போர் நிறைவடைந்து 10 வருடங்களாகும் நிலையில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுக் கொடுப்பதில் ஐ.நா.சபை தொடா்ந்தும் கால தாமதத்தையே காட்டுவதாக முன்னாள் மாகாண அமைச்சா் அனந்தி சசிதரன் குற்றஞ்சாட்டியுள்ளார். ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தின் 40 வது கூட்டத்தொடா் ஆரம்பமாகவுள்ள நிலையில் முதலமைச்சா் ஐ.நா செல்வதற்கான விசேட குழு ஒன்றிணை அமைத்து நாடுகள் மற்றும் மனித உரிமை அமைப்புக்களை சந்தித்து தமிழ் மக்களின் பிரச்சினைகளை கூறவேண்டும், அதுமட்டுமல்லாமல் இலங்கை …
Read More »அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டம்
தேசிய அரசாங்கம் அமைக்கும் பிரேரணையை மீண்டும் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க வட்டாரங்ளில் இருந்து தெரியவருகின்றது. அதன் பிரகாரம் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை 48 ஆகவும் இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களின் எண்ணிக்கையை 45 வரை அதிகரிக்கும் பிரேரணை எதிர்வரும் 20 ஆம் திகதி பாராளுமன்றம் கூடும்போது முன்வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த பிரேரணை தற்போது பாராளுமன்ற ஒழுங்குப்பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், 20 ஆம் திகதி பாராளுமன்றத்தில் …
Read More »நாடு திரும்பும் மகிந்த ராஜபக்சே
எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஸ தனது இந்திய பயணத்தை நிறைவு செய்து இன்றைய தினம் நாடு திரும்பியுள்ளார். ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல் 178 என்ற விமானத்தின் ஊடாக அவர் ஹைய்தராபாத் நகரில் இருந்து நாடு திரும்பியுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்துள்ளார். மாநாடொன்றில் கலந்து கொள்வதற்காக எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஸ இந்தியா சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Read More »ரணிலின் கோரிக்கையை மறுத்த அமைச்சரவை
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்க மறுத்துள்ளது.குறித்த ஆணைக்குழுவை அமைப்பதற்காக அனுமதி கோரும் பத்திரத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தார். எனினும், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைப்பதற்கு அமைச்சரவையில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சராகவும் பதவி வகிக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்த முன்மொழிவு தொடர்பாக ஆராய்வதற்கு கால அவகாசம் தேவைப்படுவதாக தெரிவித்துள்ளார். அத்தோடு, அமைச்சர் சம்பிக்க ரணவக்கவும், இந்த ஆணைக்குழு …
Read More »இன்றைய ராசிபலன் 13.02.2019
மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள். குடும் பத்தில் மகிழ்ச்சி தங்கும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத் தாகும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள். ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் செல்வதால் அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்து நீங்கும். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் …
Read More »ரஜினி ரசிகருக்கு அரிவாள் வெட்டு! அப்படி என்ன பேசினார்?
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்து ஒருவருடத்திற்கு மேல் ஆகிறது. ஆனால் தற்போது வரை அரசியல் கட்சி துவங்கும் பணிகளை மட்டுமே செய்து வருகிறார். சமீபத்தில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானை விமர்சித்து வீடியோ வெளியிட்டிருந்தார் சேலம் பகுதி ரஜினி ரசிகர் பழனி. அந்த வீடியோ வைரலானது. இந்நிலையில் தற்போது பழனியை மர்ம நபர்கள் சிலர் அரிவாளால் வெட்டியுள்ளனர். ரத்தம் சொட்ட சொட்ட அவர் பேசும் வீடியோ வெளியாகி …
Read More »சென்னையில் திடீரென அதிகாலை இடம்பெற்ற நிலநடுக்கம்…
வங்கக் கடலில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, சென்னையில் சில இடங்களில் நில அதிர்வு ஏற்பட்டது.வங்கக் கடலில் இன்று காலை 7.02 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. சென்னைக்கு வடகிழக்கே 609 கிமீ தொலைவில் கடல் மட்டத்தில் இருந்து 10 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இந்த நிலநடுக்கமானது, ரிக்டர் அளவு கோலில் 4.9 அலகாக பதிவாகியிருந்தது. இந்த நிலநடுக்கம் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் நில அதிர்வு …
Read More »கூட்டமைப்பின் புதிய தலைவர் சுமந்திரன் ?
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைத்துவத்தை மாற்றுவதற்கான எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என, கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். கூட்டமைப்பின் அடுத்த தலைவராக சுமந்திரனை தெரிவு செய்வது தொடர்பாக உயர்மட்டக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படவுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்தது. நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனை மேற்கோள்காட்டி இச்செய்தி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், இது தொடர்பாக கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும், கூட்டமைப்பின் தலைமையில் …
Read More »ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு மீண்டும் அரசு வேலை!
பாடசாலைகளில் ஏற்பட்டுள்ள ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு, ஓய்வுப் பெற்ற பாடசாலை ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகள் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் என்று கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். மாத்தளை- நாவுலயில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்துத் தெரிவித்தப் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் எதிர்வரும் வாரங்களில் அமைச்சரவையில் யோசனையொன்றை சமர்ப்பிப்பதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கான நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
Read More »வெள்ளை வான் கடத்தலை அறிமுகப்படுத்தியவர் யார்? கோட்டா
இலங்கையில் வெள்ளை வான் கலாசாரத்தை அமெரிக்காவே அறிமுகப்படுத்தியது என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தாம் பதவியிலிருந்த காலத்தில் புலனாய்வுப் பரிவினர் பயன்படுத்திய வாகனங்கள் வெள்ளை நிறத்தில் காணப்பட்டதால், அவற்றை வெள்ளை வான் என கூறமுடியாது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் கடந்த ஆட்சிக்காலத்தில் வெள்ளைவான் கலாசாரத்தை கோட்டாவே அறிமுகப்படுத்தினார் என்ற குற்றச்சாட்டுக்கள் பரவலாக முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஆங்கில வார இதழொன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே …
Read More »