Sunday , October 19 2025
Home / அருள் (page 285)

அருள்

கோட்டாவைக் கைதுசெய்து ‘ஹீரோ’வாக்க வேண்டாம்!

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவைக் கைதுசெய்வதை தடுத்துநிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர், இந்தக் கோரிக்கையை ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ளனர். கோட்டாபய ராஜபக்ஷவைக் கைதுசெய்து நாட்டு மக்கள் மத்தியில் அவரைப் பெரியாளாக்கிவிட வேண்டாம் என்றும், அவரைக் கைதுசெய்வதைத் தடுக்குமாறும் அவர்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. எனினும், நீதித்துறையின் சுயாதீன செயற்பாடுகள் மீது தன்னால் தலையிட முடியாது என்றும், அவரைக் …

Read More »

புதிய அரசமைப்பில் தமிழருக்கு தீர்வு கிடைக்குமா? – அறிவதில் அமெரிக்கா நாட்டம்

இலங்கையின் புதிய அரசமைப்பு முயற்சிகள் தொடர்பாக அறிந்துகொள்வதில் அமெரிக்க அதிகாரிகள் ஆர்வம் கொண்டிருந்தனர் எனத் தெரியவருகின்றது. இந்த முயற்சியின் ஊடாக தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்குமா என்பதைத் தெரிந்துகொள்வதே அவர்களின் நோக்கமாக இருந்துள்ளது. அமெரிக்காவுக்கு கடந்த மாத இறுதியில் சபாநாயகர் கரு ஜயசூரியா தலைமையில் குழுவொன்று விஜயம் செய்தது. இதில் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, சந்திரானி பண்டார, இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார, நாடாளுமன்ற உறுப்பினர்களான …

Read More »

ஒருமித்த தீர்மானம் எடுக்க களமிறங்குகின்றார் சந்திரிகா அம்மையார்!

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவது குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினுள் மாறுபட்ட நிலைப்பாடுகள் உருவாகியுள்ள நிலையில் அவற்றுக்கு முடிவுகட்டி ஒருமித்த தீர்மானமொன்றை எடுக்க களமிறங்கியுள்ளார் முன்னாள் ஜனாதிபதியும் சு.க வின் சிரேஷ்ட ஆலோசகருமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க. புதிய அரசமைப்பொன்றை உருவாக்குவதற்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில் வெஸ்மினிஸ்டர் எனப்படும் பிரதமர் தலைமையிலான ஆட்சியை ஐக்கிய தேசியக் கட்சி முன்மொழிந்துள்ளது. அதேவேளை, மட்டுப்படுத்தப்பட்ட நிறைவேற்று …

Read More »

திருப்பதியில் மைத்திரி தரிசனம்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று அதிகாலை திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்டார். நேற்று பெங்களூர் வழியாக திருப்பதி சென்ற ஜனாதிபதி மைத்திரி, அவரது துணைவியார் ஜயந்தி புஸ்பா குமாரி, மகன் தஹம் சிறிசேன ஆகியோர் பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தனர். இன்று அதிகாலை அவர்கள் ஏழுமலையான் ஆலயத்தில் சுப்ரபாத சேவையின்போது வழிபாடுகளை மேற்கொண்டனர். இதையடுத்து. அவர்களுக்கு திருப்பதி ஆலயத்தின் சார்பில், நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகளால் ஜனாதிபதி கௌரவிக்கப்பட்டு, ஆலய …

Read More »

திராவிட முன்னேற்ற கழகத்தின் பக்கம் சாய்கிறதா நடிகர் சங்கம்?

ஜிஎஸ்டி வரி விதிப்பு போன்று சினிமா துறைக்கு பிரச்சனை ஏற்படும் போது தன்னை மட்டுமல்ல திமுக சட்டமன்ற உறுப்பினர் வாகை சந்திரசேகரையும் அழைக்க வேண்டும் என நடிகர் சங்கத்தின் துணை தலைவர் கருணாஸ் தெரிவித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் அச்சங்கத்தின் துணை தலைவர் நடிகர் கருணாஸ் பேசினார். அப்போது, தான் சட்டமன்ற உறுப்பினர் ஆனதற்கும், அத்தகைய மாயை நடந்ததற்கும் காரணம் தான் நடிகர் சங்கத்தின் துணை …

Read More »

தமிழக அரசு மீது தமிழிசை சவுந்தர்ராஜன் குற்றச்சாட்டு!

டெங்கு காய்ச்சலை தடுக்க அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கை போதுமானதாக இல்லை என, பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் புகார் தெரிவித்துள்ளார். சென்னை கீழ்ப்பாக்கம் அருகே நிலவேம்பு குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்த அவர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும், முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் டெங்கு காய்ச்சலும் சேர்க்கப்பட வேண்டும் என்றும் கூறினார். கேரள அரசு …

Read More »

கணவர் நடராஜனுடன் சசிகலா இரண்டாவது நாளாக சந்திப்பு!

சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது கணவர் நடராஜனை, அதிமுக அம்மா அணியின் பொதுச் செயலாளர் சசிகலா இரண்டாவது நாளாக சந்தித்தார். சசிகலாவின் கணவர் நடராஜன் கல்லீரல், சிறுநீரகம் பாதிப்பு காரணமாக சென்னை குளோபல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் கணவரின் உடல் நிலை கருதி சசிகலாவிற்கு 5 நாள் பரோல் வழங்கப்பட்டது. இதையடுத்து, நேற்று முன்தினம் பரப்பன அக்ரஹார சிறையிலிருந்து வெளியே வந்த அவர் நேற்று குளோபல் …

Read More »

என்னை அப்படி செய்ய சொல்வதற்கு உங்களுக்கு உரிமை இல்லை- காயத்ரி அதிரடி

Bigg Boss நிகழ்ச்சியில் ரசிகர்களால் ரசிக்கப்பட்டவர் ஓவியா. அதே ரசிகர்களால் நிகழ்ச்சியில் மிகவும் மோசமாக வெறுக்கப்பட்டவர் காயத்ரி. இவர்கள் இருவரும் இறுதி நாளில் கூட சரியாக பேசவில்லை. இந்த நிலையில் ஓவியா ரசிகர்கள் காயத்ரியிடம் அவரை பற்றி ஏதாவது கூறுங்கள் என்று நிறைய பேர் டுவிட் செய்தனராம். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் காயத்ரி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், நான் ஒருவரை விரும்பவும், வெறுக்கவும் நீங்கள் முடிவு செய்ய முடியாது. …

Read More »

நான் வெறுப்பது யாரை? ஓவியா ஆர்மி பிடிக்காது? மனம் திறந்த ஓவியா

பிக்பாஸ் முடிந்தாலும் அனைவரும் எதிர்பார்ப்பதும், ரசிப்பதும் ஓவியாவைத்தான். இவருக்கான ரசிகர் கூட்டம் யாரும் எதிர்பார்த்திராத ஒன்று. இவர் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், நீங்கள் வெறுக்கும் நபர் யார் என்ற கேள்விக்கு நான் யாரையும் வெறுப்பதில்லை. நான் என்னை நேசிப்பதால் அனைவரையும் நேசிக்கிறேன். எனக்கு யாராவது துரோகம் செய்தாலோ, கொலை செய்ய வந்தால் கூட எனது கோபம் அந்த நாளைக்கு மட்டும்தான் இருக்கும். மறுநாள் புதிய நாளாக இருக்கத்தான் விரும்புவேன் என்றார். …

Read More »

ஓவியாவை நான் ஏன் வெறுத்தேன்- காயத்ரி கூறும் பதில்

BiggBoss நிகழ்ச்சி மூலம் ஒரு சிலருக்கு மக்களிடம் பலத்த வரவேற்பு கிடைத்திருக்கிறது. ஆனால் ஜுலி, காயத்ரி போன்றோர் இப்போதும் ரசிகர்களால் வெறுக்கப்படுகின்றனர். தொடர்ந்து நிறைய பேட்டிகள் கொடுத்து வரும் காயத்ரி, அண்மையில் ஒரு பேட்டியில் BiggBoss அனுபவம் மற்றும் ஓவியாவை பற்றி கூறியுள்ளார். அதில் அவர், BiggBoss நிகழ்ச்சியில் நான் நீண்ட நாட்கள் இருக்க மாட்டேன் என்று எனது நண்பர்கள் கூறினார்கள். ஆனால் 2 மாதங்கள் நான் எப்படியோ தங்கிவிட்டேன். …

Read More »