Tuesday , October 14 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / முல்லை தீவு மர்மம்: இலங்கை விரைந்த அமெரிக்க குழு!

முல்லை தீவு மர்மம்: இலங்கை விரைந்த அமெரிக்க குழு!

வழக்கத்துக்கு மாறாக முல்லை தீவு கடலில் மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறதாம். முல்லைத்தீவு கடலில் தொடர்ந்து ஏற்படுகின்ற மாற்றம் தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ள அமெரிக்கா குழு இலங்கை விரைந்துள்ளது.

கடந்த ஆறு மாதங்களாக பல முறை முல்லை தீவு கடல் தன்மையில் மாற்றம் காணப்பட்டுள்ளது. நீர் மட்டம் திடீரென் ஐந்து அடி அதிகரித்ததாகவும், கடல் கொந்தளித்ததாகவும், கடல் நீர் நிறம் வித்தியாசமாக காணப்பட்டதாகவும் அங்கு இருக்கும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால், சுனாமி வரக்கூடுமோ என எண்ணி கடலிற்கு பூஜை நடத்தியுள்ளனர். அண்மையிலும், கடல் நீர் வீதிக்கு வருவதாக மக்கள் நகரத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.

இதனால், இலங்கையில் உள்ள ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் எந்த ஒரு காரணமும் கண்டுபிடிக்கப்படாததால், அமெரிக்காவில் இருந்து ஆய்வு குழு இலங்கைக்கு விரைந்துள்ளது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv