ஈரான் ஏவுகணை சோதனையை நடத்த கூடாது என்றும் மீறி நடத்தினால் அணு ஆயுத ஒப்பந்தத்தினை மீறியதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்தது.
எனினும் இந்த எச்சரிக்கையை மீறி ஈரான் நாடு நேற்று நடுத்தர தொலைவிலுள்ள இலக்கை அடையும் புதிய ரக கோரம்சாஹர் என்ற ஏவுகணையை பரிசோதனை செய்துள்ளது.
இதுபற்றிய படக்காட்சி ஒன்றை அந்நாட்டின் அரசு தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. ஏவுகணை பறந்து சென்றபொழுது எடுக்கப்பட்ட படக்காட்சியும் வெளியிடப்பட்டு உள்ளது.
இந்த பரிசோதனை நடந்த நாள் பற்றிய தகவலை தொலைக்காட்சியில் ஒளிபரப்பியவர்கள் வெளியிடவில்லை. ஆனால் ஈரான் அதிகாரிகள் நேற்று கூறும்பொழுது, இந்த பரிசோதனை விரைவில் நடைபெறும் என தெரிவித்திருந்தனர்.