Monday , August 25 2025
Home / செய்திகள் / உலக செய்திகள் / பிரான்சில் புகையிரத நிலையத்தில் தாக்குதல்: இருவர் படுகொலை

பிரான்சில் புகையிரத நிலையத்தில் தாக்குதல்: இருவர் படுகொலை

தென் பிரான்ஸ் பகுதியில் உள்ள மார்செய்ல் (Marseille ) நகரில் உள்ள செயின்ட் சார்ள்ஸ் (Saint Charles ) நிலக்கீழ் புகையிரத நிலயத்தில் இன்று இனந்தெரியாத நபர் ஒருவர் கத்தியால் குத்தி மேற்கொண்ட தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில் குறித்த பிரதேசத்துக்கு சென்ற காவல்துறையினர் தாக்குதலாளியை சுட்டுக் கொன்றுள்ளனர்.

தாக்குதல் நடத்திய நபர் குறித்த தகவல்கள் எவையும் இதுவரை வெளியாகவில்லை.

குறித்த பகுதிக்கு பொதுமக்கள் செல்வதனை தவிர்க்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv