Tuesday , August 26 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / சகல தமிழ் அரசியல் கைதிகளும் இன்று அடையாள உண்ணாவிரதம்!

சகல தமிழ் அரசியல் கைதிகளும் இன்று அடையாள உண்ணாவிரதம்!

அநுராதபுரம் சிறைச்சாலையில் மூன்று தமிழ் அரசியல் கைதிகள் முன்னெடுத்துள்ள உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவாக நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் உள்ள சகல தமிழ் அரசியல் கைதிகளும் இன்று அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

வவுனியா நீதிமன்றில் கடந்த 4 வருடங்களாக நடைபெற்ற வழக்கை அநுராதபுரம் சிறப்பு நீதிமன்றத்துக்கு இடமாற்றியதை எதிர்த்து மூன்று தமிழ் அரசியல் கைதிகள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை ஆரம்பித்த போராட்டம் இன்று 8ஆவது நாளாகவும் தொடர்கின்றது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுள் மதியரசன் சுலக்ஷன் மற்றும் இராசதுரை திருவருள் ஆகிய இருவரினதும் நிலை மோசமடைந்துள்ளது. இருவரும் அநுராதபுரம் சிறைச்சாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே சிங்கள மரணதண்டனை கைதிகள் பகுதிக்கு மாற்றஞ்செய்யப்பட்டிருந்த மற்றைய தமிழ் அரசியல் கைதியான கணேசன் தர்சன் மீண்டும் தமிழ் அரசியல் கைதிகள் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv