இப்போது தேர்தலில் நின்றால் கூட, ஓவியாவை எதிர்த்து நிற்கும் அனைவருக்கும், டிபாசிட் பறிபோவது உறுதி என்ற அளவுக்கு, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம், அவருக்கு புகழ் கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்த துவங்கியுள்ளார், அவர். சினிமாவாக இருந்தாலும் சரி, விளம்பரமாக இருந்தாலும் சரி, கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்தி, தன் வீட்டுப் பீரோவை நிரப்பும் வேலைகளில் மும்முரமாக உள்ளார். தற்போது காட்டேரி என்ற படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். இதில், பிரபல …
Read More »எனது கோவத்திற்கு காரணம் ஓவியாவே: ரைசா
பிக் பொஸ் வீட்டில் இருந்தவர்களும் வெளியில் ரசிகர்களும் ஓவியாவை இலக்கு வைத்து நடந்து கொண்டமை தனக்கு கோபத்தை ஏற்படுத்தியதாக ரைசா தெரிவித்துள்ளார். பிக் பொஸ் நிகழ்ச்சி நிறைவு பெற்றுள்ள நிலையில், ரைசா இவ்வாறு தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். தான் ஒரு மொடல் என்பதால் எப்பொழுதும் சாதாரணமாக இருக்க வேண்டும் என நினைத்து பிக் பொஸ் வீட்டில் அமைதியாக இருந்ததாகவும் இதன்படி, சோறு சாப்பிட்டுக்கொண்டு இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். …
Read More »சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்தார் சசிகலா !!!
சொத்து குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததை அடுத்து அ.தி.மு.க. (அம்மா) அணி பொதுச் செயலாளர் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இந்த நிலையில் சசிகலாவின் கணவர் நடராஜன் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிறுநீரகம் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடந்து முடிந்துள்ளது. இதற்கிடையே தனது கணவரை பார்ப்பதற்காக …
Read More »தமிழருக்கு உடன் தீர்வு வேண்டும்! – நாடாளுமன்றில் வலியுறுத்தினார் சம்பந்தன்
“நீண்டகால ஆயுதப் போராட்டத்தால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டவர்கள் தமிழ் மக்களே. அவர்கள் தமது அடையாளத்தையும், கௌரவத்தையும் காப்பாற்றிக்கொள்ள நீண்டகாலப் போராட்டங்களை நடத்திவந்துள்ளனர். ஆயுதப் போராட்டத்துக்கான காரணங்களாக அமைந்த விடயங்கள் இன்னமும் நீடிப்பதனால் அவற்றுக்கு விரைவாகத் தீர்வு காணப்படவேண்டும்.” – இவ்வாறு வலியுறுத்தினார் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன். இலங்கையில் நாடாளுமன்ற ஜனநாயகம் ஏற்படுத்தப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவையொட்டி நேற்று நடைபெற்ற விசேட நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு …
Read More »ஒருமித்த நாட்டுக்குள் சகலருக்கும் சம உரிமை தீர்வு! – நாடாளுமன்றில் மைத்திரி உறுதி
“பிரிக்க முடியாத – பிளவுபடாத ஒருமித்த நாட்டுக்குள் அனைத்து மக்களின் உரிமைகளை சக்திமயப்படுத்தும் பின்புலத்தில் உருவாகும் புதிய அரசமைப்புக்கு நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்தும் உறுப்பினர்களும் ஆதரவு வழங்க வேண்டும்” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இலங்கையில் நாடாளுமன்ற ஜனநாயகம் ஏற்படுத்தப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவையொட்டி நேற்று நடைபெற்ற விசேட நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- “அரசு என்ற அடிப்படையில் நாம் …
Read More »மத்திய வங்கி ஆளுநர் வடக்குக்கு இருநாள் பயணம்!
மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி இரண்டு நாட்கள் பயணம் மேற்கொண்டு நாளைமறுதினம் வடக்குக்குச் செல்லவுள்ளார். வடமாகாணத்திலுள்ள யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய அனைத்து மாவட்டங்களுக்கு விஜயம் மேற்கொண்டு அந்த மக்களின் வாழ்வாதார நிலைமைகள் தொடர்பில் ஆளுநர் பார்வையிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 6ஆம் திகதி முல்லைத்தீவில் இயங்கும் அரசசார்பற்ற நிறுவனங்களுடன் பேச்சு நடத்தவுள்ளதோடு, முல்லைத்தீவு பிரதேச செயலகத்துக்கும் செல்லவுள்ளார். 7ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஆளுநர் …
Read More »182 தொண்டராசிரியர்களுக்கு வடக்கில் ஆசிரியர் நியமனம்! – மத்திய கல்வி அமைச்சு அனுமதி
வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களில் நிரந்தர நியமனம் வழங்க தெரிவாகிய 182 பேரின் பெயர்ப் பட்டியல் வடக்கு மாகாணக் கல்வி அமைச்சுக்கு கிடைத்தது. வடக்கு மாகாணத்தின் 12 கல்வி வலயங்களிலும் தற்போது தொண்டர் ஆசிரியர்களாகப் பணியாற்றுபவர்களை இலங்கை ஆசிரியர் சேவைக்குள் உள்ளீர்க்கும் நோக்கில் மத்திய கல்வி அமைச்சால் நேர்முகத் தேர்வு நடாத்தப்பட்டது. நேர்முகத் தேர்வில் ஆயிரத்து 44பேர் பங்கு கொண்டிருந்தனர். அவர்களில் பலர் நேர்முகத் தேர்வில் கோரப்பட்ட தகமைகளை நிறைவு …
Read More »அப்பாவிச் சிங்களவர்களை தவறாக வழிநடத்துகிறீர்கள்! – சம்பந்தன்
புதிய அரசமைப்புத் தொடர்பில் அப்பாவி சிங்கள மக்களை நீங்கள் தவறாக வழிநடத்துகின்றீர்கள் என்று மஹிந்த அணியைச் சேர்ந்த ஜி.எல்.பீரிஸிடம் நேருக்கு நேர் காட்டமாக எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்ததாக, பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். இலங்கைக்கான பங்களாதேஷ் தூதுவரின் கொழும்பு இல்லத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற இரவுநேர விருந்து நிகழ்வொன்றில் பங்கேற்றபோதே எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் இந்தக் குற்றச்சாட்டை ஜி.எல்.பீரிஸிடம் முன்வைத்ததாக அது …
Read More »புதிய அரசமைப்புக்கு எதிரான கோட்டாவின் வியூகத்தை முறியடிக்க முப்படையினரையும் நாடுகின்றது அரசு!
புதிய அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கையானது நாட்டைக் கூறுபோடுவதற்கான ஆரம்பகட்டம் என்றும், அது படையினருக்குப் பேராபத்தை ஏற்படுத்திவிடும் என்றும் கூட்டு எதிரணியால் முன்னெடுக்கப்பட்டுவரும் பிரசாரப்போரை முறியடிக்கும் முயற்சியில் அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. இதன் ஆரம்பகட்ட வியூகமாக அரசமைப்பு நிர்ணய சபையின் இடைக்கால அறிக்கை தொடர்பில் முப்படையினருக்குத் தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தின் சட்டப்பணியகத்தின் உதவியுடனும், சட்டவல்லுநர்களின் பங்களிப்போடும் முன்னெடுக்கப்பட்டுவரும் இவ்வேலைத்திட்டத்தின் ஆரம்பகட்ட நடவடிக்கையாக அண்மையில் இராணுவத்தின் ஒரு பிரிவினருக்கு கருத்தரங்கொன்று நடத்தப்பட்டுள்ளது. …
Read More »ஒற்றையாட்சி முறைமை பலப்படுத்தப்பட்டுள்ளது! – சமஷ்டிக்கு இடமில்லை
“புதிய அரசமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையின் சிபாரிசுகளின் பிரகாரம் இலங்கை பிளவுபடாததும் பிரிக்கமுடியாததுமான நாடாக காணப்படுகின்றது. அத்துடன், ஒற்றையாட்சி கட்டமைப்பும் முன்பிருந்ததைவிட பலப்படுத்தப்பட்டுள்ளது” என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் அரசமைப்புப் பேரவையின் வழிநடத்தல் குழுவின் உறுப்பினருமான ஜயம்பதி விக்ரமரத்ன தெரிவித்தார். அத்துடன், அதிகாரப்பகிர்வு குறித்து நாட்டில் தவறான முன்னுதாரணங்கள் கட்டவிழ்த்துவிடப்படுவதாகவும், சமஷ்டி என்ற அம்சம் (இலட்சனை) இடைக்கால அறிக்கையில் எங்கும் கூறப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். …
Read More »