பிக் பாஸ் வீட்டில் இன்று மகிழ்ச்சியான நாள் உண்மையில் இன்று தான் கமலஹாசன் உருப்படியாக ஒரு விடயத்தை செய்து இருக்கிறார் . ஓவராக பிலிம் காட்டி ஓவரா பில்டப் கொடுக்கும் ஐஸ்வர்யாவின் ஆட்டத்திற்கு முடிவு கிடைக்க வேண்டும் என பலரும் எதிர் பார்த்திருக்க இன்று வந்தது அந்த நல்ல நாள் .
யாரையும் மதிக்காது நடப்பதை மட்டுமே வேலையாக வைத்திருக்கும் ஐஸ்வர்யாவிற்கு இன்று ஆண்டவர் கொடுத்த விடயம் அவர் எதிர் பார்க்காதது தான் . பாலாஜியின் மீது குப்பை கொட்டியது , ரித்விகாவை கறுப்பி தமிழ் மூஞ்சி என திட்டியது , ஜனனி, மும்தாஜ், வைஷ்ணவி, சென்ராயன், பொன்னம்பலம், இவர்களை தரக்குறைவாக நடத்துவது போன்ற செயல்களை செய்த ஐஸ்வர்யாவை பிக் பாஸ் டீம் தொடர்ந்தும் காப்பாற்றியது , இதனால் ரசிகர்கள் ஒவ்வொருவரும் ஐஸ்வர்யாவை திட்டித் தீர்த்தார்கள்.
ஜூலியை கூட மன்னிக்கலாம் அவர் பொய் பேசியதை தவிர பிக் பாஸ் வீட்டில் எந்த தவறும் செய்யவில்லை . காயத்ரி ஓவியாவுக்கு மட்டுமே எதிரியாக இருந்தார் . ஆனால் இந்த ஐஸ்வர்யா ஜூலி , காயத்ரி , ஆர்த்தி , மூவரையும் கலந்து வைத்த விஷம் . ஐஸ்வர்யா இன்று ரோஷத்தோடு வெளியே சென்றால் மகிழ்ச்சி
அடைவது நாமும் தான்..!
https://youtu.be/29ye8n1fR-k