கிளிநொச்சியில் இராணுவ அதிகாரிகள் உட்பட 21 பேர் கைது!
கிளிநொச்சி – தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டைக்காடு பகுதியில், இராணுவ உயரதிகாரி உட்பட்ட 21 பேரை, விசேட அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளனர்.
குறித்த நபர்கள் புதையல் தோண்ட முற்பட்டவேளை இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது அவர்களிடமிருந்து புதையல் தோண்டுவதற்கான பூஜை பொருள்கள், ஸ்கானர் இயந்திரம் உள்ளிட்ட பல பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு கைதானவர்களில் 5 இராணுவ அதிகாரிகளும் 5 இராணுவ வீரர்களும், 13 சிங்களவர்களும் 3 தமிழர்களும் உள்ளடங்குவதாக தர்மபுரம் பொலிஸார் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



