Wednesday , August 27 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / சட்டவிரோத குடியேறிகள் தொடர்பில் அவுஸ்திரேலியா விடுத்துள்ள எச்சரிக்கை

சட்டவிரோத குடியேறிகள் தொடர்பில் அவுஸ்திரேலியா விடுத்துள்ள எச்சரிக்கை

சட்டவிரோத குடியேறிகள் விடயத்தில் அவுஸ்திரேலியா கடுமையாக நடந்து கொள்ளும் என்று அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்லவிருந்த 131 இலங்கையர்கள், மலேசியாவில் கைது செய்யப்பட்டனர். இதையடுத்தே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

சட்டவிரோத குடியேறிகள் தொடர்பில் அவுஸ்திரேலிய எல்லைப்பகுதிக்கு இன்னும் ஆபத்து இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், அவுஸ்திரேலியா தமது எல்லைப்பகுதி கண்காணிப்பை பலப்படுத்த வேண்டியுள்ளதையும் குடிவரவுத்துறை அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv