“அகதிகளாக வந்தவர்களை நாம் கைவிடக்கூடாது: அது இலங்கையின் கலாசாரமும் அல்ல. எனவே, சாக்குப்போக்குகளைக் கூறிக்கொண்டிருக்காது அந்த மக்களை அரசு பாதுகாக்கவேண்டும்” என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ்ப் பத்திரிகை ஒன்றிடம் தெரிவித்துள்ளார். இலங்கையில் தஞ்சம் புகுந்த ரோஹிங்யா முஸ்லிம்கள் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ள வீட்டை சுற்றிவளைத்த குழுவொன்று அவர்கள்மீது தாக்குதல் நடத்துவதற்கு முற்பட்டதுடன், அடாவடிச் செயலிலும் ஈடுபட்டது. இந்தச் சம்பவம் தொடர்பில் வினவியபோதே மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் […]
Author: அருள்
முள்ளிவாய்க்காலில் படை வசமுள்ள நிலத்தை விடுவிக்க வலியுறுத்துவேன்! – வட மாகாண சபை உறுப்பினர் ரவிகரன்
“முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில், இராணுவத்தினரின் வசமுள்ள கடற்கரையோரம் உட்பட்ட சுமார் 25 ஏக்கர் நிலத்தை விடுவிக்குமாறு, முல்லைத்தீவு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்துவதோடு, இவ்விடயம் தொடர்பாக, வடக்கு மாகாண முதலமைச்சரின் கவனத்துக்கும் கொண்டுவரவுள்ளேன். – இவ்வாறு வடக்கு மாகாண சபை உறுப்பினர் து. ரவிகரன் தெரிவித்துள்ளார். “யுத்தத்துக்கு முன்னரான காலப்பகுதியில், மீனவர்கள் பாரம்பரியமாக தொழில் செய்த முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரைப் பகுதி உட்பட25 ஏக்கர் […]
பத்து வருடங்களாக சிறையில் வாடிய அரசியல் கைதி 3 வழக்குகளிலிருந்து விடுதலை!
வத்தளை, எலகந்தைப் பகுதியில் அமைந்துள்ள மின்மாற்று நிலையத்தைக் குண்டு வைத்துத் தகர்த்தெறிய சதித் திட்டம் தீட்டினார் என்பது உட்பட பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்கீழ் மூன்று வழக்குகளை எதிர்கொண்டகிளிநொச்சி இளைஞரொருவர் கடந்த சுமார் பத்து ஆண்டுகளாகச் சிறையில் இருந்த நிலையில், அவரது சட்டத்தரணியான கே.வி.தவராஜாவின் வாதத்தையடுத்து மூன்று வழக்குகளிலிருந்தும் விடுதலைசெய்யப்பட்டார். 2008ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்கீழ் குற்றப் புலனாய்வுப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட கிளிநொச்சியைப் பிறப்பிடமாகக் கொண்ட ஜெயராம் இராமநாதனுக்கு எதிராக […]
பேய் கதையில் மிரட்ட வரும் நடிகை ஓவியா
யாமிருக்க பயமே’ படத்தை இயக்கிய டிகே அடுத்ததாக இயக்கவிருக்கும் காட்டேரி படத்தில் ஓவியா இணைந்து நடிக்க உள்ளார். அவருடன் இணைந்து நாயகனாக ஆதி சாய்குமார் நடிக்கிறார். டிகே அடுத்ததாக இயக்கவிருக்கும் புதிய படத்திற்கு `காட்டேரி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நாயகியாக ஓவியாவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். நாயகனாக ஆதித்யா சாய்குமார் அறிமுகமாகிறார். விரைவில் துவங்க உள்ள இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.வி.ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். ஏற்கனவே சந்தோஷ் […]
பிக்பாசின் இரண்டாம் சீசனை தொகுத்து வழங்கப்போவது யார் தெரியுமா?
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. ஞாயிற்றுகிழமையுடன் முடிவடைய உள்ளது. அதுபோல தெலுங்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை மிகவும் பிரம்மாண்டமாக முடிந்துள்ளது. ஜுனியர் என்.டி.ஆர் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது ரசிகர்கள் அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என்றும் அதனை யார் தொகுத்து வழங்க இருக்கிறார் என்றும் கேள்வி எழுப்ப […]
மிகப்பிரமாண்டாமாய் பிக்பாஸ் இறுதி போட்டி..! நடிகர் விஜய் பங்கேற்பு..! ஏற்பாடுகள் தீவிரம்…!!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இதன் இறுதி போட்டியை மிகப்பிரமாண்டமாய் நடத்த விஜய் டிவி முடிவு செய்துள்ளது. இந்த போட்டியில் இளையதளபதி விஜய் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. அவர் கலந்து கொண்டு பிக்பாஸ் பட்டத்தை வெல்பவருக்கு பரிசு வழங்குகிறார். மேலும் அவர் நடித்த மெர்சல் திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளிவர உள்ளது. இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியாகவும் இது அமையும். அவருக்கு எதாவது […]
சென்ற போன் கால்… கதவை தட்டிய ஓவியா.. அதிர்ச்சியில் லாரன்ஸ்
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக புதிய உச்சத்தை எட்டியுள்ள ஓவியாவுக்கு தற்போது திரைப்பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் ராகவா லான்ரன்ஸ் இயக்கி நடிக்கவிருக்கும் காஞ்சனா படத்தின் மூன்றாம் பாகத்தில் தற்போது ஓவியா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை உறுதிப்படுத்தும் விதமாக நடிகை ஓவியா மற்றும் லாரன்ஸ் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. காஞ்சனா மூன்றாம் பாகம் தொடர்பாக நடிகை ஓவியாவுக்கு லாரன்ஸ் அலுவலகத்தில் இருந்து அழைப்பு சென்றுள்ளது. அப்போது […]
10 லட்சம் கொடுத்து ஆசை காட்டிய பிக்பாஸ்; ஏற்க மறுத்த போட்டியாளர்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சி 100 நாட்களை கொண்டது. தற்போது இறுதி 5 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கின்றார். தமிழ் பிக் பாஸ் போட்டியில் மொத்தம் 15 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் ஒவ்வொரு வாரமும் மக்கள் வாக்களித்து பிக்பாஸ் வீட்டில் இருக்க வாய்ப்பு கொடுக்கலாம். மிகவும் பரபரப்புடன் நடந்து வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதிப் […]
பிக்பாஸ் வீட்டில் நள்ளிரவில் பெட்டியுடன்ஆரவ் வெளியேற்றப்பட்ட நபர் யார்…!!
100 நாட்களை கொண்ட பிக்பாஸ் நிகழ்ச்சி, கிராண்ட் ஃபைனலுக்கான நாட்கள் நெருங்கிக்கொண்டே இருக்கிறது, ஆனால், அதற்குரிய எந்தவித ஆரவாரமும் ஆர்ப்பாட்டமும் இல்லாமலே கழிகிறது பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடைசி வாரம். பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் 4 நாட்களில் முடிவடைய இருக்கிறது. நிகழ்ச்சியின் பிரம்மாண்ட மேடையில் 15 பேருடன் போட்டியிட்டு இறுதியாக டைட்டிலை வெல்லப்போவது யார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் மிகவும் ஆவலாக இருக்கின்றனர். கடந்த வாரம் கமல்ஹாசன் அடுத்த வார […]
வித்தியாவுக்காக குரல் கொடுத்தவர்களுக்கு நன்றி – வித்தியாவின் தாய் நெகிழ்ச்சி
என்னைப் போன்று இனி எந்தத் தாயும் அழக் கூடாது. என் மகள் வித்தியாவுக்காக கஸ்டப்பட்ட அனைவருக்கும் கண்ணீருடன் வித்தியா சார்பில் நன்றி கூறுகின்றேன். இவ்வாறு புங்குடுதீவு மாணவி வித்தியாவின் தாய் சிவலோகநாதன் சரஸ்வதி கண்ணீருடன் தெரிவித்தார். வன்கொடுமையின் பின்னர் கொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவியின் வழக்கில் குற்றவாளிகள் 7 பேருக்கு இன்று தூக்குத் தண்டணை விதிக்கப்பட்டது. அதன்பின்னர் கருத்துக் கூறியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். “நீதிபதிகள் மூவருக்கும் நன்றிகள். விசாரணைகள் […]





