காவிரி விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க தி.மு.க சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடஙகியது.
உச்ச நீதிமன்றம் கெடு விதித்தும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை. மேலும், 3 மாத கால அவகாசம் கேட்டு இன்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அதேநேரம், தமிழக அரசு, மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்த விவகாரம் தமிழகமெங்கும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூகவலைத்தளங்களில் பலரும் மத்திய அரசு மற்றும் எடப்படி தலைமையிலான அதிமுக அரசுக்கும் எதிராக கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தியும், அடுத்த கட்ட போராட்டம் குறித்து விவாதிக்கவும், தி.மு.க சார்பில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடப்பட்டது.
இதையடுத்து இன்று காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் காவிரி மேலாண்மை வாரியம் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இக்கூட்டத்திற்கு வைகோ, திருமாவளவன், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் வருகை தந்துள்ளனர்.