Wednesday , August 27 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / அரியாலை இளைஞர் கொலை – சந்தேகநபர்களின் மறியல் நீடிப்பு!!

அரியாலை இளைஞர் கொலை – சந்தேகநபர்களின் மறியல் நீடிப்பு!!

அரியாலை மணியந்தோட்டம் பகுதியில் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் சந்தேக நபர்களான சிறப்பு அதிரடிப்படையின் புலனாய்வு உத்தியோகத்தர்கள் இருவரின் விளக்கமறியல் எதிவரும் ஜனவரி 9ஆம் திகதிவரை இன்று நீடிக்கப்பட்டது.

கடந்த ஒக்ரோபர் மாதம் 22ஆம் திகதி அரியாலை கிழக்கு மணியம்தோட்டம் வசந்தபுரம் முதலாம் குறுக்கு வீதிப் பகுதியில் 24 வயதுடைய டொன் பொஸ்கோ டினேசன் என்பவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார். இளைஞர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் யாழ்ப்பாண தலைமையகப் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டன. பொலிஸ் மா அதிபரின் பணிப்பின் பேரில் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் சிறப்பு அதிரடிப்படையின் புலனாய்வு அதிகாரி உள்பட இருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் கட்டளையின் பிரகாரம் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

சந்தேகநபர்கள் யாழ்ப்பாண நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் முன்னிலையில் இன்று முற்படுத்தப்பட்டனர்.

குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகள் தொடர்கின்றன என்று மன்றுக்கு அறிவிக்கப்பட்டது. சந்தேகநபர்கள் இருவரையும் ஜனவரி 9ஆம் திகதிவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் கட்டளையிட்டார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv