி பெறுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். சினேகனுக்காக திரைப்பிரபலங்கள் உள்பட பல்வேறு தரப்பினர் வாக்கு சேகரித்தனர். ஆனால் அனைவரது கணிப்பையும் தவிடு பொடியாக்கி ஆரவ் வெற்றி பெற்று விட்டார். மேலும் ஆரவ் வெற்றி பெற ஓவியாவின் ரசிகர்கள் …

Read More »

பிக் பாஸ் வெற்றியாளராக ஆரவ் தேர்வு: சமூகவலைத்தளத்தில் பெருகும் எதிர்ப்பு

பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியின் வெற்றியாளராக ஆரவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கு சமூகவலைத்தளத்தில் எதிர்ப்பு வலுத்து வருகிறது. பிக் பாஸ் போட்டியாளர்களில் சிநேகன், ஆரவ், கணேஷ் வெங்கட்ராம் மற்றும் ஹரிஷ் ஆகியோர் இறுதிப் போட்டிக்கு தேர்வானார்கள். அவர்களில் யார் வெற்றியாளர் என்பதற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மேலும், நேற்றைய நிகழ்ச்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெளியேறியவர்கள் அனைவருமே இறுதிப் போட்டியாளர்களைக் காண வீட்டுக்குள் அனுப்பப்பட்டார்கள். அதில் ஸ்ரீ …

Read More »

ஆரவ் குடும்பத்தினரை சந்தித்த ஓவியா..

நேற்று நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி விழாவில் நடிகை ஓவியா உள்ளே நுழைந்தபோது அவருக்கு அரங்கமே அதிரும் அளவுக்கு கைதட்டல் கிடைத்தது. பின்னர் பேசிய ஓவியா ‘என்னை யாருக்குமே பிடிக்காதுனு நினைச்சேன்’ என கூறியது அவரது ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. “என்னை யாருக்குமே பிடிக்காதுனு நினைச்சேன். ஆனா, எல்லாருக்குமே என்னைப் பிடிச்சுருக்கு. சின்ன வயசில இருந்தே இந்தச் சமூகத்துக்கும் எனக்கும் ஏதோ ஒன்னு இடிச்சுட்டே இருக்கும். ஆனால் …

Read More »

ஆரவ் வெற்றிபெற்றவுடன் முதலில் பதிவு செய்த ட்வீட் இது தான்..!

பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு வழியாக நேற்று முடிவடைந்தது. மேலும் பிக் பாஸ் வீட்டில் இறுதிவரை ஆரவ், சினேகன், கணேஷ் மற்றும் ஹரிஷ் தான் இருந்தனர். இந்த நால்வரில் ஆரவ் நேற்று பிக் பாஸ் டைட்டிலை வெற்றி பெற்றார். மேலும் நேற்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை கலந்து கொண்ட அணைத்து பிரபலங்களும் வந்தனர். நமீதாவை தவிர அனைவரும் இந்த பிக் பாஸ் இறுதிப் போட்டியில் அணைத்து பிரபலங்களும் பங்கு …

Read More »

சு.க. உறுப்பினர்களுடன் தனித்தனியே மைத்திரி இரகசிய சந்திப்பு!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்குமிடையே இரகசிய சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. நீர்க்கொழும்பிலுள்ள நட்சத்திர விடுதியொன்றில் சுமார் மூன்று மணிநேரத்துக்கும் மேல் இடம்பெற்றுள்ள இந்தச் சந்திப்பில் கட்சி உறுப்பினர்களை தனித்தனியே சந்தித்து ஜனாதிபதி பேச்சு நடத்தியுள்ளமை ஒரு திருப்புமுனையாகப் பார்க்கப்படுகின்றது. தேசிய அரசிலிருந்து சுதந்திரக் கட்சி வெளியேறவேண்டும் என கட்சியிலுள்ள மூத்த உறுப்பினர்கள் சிலர் வலியுறுத்திவருவதாலும், மேலும் சிலர் மஹிந்தவுக்கு சார்பாகச் செயற்பட்டுவருவதாலும் கட்சியை முன்நோக்கி அழைத்துச்செல்வதில் …

Read More »