முதல்வர் பன்னீர்செல்வத்தை, ‘ஜல்லிக்கட்டு நாயகன்’ பட்டம் தந்த எம்.எல்.ஏ.
புகழ்ச்சி:
சட்டசபையில், அ.தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்கள் பேசும் போது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அ.தி.மு.க., பொதுச்செயலர் சசிகலா ஆகியோரை புகழ்ந்து பேசுகின்றனர். சிலர், அவர்கள் இருவரை புகழ்வதுடன், முதல்வர் பன்னீர்செல்வத்தையும் புகழ்கின்றனர்.
‘ஜல்லிக்கட்டு நாயகன்’
நேற்றைய கேள்வி நேரத்தின் போது, அ.தி.மு.க., – தென்னரசு பேசும் போது, ஜெயலலிதா, சசிகலா ஆகியோரை புகழ்ந்து விட்டு, ‘ஜல்லிக்கட்டு நாயகன் முதல்வரை வணங்கி, பேச்சை துவக்குகிறேன்’ என்றார். முதல்வரும் சிரித்தபடி, அவரை திரும்பி பார்த்தார்.
12 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றம்:
தமிழக சட்டசபை கூட்டத்தின் கடைசி நாளான நேற்று, சென்னை மாநகராட்சி பகுதியில், தெருவில் கழிவுநீரை விடுவோருக்கு, இரண்டு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கும் சட்ட மசோதா, வேளாண் விளைபொருள் விற்பனை திருத்த சட்ட முன்வடிவு உட்பட 12 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.