Thursday , October 16 2025
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / தி.மு.க விற்குள் மீண்டும் வருவாரா அழகிரி – தமிழ்நாட்டில் பரபரப்பு

தி.மு.க விற்குள் மீண்டும் வருவாரா அழகிரி – தமிழ்நாட்டில் பரபரப்பு

தி.மு.க.வின் தென்மண்டல அமைப்புச் செயலாளராகப் பதவி வகித்த மறைந்த கலைஞர் திரு.மு.கருணாநிதி அவர்களின் புதல்வர் மு.க.அழகிரிகடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் திகதி கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.

கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டு தென்மண்டல அமைப்புச் செயலாளர் பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் அவர் நிரந்தரமாக நீக்கப்பட்டதாக அப்போது அறிவிக்கப்பட்டது.

கடந்த ஓகஸ்ட் 07 இல் கருணாநிதி மறைவின் பின்னர் கட்சித் தலைமைத்துவம் மற்றும் கட்சி நிர்வாகிகளை நியமித்தல், கட்சியைப் புனரமைத்தல் தொடர்பான கூட்டம் எதிர்வரும் ஓகஸ்ட் 14 இல் நடைபெறவுள்ளது. இதில் திரு.மு.க.அழகிரி மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார் என அவரது தொண்டர்கள் எதிர்பார்க்கின்றார்கள்.

ஜெயலலிதாவின் மறைவின் பின்னர் அ.தி.மு.க வில் ஏற்பட்ட பிளவு போல தி.மு.க விலும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் கட்சியினர் உறுதியாக உள்ளதாக தெரிகின்றது. இது தொடர்பாக அழகிரியுடன் நடத்தப்பட்ட பேச்சில் அவர் கட்சித் தலைமைப் பதவியை விட மாநில அளவிலான பெறுப்புள்ள பதவி ஒன்றை எதிர்பார்ப்பதாக குறிப்பிடுகின்றனர்.

மேலும் அழகிரி அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்காமல் கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபட வேண்டும் என்பதுவும் அதற்காக அவருக்குரிய பதவியினை வழங்க வேண்டும் என்பதுவும் கருணாநிதி குடும்பத்தினரின் விருப்பமாகவும் உள்ளதாக தெரிகின்றது.

இந் நிலையில் வரும் ஓகஸ்ட் 14 ஆம் திகதியை எதிர்பார்த்து நம்பிக்கையோடு காத்திருப்பதாக கட்சின் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv