Tuesday , August 26 2025
Home / அருள் (page 104)

அருள்

மாதா சொரூபதில் ஏற்பட்ட அதிசயம்! படையெடுக்கும் பக்தர்கள்

வாசுதேவநல்லூர் அருகே கிறிஸ்தவ ஆலயத்தில் நேற்று இரவு மாதா முகத்தில் இருந்து வியர்வை வடியத் தொடங்கியது. இந்த அதிசயத்தை பார்த்து மக்கள் வியப்பு அடைந்தனர். நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ளது வேலாயுதபுரம். இங்கு பிரசித்தி பெற்ற குருசுமலை மாதா ஆலயம் உள்ளது. 75 ஆண்டுக்கு முன் இந்த மலையில் மாதா காட்சி கொடுத்தாராம். இதைத்தொடர்ந்து அங்கு ஆலயம் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது அதன் பவள விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. …

Read More »

இன்றைய ராசிபலன் 25.02.2019

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

மேஷம்: சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். தாய்வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள். ரிஷபம்: பணப்புழக்கம் அதிக ரிக்கும். உறவினர், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள்எடுப்பார்கள் அதிகாரப்பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு …

Read More »

தற்போதைய நாடாளுமன்றம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் கருத்து

மனிதர்களின் நடத்தையை தவறாக எடுத்துக்காட்டும் இடமாக தற்போதைய நாடாளுமன்றம் மாறியுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். திஸ்ஸமஹாராமையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தாம் 1970ஆம் ஆண்டுகளில் இருந்த நாடாளுமன்றம் தற்போது இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றிற்கு வருகைதந்து பதிலளிக்க முடியாத ஒருவர் குறித்து விமர்சனம் முன்வைக்கப்படுவதில்லை. எனினும், இன்று அந்த நிலைமை மாறியுள்ளதாக மஹிந்த ராஜபக்ஸ …

Read More »

ஜெனிவா தீர்மான இணை அனுசரணையில் இருந்து விலகுகிறது சிறிலங்கா

Maithripala Sirisena

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், அமெரிக்காவினால் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு வழங்கிய இணை அனுசரணையில் இருந்து விலகிக் கொள்வது குறித்து கலந்துரையாடப்பட்டு வருவதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ”வெளிநாட்டுபங்களிப்புடன் கூடிய போர்க்குற்ற தீர்ப்பாயம் ஒன்றை அமைக்க இந்த தீர்மானம் வலியுறுத்துகிறது. இந்த தீர்மானத்துக்கு வழங்கிய இணை அனுசரணையில் இருந்து விலக வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்த விடயம் தொடர்பாக வெளிவிவகார அமைச்சு அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டு …

Read More »

போர் குற்றங்களில் இருந்து இராணுவத்தை காப்பாற்ற மைத்திரி போடும் புதிய திட்டம்!

மைத்திரிபால சிறிசேன

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு வழங்கிய இணை அணுசரனையிலிருந்து விலகிக்கொள்வது குறித்து இலங்கை ஆராய்ந்துவருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை உறுதி செய்துள்ளார். நாங்கள் இதிலிருந்து விலகிக்கொள்ளலாம் என எதிர்பார்க்கின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தற்போது இடம்பெறுகின்றன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள அமர்வுகளிற்கு நாங்கள் தயாராகிவருகின்றோம்,நாங்கள் சில முன்னேற்றங்களை காண்பித்துள்ளோம், என தெரிவித்துள்ள சிறிசேன எங்கள் படையினர் யுத்த குற்றங்களில் …

Read More »

உறவுகளுக்கு நீதிகோரி நல்லூரில் ஆரம்பமான புதிய முயற்சி

வலிந்து காணாமல் ஆக்கபபட்ட உறவுகள் போராட்டத்தை ஆரம்பித்து இரண்டு வருட பூர்த்தியை முன்னிட்டு, 3 லட்சம் கையொப்பம் பெற்று ஐ.நாவிற்கு அனுப்பும் செயற்திட்டத்தை இன்று ஆரம்பித்தனர். தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டஉறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தினர், யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்கு முன்பாக இன்று காலை கையெழுத்துச் சேகரிப்பில் ஈடுபட்டனர். வெளிநாட்டவர் உட்பட பலர் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தமது கையொப்பங்களை இட்டனர்.

Read More »

கொழும்பில் பாரிய அளவில் கைப்பற்றப்பட்ட ஹெரோயின்…

மிகப்பெரிய அளவில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டமை குறித்து பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு ஜனாதிபதி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் நேற்று மாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது 2945 மில்லியன் பெறுமதியான 294 கிலோ 490 கிரேம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. இதற்கு பாராட்டு தெரிவித்தே ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன தனது டுவிட்டர் பக்கத்தில் மேற்கண்ட வாழ்த்துச் செய்தியை தெரிவித்துள்ளார்.

Read More »

இன்றைய ராசிபலன் 24.02.2019

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

மேஷம்: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். மனைவி வழி உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள். ரிஷபம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக்கொள்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலைவாங்குவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார். மாறுபட்ட அணுமுறையால் …

Read More »

நாடாளுமன்ற குழப்பம் தொடர்பான விசாரணையால் பதறும் மகிந்த

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் கடந்த நவம்பர் 14, 15, 16ஆம் நாள்களில் நடந்த குழப்பங்கள் தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடத்தும் விசாரணைகளை நிறுத்த வேண்டும் என்று சபாநாயகரிடம், எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச கோரினார்.நாடாளுமன்றக் குழப்பங்கள் தொடர்பாக விசாரணை நடத்திய குழுவின் அறிக்கை நேற்று நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 54 உறுப்பினர்கள் தவறிழைத்திருப்பதாகவும், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்த …

Read More »

பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு எதிராக நிற்கும் தமிழ் அரசியல் கட்சிகள்?

எதிர்வரும் திங்கட்கிழமை வடக்கு, கிழக்கில் முழு அடைப்புப் போராட்டத்துக்கு பல்வேறு அமைப்புகளும் அழைப்பு விடுத்துள்ள நிலையில், தமிழரசுக் கட்சி மௌனம் காத்து வருகிறது.ஜெனிவாவில் வரும் திங்கட்கிழமை ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளது. இதில் சிறிலங்கா விவகாரம் முக்கிய இடத்தை வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி வழங்குமாறு சிறிலங்கா அரசாங்கத்துக்கு அழுத்தங்களைக் கொடுக்குமாறு வலியுறுத்தி, வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியாக முழு அடைப்பு போராட்டம் …

Read More »