Wednesday , August 27 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / இவ்வருட சாதாரண தரம் மற்றும் உயர் தர பரீட்சார்த்திகளுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்

இவ்வருட சாதாரண தரம் மற்றும் உயர் தர பரீட்சார்த்திகளுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்

இந்த வருடம் கல்விப் பொதுத்தராதர சாதாரண தர மற்றும் உயர் தர பரீட்சைகளுக்கு தோற்றும் பரீட்சார்த்திகள், தேசிய அடையாள அட்டையை பெற்று கொள்ள விரைவாக விண்ணப்பிக்க வேண்டும் என்று ஆட்பதிவு திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

உரிய காலத்திற்குள் விண்ணப்பித்தால் பரீட்சார்த்திகளினதும் ஆட்பதிவு திணைக்களத்தினதும் பணிகள் மிகவும் சிரமமின்றி அமையும் என்று ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் பீ.வி. குணதிலக தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த வருடம் கல்விப் பொதுத்தராதர சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சைகளுக்கு தோற்றும் பரீட்சார்த்திகளில் 40 சதவீதமான விண்ணப்பங்கள் இதுவரை அனுப்பப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இதுவரை கிடைக்கப்பெற்றுள்ள விண்ணப்பங்களில் சில விண்ணப்பங்கள் குறைபாடுகளுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்முறை பரீட்சைக்குத் தோற்றும் பரீட்சார்த்திகளின் விண்ணப்பங்களை விரைவாக அனுப்பி வைப்பதற்கு அதற்கு பொறுப்பானவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv