பதுளை கொகோவத்த பிரதேச வர்த்தக நிலையம் ஒன்றில் தீ பரவியதினால் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று அதிகாலை 1.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இரு மாடிகளை கொண்ட வர்த்தக நிலையம் ஒன்றில் இவ்வாறு தீபரவியுள்ளதுடன், பதுளை காவற்துறை மற்றும் தீயணைப்பு பிரிவு தீயணைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பதுளை பிரிதேசத்தினை சேர்ந்த 40 வயதுடைய நபர் தீ பரவிய போது வர்த்தக நிலையத்தில் இருந்துள்ள நிலையில், குறித்த நபர் தீக்காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
தீபரவலுக்கான காரணம் இதுவரையில் அறியப்படாததுடன், பதுளை காவற்துறை சம்பவம் குறித்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.